Published:Updated:

கனவு ஆசிரியர் - பசுமையைப் போதிக்கும் தமிழாசிரியர்

கனவு ஆசிரியர் - பசுமையைப் போதிக்கும் தமிழாசிரியர்
பிரீமியம் ஸ்டோரி
கனவு ஆசிரியர் - பசுமையைப் போதிக்கும் தமிழாசிரியர்

மு.ராகினி ஆத்ம வெண்டி, படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

கனவு ஆசிரியர் - பசுமையைப் போதிக்கும் தமிழாசிரியர்

மு.ராகினி ஆத்ம வெண்டி, படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

Published:Updated:
கனவு ஆசிரியர் - பசுமையைப் போதிக்கும் தமிழாசிரியர்
பிரீமியம் ஸ்டோரி
கனவு ஆசிரியர் - பசுமையைப் போதிக்கும் தமிழாசிரியர்

‘‘எங்கள் பள்ளியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிராமத்தையும் பசுமையாக்கும் முயற்சியில் இருக்கோம். இதுக்கான மொத்த வழிகாட்டுதலுமாக இருப்பவர் எங்க தமிழாசிரியர் மகேந்திர பாபு ஐயா’’ என தங்கள் ஹீரோவை நமக்கு அறிமுகம் செய்து வைத்தனர் இளமனூர் பள்ளி மாணவர்கள்.

கனவு ஆசிரியர் - பசுமையைப் போதிக்கும் தமிழாசிரியர்

மதுரை மாவட்டம், இளமனூர் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியின் மைதானமும், விடுதி வளாகமும் பசுமையுடன் வரவேற்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கனவு ஆசிரியர் - பசுமையைப் போதிக்கும் தமிழாசிரியர்

‘‘2010-ம் ஆண்டு, ஆசிரியப் பணி கிடைத்து, இந்த இளமனூர் கிராமத்து அரசுப் பள்ளியில் விடுதிக் காப்பாளராக சேர்ந்தேன். விடுதி மாணவர்களின் ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாக்க மாணவர்களுடன் சேர்ந்து சில திட்டங்களை செயல்படுத்தினோம். முதலில், விடுதியில் நூலகம் உருவாக்கி, வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தினோம். பிளாஸ்டிக் குப்பையை அகற்றுதல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் என ஒவ்வொன்றையும் செயல்படுத்த தொடங்கினோம்’’ என எல்லாவற்றையும் பன்மையிலேயே பணிவுடன் சொல்கிறார், ஆசிரியர் மகேந்திர பாபு.

வறட்சியால் கிராமமே முடங்கிக் கிடக்கும் நிலையை மாற்ற, ‘பசுமைப் படை’ ஒன்றை உருவாக்கினார்.

‘‘மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பள்ளியில் இருந்து ஊருக்குள் செல்லும் சாலையின் ஓரங்களில் மரக்கன்றுகளை வைத்தோம். வீட்டிலில் இருந்து பள்ளிக்கு பாட்டிலில் தண்ணீர் கொண்டுவந்து, அவரவர் நட்ட மரத்துக்கு ஊற்றுவோம். தமிழ் ஐயாதான் இப்படி ஒரு திட்டத்தை சொன்னார். ஆரம்பத்துல கொஞ்சம் சலிப்பா இருந்துச்சு. ஆனா, நாங்க நட்ட செடிகள், வளர வளர ரொம்ப உற்சாகமா இருந்துச்சு’’ என்று பெருமிதத்துடன் சொல்கிறார் ஒரு மாணவி.

கனவு ஆசிரியர் - பசுமையைப் போதிக்கும் தமிழாசிரியர்

மாணவர்களின் இந்த முயற்சியைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் மகேந்திர பாபு, சுற்றுச்சூழல் சார்ந்த பாடல்களை எழுதி, மெட்டமைத்துப் பாடுகிறார்.  ஆர்வமுள்ள பல அரசுப் பள்ளி ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, ‘மரமும் மனிதமும்’ என்ற பாடல் குறுந்தகட்டை வெளியிட்டுள்ளார்.

‘‘இந்த சுற்றுவட்டாரத்தில் இருக்கும்  பல பள்ளிகளின் ஆண்டு விழாக்களில் அந்தப் பாடல்கள் ஒலிக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பாடல்களின் மூலம் ஒரு கருத்தை சொல்லும்போது, அது மாணவர்களின் மனதில் அழுத்தமாகப் பதியும். இந்த இளமனூர் மட்டுமின்றி, எல்லா ஊர்களும் பசுமையாக சிரிக்க வேண்டும்’’ என்கிறார் மகேந்திர பாபு.

தனது அர்ப்பணிப்பான முயற்சிக்காக, அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ்களும், பல்வேறு விருதுகளும் பெற்றுள்ளார். அடுத்த முயற்சியாக, ‘மண்ணே மரமே வணக்கம்’ என்ற பாடல் குறுந்தகட்டையும் மற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களுடன் இணைந்து உருவாக்கி வெளியிடப் போகிறார்.

 “ஒரு சின்ன வழிகாட்டுதல் இருந்தால் போதும்... பல தலைவர்கள் தோன்றுவார்கள். மாணவர்களும் அவர்களை வழிநடத்தும் ஆசிரியர்களும் ஒருங்கிணைந்தால் இந்த மாற்றத்தை நிச்சயம் உருவாக்க முடியும்” என நம்பிக்கை  புன்னகையுடன் சொல்கிறார் மகேந்திர பாபு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism