Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

Published:Updated:
சுட்டி ஸ்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
சுட்டி ஸ்டார் நியூஸ்

ஓட்டலாம்... மடிக்கலாம்!

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

அ.ஜாவித் அஹ்மத்,
மீனாட்சி இராமசாமி மேல்நிலைப் பள்ளி,
தத்தனூர்.

எலெக்ட்ரிக் பைக் வடிவமைப்பில் உலக அளவில் பல நிறுவனங்களும் பலவிதமான முயற்சிகளில் உள்ளன. அந்த வகையில் ஒரே நிமிடத்தில் மடிக்கும் வகையிலான எலெக்ட்ரிக் பைக்கை, ஜி ஃப்ளை பைக் (Gi Fly Bike) என்கிற நிறுவனம் வடிவமைத்துள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 40 கிலோமீட்டர் வரை செல்லும்.     அதிகபட்சம் 25 கி.மீ வேகத்தில் செல்லும். ஜி.பி.எஸ் வசதிக்காக, ஸ்மார்ட்போனை இணைத்துக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. இதன் சக்கரங்கள், பஞ்சர் ஆகாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தானியங்கி பூட்டு, ரிமோட் மூலம் இயக்கும் வசதி போன்றவையும் உள்ளன.

மிதக்கும் அரங்கம்!

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

சு.உ.சவ்பாக்யதா,
அமிர்த வித்யாலயம்,
திருச்சி.

உலகின் மிகப்பெரிய மிதக்கும் அரங்கம், மெரீனா பே (Marina Bay). சிங்கப்பூரின் கடற்கரையை ஒட்டி, இந்த அரங்கத்தை அமைத்துள்ளார்கள். திரையரங்குகள், அருங்காட்சியகம், விளையாட்டு அரங்கம் என பிரமாண்டத்தின் உச்சமாக திகழ்கிறது. 59-வது மாடியில் இருக்கும் நீச்சல்குளம் பார்ப்போரை சொக்கவைக்கும்.

‘மின்னல்’ சாதனைகள்!

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

வி.சாரதி,
அரசு மேல்நிலைப் பள்ளி,
அளே தருமபுரி, தருமபுரி.

பூமியில் மின்னலின் உலகச் சாதனைகள் குறித்து ஜெனீவா உலக வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, 2012-ம் ஆண்டு ஆகஸ்ட்  30-ம் தேதி, பிரான்ஸின் தென்கிழக்குப் பகுதியை 7.74 விநாடிகள் தாக்கிய மின்னலே, உலக அளவில் அதிக நேரம் நீடித்த மின்னல் ஆகும்.

2007-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி, அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரத்தில் சுமார் 321 கிலோமீட்டர் தூரத்துக்குத் தாக்கிய மின்னல், மிக நீண்ட தூரத்துக்கு தாக்கிய மின்னலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டால்பின்

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

டால்பின் மீனுக்கு குரல்வளை கிடையாது. எனினும், 32 வெவ்வேறு ஒலிகளைக் காற்றை ஊதி வெளிப்படுத்துகிறது. சில இனங்களுக்கு 250 பற்கள் வரை முளைக்கும். டால்பின்கள் தங்கள் தலைக்கு மேல் உள்ள ஓர் உறிஞ்சும் துளை மூலம் மூச்சுவிடும். அதன் மூச்சுக் குழல், மூளைக்கு முன்புறமாக உள்ளது.

எந்திரன் அல்ல நண்பன்!

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

சு.அநிருத் ராகவேந்திரா
மகாத்மா காந்தி நூற்றாண்டுப் பள்ளி,
திருச்சி.

மூன்று அடி உயரம் உள்ள ரோபோ நண்பன், ஐ-பால் (iPal), உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளான். இந்த ரோபோவை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், ரோபோக்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தினர். சீனாவை சேர்ந்த ‘அவதார் மைண்ட்’ (Avatur Mind) என்ற நிறுவனம் உருவாக்கிய இந்த ரோபோ, குழந்தைக்கு ஏற்ற துணையாக இருக்குமாம். குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும். பாட்டு, நடனம், விளையாட்டுகளில் ஈடுபடும். குழந்தைகள் சோகமாக இருக்கும்போது, உற்சாகப்படுத்தும். அலுவலகத்தில் இருக்கும் பெற்றோருக்கு குழந்தையைப் பற்றி தகவல் அனுப்பும். வீடியோ சாட்டிங் வசதியும் உள்ள இந்த ரோபோ, அடுத்த ஆண்டு  விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.