FA பக்கங்கள்
Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

சிம்பிள் சீக்ரெட்!

கொ
ய்யாப் பழம் உற்பத்தியில் உலக அளவில் முதல் இடத்தில் இருப்பது இந்தியாதான். எளிமையாகவும் விலை குறைவாகவும் கிடைக்கும் பழமாக இருந்தாலும், மற்ற பழங்களைவிட விட்டமின் ‘சி’ சத்து அதிகம் இருப்பது கொய்யாப் பழத்தில்தான். நமது உடலின்  குடல், மண்ணீரல், வயிறு போன்றவை மிகச்சிறப்பாக வேலை செய்ய தினம் ஒரு கொய்யா சாப்பிட்டலாம். பல் மற்றும் ஈறுக்கும் வலிமை கொடுக்கிறது.

சுட்டி ஸ்டார் நியூஸ்

குட்டிக் குதிரைகள்

சுட்டி ஸ்டார் நியூஸ்

ஸ்லாந்து என்றதும் நினைவுக்கு வரும் விஷயங்களில் ஒன்று, போனி (Pony) எனப்படும் சிறிய வகை குதிரைகள். சுமார் 140 செ.மீ உயரமும், 350 கிலோ எடையும் இருக்கும் இவை, நூற்றுக்கணக்கான வண்ணங்களில் இருக்கும்.  சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஐஸ்லாந்தில் குடியேறியவர்களால் கொண்டு வரப்பட்ட இந்தக் குதிரைகள், பந்தயங்களில் ஓடுவதைப் பார்ப்பதே மிக அழகாக இருக்கும்.

சுட்டி ஸ்டார் நியூஸ்

க்ளிக் முன்னோடிகள்!

சுட்டி ஸ்டார் நியூஸ்

ன்று குட்டிச் சுட்டிகளும் செல்ஃபி எடுக்கும் அளவுக்கு செல்போனுக்குள் உட்கார்ந்திருக்கும் கேமராவின் முன்னோடிகளாக இருவரை சொல்லலாம். ஒருவர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, லூயிஸ் டாக்குரே (Lois Dauguerre). ஓவிய கலைஞரான இவர், தான் வரைந்த ஓவியங்களை ஒளிப்படமாக மாற்ற கண்டுபிடித்த கருவி, ‘டாக்குரே கேமரா’ எனப்பட்டது. சில பல மாற்றாங்களின் படிநிலைக்குப் பிறகு, ஜார்ஜ் ஈஸ்ட்மேன் (George Eastman) என்பவர் நெகடிவ் எனப்படும் ஒளிப்படசுருள் மூலம் புகைப்படம் எடுக்கும் முறையைக் கண்டறிந்து, கொடக் (kodak) என்னும் நிறுவனத்தை 1888-ம் ஆண்டு தொடங்கினார். அதுதான் இன்றைய செல்ஃபி யுகத்துக்கு முன்னோடி.

சுட்டி ஸ்டார் நியூஸ்



வைரத்தின் கதை!

சுட்டி ஸ்டார் நியூஸ்

ண்மையில் வைரம் என்பது கார்பன் அணுக்களால் ஆன ஒரு கரிதான். பூமிக்குள் இருக்கும் தூய்மையான கார்பன், பெரும் அழுத்தத்தையும் வெப்பத்தையும் சந்திக்கும்போது, வைரமாக மாறுகிறது. கார்பன் அணுக்களில், பிணைப்புகள் குறுகிய இடைவெளியில் இருப்பதால், வைரத்துக்கு கடினத்தன்மை ஏற்படுகிறது. பல முகங்களாக வெட்டப்பட்ட வைரத்தில் ஒளி மோதும்போது, பலவாறாகப் பிரதிபலித்து வந்த திசையிலேயே வெளியேறுகிறது. அதைத்தான் வைரத்தின் ஜொலிப்பு என்கிறோம்.

சுட்டி ஸ்டார் நியூஸ்