வாஸ்கோ ட காமா, கொலம்பஸ், மெக்கலன் என்று நமக்குத் தெரிந்த கடல் பயணிகள் குறைவானவர்களே. தெரியாத பயணிகள் மிக மிக அதிகம். வெவ்வேறு கனவுகள், திட்டங்களுடன் சென்றவர்களில் வெற்றிகரமாக திரும்பியவர்கள் சிலரே. பாதியிலேயே திட்டத்தைக் கைவிட்டு திரும்பியவர்கள், கொள்ளையர்களால் பலியானவர்கள், உணவின்றி இறந்தவர்கள், என்ன ஆனார்கள் என்றே தெரியாமல் போனவர்கள் பலர்.

1400 முதல் 1700-ம் ஆண்டு வரையிலான ஐரோப்பிய வரலாற்றை, கண்டுபிடிப்புகளின் காலகட்டம் என்கிறார்கள். உலகம் என்பது ஐரோப்பா மட்டுமே அல்ல என்பதை ஐரோப்பியர்கள் புரிந்துகொண்டது அப்போதுதான். அதுவரை வாய் வழிக் கதைகளாக இருந்த பல இடங்களை, கடல் பயணிகள் நேரில் சென்று பார்த்தனர். ஆசியாவின் அழகும் அங்கு கிடைத்த வாசனைப் பொருள்களும், மதிப்புமிக்க ஆபரண கற்களும் அவர்களை ஈர்த்தன. ஆப்பிரிக்காவின் கம்பீரமான அழகும் இயற்கை வளமும் ஆசையைத் தூண்டின.

அமெரிக்காவை ஒரு புதிய உலகமாக கண்டார்கள். அங்கு வசித்த பழங்குடி மக்களின் வாழ்க்கையும் கலாசாரமும் மயக்கின. புதிய நிலங்களின் அறிமுகம், புதிய கலாசாரத்தையும் புதிய வாழ்க்கை முறையையும் கடல் பயணிகள் வழியே உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தியது.புதிய காய்கறிகள், பழங்கள், மரங்கள், விலங்குகள் அறிமுகம் ஆயின. வணிகத்துக்கான புதிய வழித்தடங்களை உருவாக்க முடிந்தது.

கடல் பயணங்கள் எல்லாமே அடிப்படையில் வணிக நோக்கம் கொண்டவைதாம். புதிய இடங்களைக் கண்டுபிடிப்பது மட்டுமே பயணிகளின் நோக்கம் அல்ல. கண்டுபிடித்த இடத்தை ஆக்கிரமித்தார்கள். ‘புதிய இடம் கண்டுபிடிக்கப்பட்டதா? உடனடியாக அந்த இடத்தில் நம் நாட்டு கொடியை நட்டு வை’ என்றே மன்னர்கள் உத்தரவிட்டார்கள்.

வரலாற்றில் பல அடிப்படையான மாற்றங்களைக் கடல் பயணங்கள் ஏற்படுத்தின. வாஸ்கோ ட காமாவை அனுப்பிவைத்த நாடு போர்ச்சுகல். அவர் வந்தடைந்தது இந்தியாவுக்கு. இந்த இரு நாடுகளிலுமே அவருடைய பயணங்கள் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தின. அதேபோல, ஸ்பெயின் நாட்டின் உதவியால் அமெரிக்கா வந்தடைந்தார் கொலம்பஸ். ஸ்பெயின், அமெரிக்கா இரண்டையும் இந்தப் பயணம் மாற்றியது. இந்த மாற்றங்களில், நல்லவை மற்றும் கெட்டவை இரண்டும் சேர்ந்தே இருந்தன. இந்தியாவை ஆக்கிரமித்ததன் மூலம் போர்ச்சுகலுக்கு பல நன்மைகள் விளைந்தன. இந்தியாவோ, தன்னுடைய வளங்களை இழந்தது. கொலம்பஸின் வரவால் அமெரிக்கப் பழங்குடிகள் பாதிக்கப்பட்டனர்.

தவறான சிந்தனைகள் ஆதிக்கம் செலுத்தின. ‘வலிமையானவர்கள், எளிமையானவர்களை வீழ்த்துவதும் வெற்றிகொள்வதும் சரியே’ என்னும் நம்பிக்கை வலுப்பெற்றது. கொலையும் கொள்ளையும் பெருகின. ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்குத் தொற்றுநோய்கள் சுலபமாகச் சென்று சேர்ந்தன. பெரிய நாடுகளுக்கு இடையில் போட்டியும் பொறாமையும் வளர்ந்தன. போர்கள் மூண்டன. காலனி ஆதிக்கம் தொடங்கியது.

அதேசமயம், அறிவியல் துறை வளர்ச்சி பெற்றது. கடல் பயணங்கள் மூலம் கப்பல் கட்டும் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தது. துல்லியமான காந்த வழிகாட்டி கண்டுபிடிக்கப்பட்டது. வரைபடம் உருவாக்கும் கலை வேகமாக வளர்ந்தது. வானியல் துறை வளர்ச்சி கண்டது. நட்சத்திரங்களைக்கொண்டு திசைகளையும், காற்றின் வேகத்தைக்கொண்டு வானிலையையும் தெரிந்துகொண்டனர்.

வணிகம் வளர்ந்து, கலாசாரப் பரிமாற்றம் நடந்தது. பலவிதமான மதங்களும் நம்பிக்கைகளும் இருக்கின்றன. நம்முடைய கலாசாரம் மட்டுமே உயர்ந்தது என்று நினைக்க முடியாது; மனிதர்கள் வெள்ளை நிறத்தில் மட்டும் இல்லை, பழுப்பு நிறத்திலும் கறுப்பு நிறத்திலும் இருக்கிறார்கள்... அவர்களும் சிந்திக்கிறார்கள் என்பதைப் புரியவைத்தது.

பல கண்டங்களாக உலகம் பிரிந்திருக்கிறது. பல மொழிகள் மக்களைப் பிரித்துள்ளன. பலவித மான பழக்கவழக்கங்களை அவர்கள் பின்பற்றுகிறார்கள். நிறம், மதம், கலாசாரத்தின் அடிப்படையில் மக்க ளைப் பாகுபடுத்திப் பார்க்கக் கூடாது. நாம் அனைவரும் ஒரே இனம்.

வெவ்வேறு நாடுகளையும் கண்டங்களையும் மக்களையும் கடல் ஒன்றிணைக்கிறது. இதை மனதில்வைத்து, கடல் பயணிகளின் வெற்றி, தோல்வி இரண்டில் இருந்தும் நாம் பாடம் படிக்கலாம். அவர்கள் தொட்ட உயரம், அடைந்த வீழ்ச்சி இரண்டும் நமக்குப் பாடமே!

மனித குல வரலாற்றிலேயே குறிப்பிடத்தக்க வகையில் ஓவியக் கலையும் சிற்பக்கலையும் புதிய எழுச்சியை அடைந்தன. தத்துவங்கள் வளர்ந்தன. கலையும் இலக்கியமும் பெரும் பாய்ச்சல்களை நிகழ்த்தின. கலிலியோ, ஷேக்ஸ்பியர், டாவின்சி, மைக்கல் ஏஞ்சலோ, கோப்பர்நிகஸ், மார்டின் லூதர் என பல முக்கிய மான ஆளுமைகள் இந்தக் காலகட்டத்தில் தோன்றினார்கள். இவர்களால் உலகைப் பற்றிய பார்வை விசாலமானது. ரசனை மேம்பட்டது. அறிவியல் கண்ணோட்டம் வளர்ச்சி பெற்றது. இவை அனைத்துக்கும் பின்னணியில், கடல் பயணங்கள் இருக்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக, உலகை மாற்றிய கடல் பயணிகள் நமக்குக் கற்றுத்தரும் மிக முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? பயணங்கள் ஒருபோதும் முடிவடைவது இல்லை. நம் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கிறது. அந்தக் கனவை நாம் துரத்த வேண்டும். அந்தக் கனவை எப்படியாவது நனவாக்க வேண்டும். நீண்ட பயணம் மேற்கொண்டால்தான் அந்தக் கனவு நனவாகும்.

பயணங்களுக்கான பாதைகள் காத்திருக்கின்றன. நீங்கள் தயாரா?

(முடிந்தது)

மருதன்

இந்தத் தொடரை எழுதிய மருதன், எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளர். ‘கிழக்குப் பதிப்பகம்’ ஆசிரியர். சிறுவர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இந்திய மற்றும் உலக அரசியல் நிகழ்வுகள், தலைவர்கள் குறித்து ஏராளமான நூல்களை எழுதி இருக்கிறார். பிரபல பத்திரிகைகள், நாளிதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார். குழந்தைகளுக்கும் சிறுகதைகள், தொடர்கதைகள் எழுதிவருகிறார். 'ஒரு பூ ஒரு பூதம்', 'எனக்கு ஆப்பிரிக்கா பிடிக்கும்', 'உலகைக் குலுக்கிய கதாபாத்திரங்கள்' போன்ற இவரது சிறுவர் புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன.

ஷண்முகவேல்

படித்தது, கும்பகோணம் ஓவியக் கல்லூரி. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், அனிமேஷன் துறையில் 13 ஆண்டுகளாக கான்செப்ட் மற்றும் மேட் பெயின்டிங் (matte painting) ஆர்ட்டிஸ்ட்டாக இருக்கிறார். தற்போது, ஜெயமோகனின் மஹாபாரத நாவலான 'வெண் முரசு' தொடருக்கு ஓவியம் வரைகிறார். கேம் ஆர்ட், விளம்பர ஓவியங்களிலும் பங்களித்து வருகிறார்.