Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

Published:Updated:
சுட்டி ஸ்டார் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

சார்ஜிங் பங்க்

ங்கிலாந்து நாட்டில் பேட்டரி கார்களுக்கான சார்ஜிங் மையங்கள் (Charging Bunks) நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டின் முதல்  காலாண்டில் மட்டும் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவாகி உள்ளதாம். 2020-ம் ஆண்டுக்குள்  இங்கிலாந்து முழுவதும் சுமார் 8,000 சார்ஜிங் மையங்கள் இருக்கும் என்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

டால்பின் சுவாசம்!

டால்பின்கள் தலையில் ஒரு துளை இருக்கும். அந்த துளைக்கு ஆங்கிலத்தில் ப்ளோஹோல் (Blowhole) என்று பெயர். அந்த துளை மூலம்தான் டால்பின் சுவாசிக்கும் என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால், நியூசிலாந்தில் வாழும் ஹெக்டர்  டால்பின்கள் (Hector Dolphins) வாய் வழியாக சுவாசிப்பதை கண்டறிந்துள்ளனர். இந்த வகை டால்பின்களின் சுவாசத் துளையில் பிறவிக்குறைபாடு உள்ளதாம். எனவே, வாய் வழியாக சுவாசிக்கும் வகையில் இயற்கை இவற்றைப் பழக்கப்படுத்தி இருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

 பூனையும் நானும்

சுட்டி ஸ்டார் நியூஸ்!

ங்க வீட்டுப் பூனை
எனக்கு ரொம்பப் பிடிக்கும்
தங்க நிறத்தில் மேனி
தகதகன்னு ஜொலிக்கும்

காலைச் சுற்றி வந்திடும்
கவனம் ஈர்க்க கத்திடும்
பாலை ஊற்றி வைத்தால்
பருகி மகிழ்வில் சென்றிடும்

அன்பு என்கிற பெயரிலே
அடைத்து வைக்க கூடாது
சின்ன உயிர் என்றாலும்
சுதந்திரம் மிகவும் முக்கியம்

அம்மா சொன்ன அறிவுரை
அதனை நானும் மதிக்கிறேன்
சும்மா பூனையை கொஞ்சாமல்
சுற்றித் திரிய விடுகிறேன்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

தட்டு... கைதட்டு!

கைதட்டுவது என்பது பிறரை பாராட்ட மட்டுமல்ல. அது, நம் ஆரோக்கியத்துக்கும் பல வகைகளில் உதவுகிறது, நோய்களைத் தடுக்கும் ஆற்றல் பெற்றது என்கிறார்கள்.

* நாம் கைதட்டும்போது, உள்ளங்கையில் உள்ள நரம்புகள் தூண்டப்பட்டு, ஞாபகசக்தியை மேம்படுத்துகின்றன.

* கைதட்டும்போது நம் உள்ளங்கையில் உள்ள அக்குபிரஷர் புள்ளிகள் செயல்பட்டு, உடல்நலத்தை பாதுகாக்கின்றன.

* அஜீரணக்கோளாறு, உயர் ரத்த அழுத்தம், இதயம் மற்றும் சுவாசக் கோளாறுகள் போன்ற நோய்களைத் தடுக்கும் ஆற்றல்  கைதட்டலுக்கு உண்டு.

* தினமும் கைதட்டல் பயிற்சி செய்வதால், விரல்கள் வலுப்பெறும். எழுதுவது, கை வேலைகள் செய்வதும் எளிமையாக இருக்கும்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

பிளாட்டிபஸ் தெரியுமா?

பிளாட்டிபஸ் என்பது முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து, பால் கொடுக்கும்  விலங்கு. வாத்து போன்ற வாய் அமைப்பு உடைய இது, 30 செ.மீ முதல் 40 செ.மீ வரை வளரக்கூடியது. 1 முதல் 3 கிலோ எடை இருக்கும். ஆற்றங்கரையில் மிக நீண்ட வளையை உருவாக்கி வசிக்கும். ஆஸ்திரேலியா மற்றும் தாஸ்மானியா நாடுகளின் உள்ள இந்த விலங்கும் சுற்றுச்சூழல் மாற்றத்தால் அழிந்துவரும் நிலையில் உள்ளது.

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

தண்ணீரில் செல்லும் விமானம்!

காட்டுத் தீயை அணைப்பதற்காக பயன்படுத்தும் விமானத்தை, Amphibious aircraft என்பார்கள். பறக்கும் படகு (Flying boat) என்றும் சொல்வார்கள். தரையிலும் தண்ணீரிலும் செல்லும் திறன் பெற்றுள்ள இந்த வகை விமானம், தண்ணீரில் இறங்கும்போது அதன் அடிப்பகுதியில் உள்ள கொள்கலனில் தண்ணீர் நிரப்பிக்கொள்ளும். வானில் பறந்துசென்று தேவையான இடங்களில் தெளிக்கும். எதையுமே பிரமாண்டமாக செய்யும் சீனா, இந்த விஷயத்தில் மட்டும் சும்மா இருக்குமா?

சீனாவின் சுகாய் நகரில் உள்ள விமானப் போக்குவரத்து துறை, உலகின் மிகப்பெரிய பறக்கும் படகை தயாரித்து வருகிறது. இதன் நீளம் 36.9 மீட்டர். ஒரே நேரத்தில் 12 டன் நீரை சேகரித்துக்கொண்டு, மணிக்கு 570 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 50 பணியாளர்களும் இதில் செல்லலாம். இந்த ஆண்டு இறுதியில் முழுமையான செயல்பாட்டுக்கு வரும் என்கிறார்கள். இந்த விமானம் மூலம் பெரிய அளவில் ஏற்படும் காட்டுத் தீயையும் மிக வேகமாக அணைக்க முடியும்.