Published:Updated:

நீங்களும் ஆகலாம் உசேன் போல்ட்!

நீங்களும் ஆகலாம் உசேன் போல்ட்!
பிரீமியம் ஸ்டோரி
நீங்களும் ஆகலாம் உசேன் போல்ட்!

அசரவைக்கும் #VikatanHackathon 2016

நீங்களும் ஆகலாம் உசேன் போல்ட்!

அசரவைக்கும் #VikatanHackathon 2016

Published:Updated:
நீங்களும் ஆகலாம் உசேன் போல்ட்!
பிரீமியம் ஸ்டோரி
நீங்களும் ஆகலாம் உசேன் போல்ட்!
நீங்களும் ஆகலாம் உசேன் போல்ட்!

“என் பேரு பிரேம். இப்போதைக்கு என்னோட லட்சியம், எங்க வீட்டு ஜிம்மியை ஓட்டப்பந்தயத்துல தோற்கடிக்கணும்” என்று வித்தியாசமான அறிமுகம் தந்தார் 6-ம் வகுப்பு படிக்கும் பிரேம்.

“பள்ளிக்கூடத்தில் நடக்கும் விளையாட்டுப் போட்டியில் எப்பவுமே நான்தான் முதல் இடம் பிடிப்பேன். ஓட்டப்பந்தயம் ஒன்றில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு அண்ணாவையே ஜெயிச்சேன். ஆனால், எங்க செல்ல நாய் ஜிம்மி, என்னைவிட வேகமா ஓடுது. எல்லாத்திலும் ‘நம்பர் ஒன்’னா இருக்கிற நான், ஜிம்மிகிட்ட தோத்துட்டேன்.  அதான் ஜிம்மியை ஜெயிச்சே ஆகணும்’’ என்று வேடிக்கையாக பதில் சொன்னார் பிரேம்.

சரி, இந்த லட்சியத்தை அடைய வாழ்த்துகள். பிரேமின் வாழ்நாள் லட்சியம் என்ன?
‘‘உசேன் போல்ட் சாதனையை முறியடிகிறது. ஆனால், ஒலிம்பிக்கில் ஜெயிக்க கடுமையான பயிற்சி வேணும். நல்ல கோச் வேணும். நல்ல ஷூ, எனர்ஜி டிரிங்க் இப்படி எக்கச்சக்கமான தேவைகள். இதுக்கெல்லாம் அப்பாகிட்டே பணம் இல்லைன்னு சொல்லிட்டாரு. அதனால, எந்தப் பயிற்சியும் எடுக்க முடியலை” என வருந்தியவர்,  ஜிம்மியோடு மட்டும் போட்டிபோடுகிறார்.

இப்படி பிரேமை போல லட்சியத்தை சுமந்துக்கொண்டிருக்கும் சுட்டீஸா நீங்கள்? உங்களுக்காகவே ‘கோ சாம்ப்’ (GO Champ) என்ற ஐடியாவை உருவாக்கி இருக்கிறார்கள் ஹைதராபாத்தைச் சேர்ந்த டெக்கீஸ்.

“இந்தியாவில் ஏகப்பட்ட விளையாட்டுத் திறன் வாய்ந்த மாணவர்கள், தங்கள் திறனை வெளிப்படுத்த சரியான வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு வழிகாட்டுவதுதான் ‘கோ சாம்ப்’ உருவாக்கியதன் நோக்கம்.
 விளையாட்டில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவர்களுக்கான ஒரு மேடை. மாணவர்களை, ஸ்பான்சர்கள் மற்றும் சிறந்த பயிற்சியாளர்களுடன் இணைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவோம்” என்கிறார் இந்த ஐடியாவை விகடன்  ஹேக்கத்தானில் முன்வைத்த நக்கேஷ்.

கோ சாம்ப் எப்படி செயல்படும்?


இதைப் புரிந்துகொள்ள பிரேம் சொன்னதையே  உதாரணமாக எடுத்துக்கொள்வோம். தனது பள்ளியில்  சிறந்த விளையாட்டு வீரராக இருக்கிறார் பிரேம். தன் திறமையை மேம்படுத்திக்கொள்ள உதவி தேவைப்படுகிறது. பள்ளியின் தலைமை ஆசிரியர் GO Champ ஆப் மூலம் பிரேமைப் பற்றிய தகவல்களை பதிவேற்றுவார். பயிற்சிகள்,  விளையாட்டு உபகரணங்கள், சத்தான உணவுகள் போன்றவற்றுக்கு ஆகும் செலவு போன்ற தகவல்கள் அதில் இடம்பெறும். பிரேமின் ஓட்டப்பந்தயத் திறனை, வீடியோவாகவும் இதில் பதிவேற்றலாம்.

பிரேம் பற்றிய தகவல், ஸ்பான்சர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஆப் வழியாக சென்று சேரும். பிரேமின் திறமையைப் பார்த்து ஸ்பான்சர் நிறுவனம் உதவ முன்வரும். பயிற்சியாளர்களும் கிடைப்பார்கள். இப்போது, பிரேமின் பயிற்சிக்கான முட்டுக்கட்டைகள் தகர்ந்துவிட்டன. பிறகு என்ன? கூடிய விரைவில் ஒலிம்பிக் ட்ராக்கில், உசேன் போல்ட் சாதனையை முறிடிக்கும் ஓட்டத்தில் பிரேம் இருப்பார்.

நீங்களும் ஆகலாம் உசேன் போல்ட்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பிறகுதான் மாரியப்பன் என்று ஒருவர் இருப்பதே நமக்குத் தெரியும். மாரியப்பன் போராடி வென்றுவிட்டார். அவரைப் போல ஆயிரக்கணக்கான பேர் போராடிக்கொண்டிருக்கிறார்கள். சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பின்தங்கி இருப்பதற்கு பள்ளிப் பருவத்தில் மாணவர்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காததும் முக்கிய காரணம். எனவே, பள்ளி மாணவர்களை மையப்படுத்தி ‘கோ சாம்ப்’ ஐடியாவை வடிவமைத்தோம். விகடன் ஹேக்கத்தானில் கோ சாம்ப் பற்றி விளக்க வாய்ப்பு கிடைத்தது. பல துறை வல்லுநர்களும் தொழிலதிபர்களும் பாராட்டி ஊக்கப்படுத்தினர். ப்ரோடோடைப்பாக (மாதிரி) உள்ள கோ சாம்ப்புக்கு முழு வடிவம் கொடுக்க உத்வேகம் கிடைத்தது. தீவிரமாக உழைத்து வருகிறோம். கூடிய விரைவில் கோ சாம்ப்பை செயல்படுத்துவோம்’’ என்கிறார்கள் இதை உருவாக்கி வரும் நால்வர் அணியில் இருக்கும் நக்கேஷ், ஹுசேன், வேதா, பிரத்யூஷா.
 
நாளைய வெற்றியாளர்களை உருவாக்க உழைக்கும்  இவர்களுக்கு நம் வாழ்த்துகளை சொல்வோம் சுட்டீஸ்!                    

விகடன் டீம் , படங்கள்: தி.குமரகுருபரன்

விகடன் ஹேக்கத்தான்

சமூகப் பிரச்னைகளுக்கு, தொழில்நுட்பத்தை முன்வைத்து தீர்வுகளைத் தேடும் இளைஞர்களை ஒன்று திரட்டிய நிகழ்வு, ‘விகடன் ஹேக்கத்தான்’. இதற்கு, இந்தியா முழுவதில் இருந்தும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விண்ணப்பத்திருந்தனர். 380 ஐடியாக்களில் இறுதி கட்டத்துக்கு 40 ஐடியாக்கள் தேர்வாகி,  140 பங்கேற்பாளர்கள் அழைக்கப்பட்டனர். செப்டம்பர் 23-ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் சென்னை, தரமணியில் உள்ள ThoughtWorks என்ற மென்பொருள் நிறுவனத்தில் நடந்தது. அனுபவம் வாய்ந்த முன்னணி தொழிலதிபர்கள், பங்கேற்பாளர்களின் ஐடியாக்களை அடுத்த கட்டத்துக்குச் எடுத்துசெல்லும் வழிகாட்டலை தந்தனர். இவை அனைத்தும் ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்களாக உருவாவதற்கான ஐடியாக்கள். இதில் பங்கேற்ற ஓர் அணிதான், கோ சாம்ப்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism