மாயமில்லே... மந்திரமில்லே... - 8

போட்டோவாக மாறும் வெள்ளைத்தாள்!

லகலப்பான கவரும் பேச்சு, பதற்றம் இல்லாத நடவடிக்கை என்பதுதான் மேஜிக்கில் மிக முக்கியம். உங்கள் தந்திரத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் மந்திரம் அதுதான்.

* ஒரு பெரிய என்வலப் கவர் (Envelope Cover) எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நுழைக்கும் அளவுக்கு பெரிய வெள்ளைத்தாள் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றை, நண்பர்கள் முன்பு மேஜை மீது வைத்துவிட்டு, உங்கள் மேஜிக்கை ஆரம்பியுங்கள்.               

* ‘‘ஹாய் ஃப்ரெண்ட்ஸ், ஒரு வெள்ளை பேப்பரை உங்ககிட்டே கொடுத்தா என்ன செய்வீங்க? சிலர் டிராயிங் வரைவீங்க. சிலர் கதையோ, கவிதையோ எழுதுவீங்க. சிலர் ராக்கெட் செஞ்சு விடுவீங்க. ஆனால், என்கிட்டே இருக்கிறது மந்திர என்வலப் கவர். வெள்ளை பேப்பரை, போட்டோவா மாற்றும். பார்க்கறீங்களா?’’ எனச் சொல்லுங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாயமில்லே... மந்திரமில்லே... - 8
மாயமில்லே... மந்திரமில்லே... - 8

* என்வலப் கவரை ஊதித் திறந்து நண்பர்களுக்கு சில நொடிகள் காண்பித்துவிட்டு, வெள்ளைத்தாளை அதில் நுழைத்து மூடுங்கள். ‘‘வெள்ளை பேப்பர், போட்டோவாக மாறணும்னா ஒரு மந்திரம் இருக்கு. என்னோடு சேர்ந்து நீங்களும் சொல்லுங்க’ என நண்பர்கள் கவனத்தை உங்கள் முகத்துக்கு திருப்புங்கள்.

* ‘‘ஆப்ர கடபடா... ஹோகஸ் போகஸ்... ஸிம் ஷலாபின் ஃபூ’’ என இரண்டு, மூன்று முறை சொல்லி, என்வலப் கவருக்கு மேலாக கைகளால் காற்றில் சுற்றுங்கள்.

* கவரைத் திறந்து, மெதுவாக கையை உள்ளே நுழைத்து எடுங்கள். வாவ்... உங்கள் கையில் வெள்ளைத்தாளுக்குப் பதிலாக, ஒரு புத்தகத்தின் அட்டைப்படமோ, புகைப்படமோ இருக்கும். எப்படி இப்படி?

மாயமில்லே... மந்திரமில்லே... - 8
மாயமில்லே... மந்திரமில்லே... - 8

* சுலபமான தந்திரம்தான் இது. நண்பர்களிடம் காண்பிக்கும் என்வலப் கவரை போலவே இன்னொரு கவரை எடுத்து, அதன் பாதியை கத்தரியுங்கள். அந்தப் பாதியை இந்த கவருக்குள் நுழைத்து, இரண்டு அறைகளாகப் பிரித்துவிடுங்கள். ஒரு பக்கத்தில் போட்டோவை வைத்துவிடுங்கள். நண்பர்களுக்கு எதிரே வெள்ளைத்தாளை நுழைக்கும்போது இந்தப் பக்கமும், எடுக்கும்போது அந்தப் பக்கத்தில் இருந்து போட்டோவையும் எடுங்கள். அவ்வளவுதான்.             

படங்கள்: மீ.நிவேதன்
மாடல்: பூவராகவன், கவியரசி
சென்னை மேல்நிலைப் பள்ளி,
மடுவங்கரை, கிண்டி, சென்னை.    

ம(த)ந்திர டிப்ஸ்...

* என்வலப் கவரை நண்பர்களுக்குத் திறந்து காண்பிக்கும்போது கவனமாக இருங்கள். உங்கள் கையை நுழைத்து, உள்ளே இருக்கும் கவரை ஒரு பக்கமாக அழுத்திக்கொள்ளுங்கள். அதனோடு சேர்ந்து, போட்டோவும் மறைந்துகொள்ளும்.

* என்வலப் கவருக்குள், நுழைக்கும் வெள்ளைத்தாளும் நீங்கள் வெளியே எடுத்து காண்பிக்கப்போகும் போட்டோவும் ஒரே அளவாக இருக்கட்டும்.

*  வெள்ளைத்தாளை நுழைத்தது ஒரு பக்கம், போட்டோவை எடுப்பது வேறு பக்கம் என்பதை உங்கள் நண்பர்கள் கவனித்துவிட கூடாது. அதற்குதான், அவர்களின் கவனம் முழுக்க உங்கள் பேச்சில் இருக்குமாறு மந்திரம் சொல்வது, கலகலப்பாக பேசுவது.

* பதற்றம் இல்லாமல், உங்கள் கவனம் முழுவதையும் என்வலப் கவர் மீதே வைக்காமல் இயல்பாக செய்யுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism