மாயமில்லே... மந்திரமில்லே... 7

எடுக்க எடுக்க குறையாது!

பார்வையாளர்களை நமது உடல்மொழி மற்றும் பேச்சுத் திறமையால் கவர்ந்து, நமது தந்திரங்களை மந்திரங்களாக உணரச்செய்வதுதான் மேஜிக்.  அப்படி ஒரு ஜாலி மேஜிக்கை செய்யலாம் வாங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• ஒரு கண்ணாடி டம்ளரில் 10 ஸ்ட்ராக்களைப் போட்டு மேஜை மீது வையுங்கள். ‘‘எடுக்க எடுக்க குறையாத மந்திர ஸ்ட்ராக்கள் என்கிட்டே இருக்கு. அதை டெஸ்ட் பண்ணிப் பார்க்கலாம். ரெண்டு பேர் பக்கத்துல வாங்க’’ என்று அழையுங்கள்.

மாயமில்லே... மந்திரமில்லே... 7

• வந்து நின்றவர்கள் முன்பாக, 10 ஸ்ட்ராக்களையும் எடுத்து... ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணிக் காண்பியுங்கள்.
 

மாயமில்லே... மந்திரமில்லே... 7

• பிறகு, அவற்றை உங்கள் கைப்பிடியில் வைத்துக்கொண்டு, ‘‘பார்த்தீங்கதானே... என் கையில் 10 ஸ்ட்ராக்கள் இருக்கு. இதில் இருந்து மூன்று ஸ்ட்ராக்களை தனியாக எடுத்துவைத்தால், மிச்சம் எத்தனை இருக்கும்?’’ என்று கேளுங்கள்.

மாயமில்லே... மந்திரமில்லே... 7

• ‘‘ஏழு’’ என்பார்கள். ‘‘அப்படியா...பார்க்கலாமா?’’ என்றவாறு மேஜிக்கை ஆரம்பியுங்கள்.

மாயமில்லே... மந்திரமில்லே... 7

• உங்கள் கைப்பிடியில் இருக்கும் ஸ்ட்ராக்களில் மூன்றை உருவி, கண்ணாடி டம்ளரில் போடுங்கள்.

• ‘‘மூன்றை தனியாக வெச்சுட்டேன். மிச்சத்தை எண்ணிப் பார்க்கலாம்’’ என்றவாறு... ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணிக் காண்பியுங்கள்.

மாயமில்லே... மந்திரமில்லே... 7

• அட... மறுபடியும் 10 இருக்கும். எப்படி இப்படி?

மாயமில்லே... மந்திரமில்லே... 7

• ரகசியம் இதுதான். உங்களிடம் இருக்கும் ஸ்ட்ராக்களில் மூன்றை, நீளவாக்கில் கத்தரித்து பிளந்து, அதற்குள் தலா ஒரு ஸ்ட்ராவை நுழைத்துவிடுங்கள். அதன் நுனிப் பகுதி மட்டும் கொஞ்சம் வெளியே நீட்டிக்கொண்டிருக்க வேண்டும். கைப்பிடியில் இருந்து எடுக்கும்போது, அந்த நுனிப் பகுதியைப் பிடித்து இழுத்து எடுக்க வேண்டும். அந்த ஸ்ட்ராக்கள் வந்ததும், பிளவுபட்ட ஸ்ட்ராக்களோடு சேர்த்து, உங்கள் கையில் 10 ஸ்ட்ராக்கள் இருக்கும்.

• நண்பர்களையே எத்தனை தனியாக எடுத்துவைக்கலாம் எனக் கேட்டும் செய்யலாம். ஐந்து எனச் சொன்னால், மிச்சம் ஐந்துதான் இருக்க வேண்டும். ஆனால், உங்கள் கையில் அதிகமாக இருக்கும். இதுதான் மேஜிக் என வியக்கவைக்கலாம். 

படங்கள்: மீ.நிவேதன், மாடல்: பி.யாழ் அரசி, மேகராஜன், சென்னை மேல்நிலைப் பள்ளி, மடுவங்கரை, கிண்டி, சென்னை.

ம(த)ந்திர டிப்ஸ்...

• பிளவுபட்ட ஸ்ட்ராவுக்குள் வைக்கும் ஸ்ட்ராவும் அதே நிறத்தில்தான் இருக்க வேண்டும்.

• ஸ்ட்ராக்களை கையில் வைத்து எண்ணிக் காண்பிக்கும்போது, கவனமாக இருங்கள். பிளவுபட்ட ஸ்ட்ராக்களின் கத்தரித்த பகுதி தெரியாத வகையில் கையாள வேண்டும்.

• ஸ்ட்ராவை உருவி எடுக்கும்போது, பார்வையாளர்களைப் பார்த்தவாறு கலகலப்பாக பேச்சுக் கொடுத்தவாறே இயல்பாக எடுக்க வேண்டும். பதற்றப்பட்டாலோ, கவனம் முழுவதையும் ஸ்ட்ரா மீது வைத்திருந்தாலோ, மற்றவர்களும் உற்றுக் கவனிப்பார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism