Published:Updated:

கடலுக்கு வந்த குட்டி தேவதை! - ‘காஷ்மோரா’ ஸ்மிருதி

கடலுக்கு வந்த குட்டி தேவதை! - ‘காஷ்மோரா’ ஸ்மிருதி
பிரீமியம் ஸ்டோரி
கடலுக்கு வந்த குட்டி தேவதை! - ‘காஷ்மோரா’ ஸ்மிருதி

பா.விஜயலட்சுமி, படங்கள்: கே.சக்திவேல்

கடலுக்கு வந்த குட்டி தேவதை! - ‘காஷ்மோரா’ ஸ்மிருதி

பா.விஜயலட்சுமி, படங்கள்: கே.சக்திவேல்

Published:Updated:
கடலுக்கு வந்த குட்டி தேவதை! - ‘காஷ்மோரா’ ஸ்மிருதி
பிரீமியம் ஸ்டோரி
கடலுக்கு வந்த குட்டி தேவதை! - ‘காஷ்மோரா’ ஸ்மிருதி

‘‘எல்லாரும் என்னை குட்டி நயன்தாரானு சொல்றாங்க...நான் அப்டியா இருக்கேன்? நீங்க சொல்லுங்கக்கா’’ - ஓடி விளையாடிக்கொண்டே துறுதுறுவென பேசும் ‘காஷ்மோரா’ பாப்பா ஸ்மிருதி, சென்னை வித்யா மந்திர் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறார்.

கடலுக்கு வந்த குட்டி தேவதை! - ‘காஷ்மோரா’ ஸ்மிருதி

‘காரண காரியமின்றி இங்கு எதுவும் நடப்பதில்லை காஷ்மோரா’ என்று சீரியஸ் வசனம் பேசிய குழந்தையா இவர் என்று நம்மை அதிசயிக்க வைக்கிறார்.  பேச்சிலும் செயலிலும் அவ்ளோ குறும்பு. மடியில் உட்கார்ந்துகொண்டு அழகு காட்டியவர்... நடிப்பு, ஸ்கூல், நண்பர்கள் என்று பேச ஆரம்பித்தார்.

‘‘யாராவது கேள்வி கேட்டால், நான் அடிக்கடி மாத்தி, மாத்தி பதில் சொல்லிடுவேன். மம்மி, அத்தை எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க. ஒருநாள் இப்படிதான் ‘நீ என்ன ஸ்கூல் படிக்கறே?’னு ஒரு அக்கா கேட்டதுக்கு, ‘நாலாவது படிக்கறேன்’னு சொல்லிட்டேன்’’ - களுக்கென்று சிரிக்கிறார். கூடவே நடுவில் குட்டியாக தூக்கமும் வருகிறது.

‘‘ஆனா, ‘காஷ்மோரா’ ஷூட்டிங்ல மட்டும் எதுவும் மறக்கலை. ஃபர்ஸ்ட், ஃபர்ஸ்ட் ‘காஷ்மோரா’ படத்துக்கு சும்மா ஸ்க்ரீன் டெஸ்ட்னு அம்மா சொன்னாங்களா, நான் வேணாம்..வேணாம்னு சொன்னேன். ஆனா, இதெல்லாம் ஈஸிதான்னு அம்மா சொல்லவும் ஒத்துக்கிட்டேன். முதல் நாள் சும்மா வெளியிலதான் சுத்திட்டு வந்தோம். ரெண்டாவது நாள்தான் ஷூட்டிங் ஸ்டார்ட் ஆச்சு. காலைல 4 மணிக்கு ஆரம்பிச்சு நைட் 9 மணிக்குதான் ஷூட்டிங் முடிஞ்சுது தெரியுமா?’’ என்று தெளிவான வார்த்தைகளுடன் விவரிக்கிறார் ஸ்மிருதி.

கடலுக்கு வந்த குட்டி தேவதை! - ‘காஷ்மோரா’ ஸ்மிருதி

‘‘எங்கே ஷூட் பண்ணினாங்க?’’ என்று கேட்டால், ‘‘அம்மா, எங்கே எடுத்தாங்க?’’  என்றபடி அம்மாவைப் பார்த்தார். அடுத்த நொடியே... ‘‘எனக்கே ஞாபகம் வந்துருச்சு. அங்கர்வாட் டெம்பிள் இருக்குல... அங்கேதான் ஷூட் நடந்துச்சு’’ என்கிறார்.

‘‘கார்த்தி அங்கிளும் நயன்தாரா ஆன்ட்டியும் நடிச்சதுல, அங்கிள் நெருப்பில் இருந்து வர்றதும், ஆன்ட்டி கையில் தீபம் எடுத்துட்டு வர்றதும் ரொம்ப புடிக்கும்’’ என்றார்.

அவ்வளவு நேரம் சினிமா பற்றி பேசியவர், ‘‘என்னைப் பத்தி போதும். இப்போ, ஒரு சூப்பர் கதை சொல்லட்டா? இந்தக் கதையின் ஹீரோயின் நானேதான். காஷ்மோரா ஷூட்டிங் டைம்ல லைட்டா தூங்கிட்டேன். அப்போ, ஒரு கனவு வந்துச்சு. அதையே கதையா சொல்றேன்’’ என்று ஆரம்பித்தார்.

‘‘ஒரு நாள் கடற்கரையில அம்மா, அப்பாவோடு  நான் விளையாடிகிட்டு இருக்கேன். அப்போ, ஒரு பெரிய அலை! கரையில் உட்கார்ந்து இருந்த அம்மா, ‘ஸ்மிருதி... ஸ்மிருதி’னு கத்தறாங்க. அந்த அலை, அதையெல்லாம் காதுல போட்டுக்காம என்னை அடிச்சுகிட்டு போகுது. அப்போ நான், ‘அலை... அலை... ப்ளீஸ்... என்னை அம்மா, அப்பாகிட்ட விட்டுரு’னு அழறேன்.

கடலுக்கு வந்த குட்டி தேவதை! - ‘காஷ்மோரா’ ஸ்மிருதி

அதுக்கு அந்த அலை என்ன சொல்லுச்சு தெரியுமா? ‘நீ கடல் தேவதையோட குழந்தை. அவங்க உன்னைப் பார்க்காம ஏக்கத்திலேயே  உடம்பு முடியாம இருக்காங்க. நீ ரெண்டு நாள் அவங்களோடு டைம் ஸ்பெண்ட் பண்ணு. அதுக்கப்புறம் உன்னை இந்த அம்மா, அப்பாக்கிட்ட விட்டுடறேன்’னு பாவமா கேட்டுச்சு. எனக்கும் கஷ்டமா இருந்துச்சா? சரினு கூடவே போனேன்.

கடலுக்குள்ளே போனதும், கடல் தேவதை ஒரு பெரிய மீனை பெட் மாதிரி வெச்சு படுத்துட்டு இருந்ததைப் பார்த்தேன். பக்கத்தில் போய் அம்மானு கூப்பிட்டதும் துள்ளிக் குதிச்சு எழுந்து, ‘செல்லகுட்டி வந்துட்டியா?’னு என்னை கட்டிப் பிடிச்சு கொஞ்சினாங்க.

கடலுக்கு வந்த குட்டி தேவதை! - ‘காஷ்மோரா’ ஸ்மிருதி

‘உன்னை மாதிரியே எனக்கும் ஒரு குழந்தை இருந்தது. அவ ஒரு கடல்கன்னி. ஆனா, அவளை ஒரு கும்பல் புடிச்சுட்டு போய்ட்டாங்க. அதே மாதிரி உருவத்தோட கரையில் நீ பொறந்துருக்கே’னு அழுதுகிட்டே சொன்னாங்க.
நான் உடனே, ‘அம்மா அழாதீங்க. அவங்க மாதிரி நானும் உங்க பொண்ணுதான்’னு சொன்னேன். ஹாப்பியானவங்க, ‘இரு... உனக்கு நான் ருசியா சாப்பாடு ரெடி பண்றேன். நீ போய் கடல் ராஜ்ஜியத்தை சுத்திப் பாரு’னு சொன்னாங்க.
அவங்க சாப்பாடு ரெடி பண்ற வரைக்கும் கடலுக்குள்ளே ஜாலியா சுத்திப் பார்த்தேன். என்னை கூப்பிட்டுப் போன அலைக்கு, ‘வேவ் விராத்’னு பேர் வெச்சேன். பவளப்பாறைகள், கோல்டு ஃபிஷ், பச்சை, மஞ்சள்னு விதவிதமான கலரில் மீன்கள், ஆக்டோபஸ் எல்லாம் பார்த்தேன். டயர்டா இருந்த நான், ஒரு பாறை மேல உட்கார்ந்தேன். திடீர்னு என்னோட கால்கள், மீனுக்கு இருக்கிற மாதிரி வாலா மாறிடுச்சு. நானும் கடல்கன்னியா மாறிட்டது தெரிஞ்சது.  என்னால வீட்டுக்குப் போக முடியாதுனு பயந்துட்டேன். அப்போ, என்கிட்ட வந்த ஒரு கோல்டு ஃபிஷ், ‘நான் உன்னோட சித்தி. நீ எப்போ எல்லாம் கடல் தேவைதையைப் பார்க்க வர்றியோ அப்போலாம் கடல்கன்னியா மாறிடுவே. கரைக்குப் போனதும் சரியாயிடும் பயப்படாதே’னு சொன்னாங்க.

கடலுக்கு வந்த குட்டி தேவதை! - ‘காஷ்மோரா’ ஸ்மிருதி

அப்போதான் எனக்கு நிம்மதியா இருந்துச்சு. எல்லார் கூடயும் விளையாடிட்டு, கடலம்மா சமைச்சு குடுத்த சாப்பாட்டை சாப்பிட்டுட்டு கிளம்பிட்டேன். ‘வேவ் விராத்’ கரையில் கொண்டுவந்து விட்டதும்,  அம்மா, அப்பாவோடு சேர்ந்துட்டேன். பிடிச்சிருக்கா கதை’’ எனச் சிரிக்கிறார் க்யூட்டாக.

கடல்கன்னி

* கடல்கன்னி (Mermaid) என்பது, உலகின் பல புராணங்களில் குறிப்பிடப்படும் ஒரு கற்பனை கதாபாத்திரம். உடலின் மேற்பகுதி பெண்ணாகவும், கீழ்ப் பகுதி மீனின் வாலாகவும் இருக்கும்.

* நிஜத்திலும் கடல்கன்னியைப் பார்த்ததாக உலகம் முழுவதும் அடிக்கடி செய்திகள், கடல் அலையைப் போல கிளம்பும். கடல்கன்னி புகைப்படம், வீடியோ என வெளிவரும். அவை எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

* ஆண் மனித உடலின் மேல் பாதியும் மீனின் கீழ்ப் பாதியுமாக இருக்கும் மெர்மேன் (Mermen) உருவமும் புராணங்களில் உண்டு.

* 1001 இரவு அரேபியக் கதைகள் தொகுப்பில், கடலுக்குள் வாழும் மனிதர்கள் பற்றி கதைகள் மிகவும் சுவாரஸ்யமானவை.

* பழங்கால கிரேக்க நாணயங்களில் கடல்கன்னி உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கடலில் வாழ்ந்த பாடம் செய்யப்பட்ட சில உயிரினங்களின் படிமங்களை இப்போதும் உலகின் பல அருங்காட்சியங்களில் வைத்துள்ளார்கள். அவை, கடல்கன்னி மற்றும் மெர்மேன் என்று பலரும் நம்புகிறார்கள்.