Published:Updated:

ஸ்கூல் ரவுண்ட்ஸ்!

ஸ்கூல் ரவுண்ட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்கூல் ரவுண்ட்ஸ்!

நெல்லை நாடார் மெட்ரிகுலேஷன் பள்ளி, கொட்டிவாக்கம், சென்னை.

ஸ்கூல் ரவுண்ட்ஸ்!

நெல்லை நாடார் மெட்ரிகுலேஷன் பள்ளி, கொட்டிவாக்கம், சென்னை.

Published:Updated:
ஸ்கூல் ரவுண்ட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்கூல் ரவுண்ட்ஸ்!
ஸ்கூல் ரவுண்ட்ஸ்!
ஸ்கூல் ரவுண்ட்ஸ்!

‘‘எங்க ஸ்கூலில் தினமும் கொண்டாட்டம்தான். ஸ்போர்ட்ஸ், டிராமா, புராஜெக்ட், ஆர்ட், கிராஃப்ட் என எந்த நேரமும் ஜாலியான பிஸியோடு இருப்போம்’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்கூல் ரவுண்ட்ஸ்!

சென்னை, கொட்டிவாக்கத்தில் இருக்கும் நெல்லை நாடார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் உற்சாகமாக வரவேற்கிறார்கள் சுட்டிகள்.

‘‘உங்களுக்கு ஒரு மணி நேர சவால். அதற்குள் உங்க தனித்திறமைகளை வெளிப்படுத்துங்க. எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. கதை, ஓவியம், ஜோக், கிராஃப்ட் என கலக்குங்க’’ என்று திடீர் அறிவிப்பை வெளியிட்டார் பள்ளி முதல்வர் ஜூலியஸ் சீசர்.

‘‘நாங்க ஃபேஸ் பெயின்ட்டிங்கில் எக்ஸ்பர்ட்’’ என துள்ளி வந்தார்கள் சந்தோஷ் மற்றும் பவேஷ்.

‘‘படிப்புடன் கற்பனைத்திறனுக்கும் சம பங்கு கொடுப்பதுதான் சரியான கல்வி. அதுதான் மாணவர்களின் முன்னேற்றத்தை சிறக்க செய்யும்’’ என்றார் இவர்களை ஒருங்கிணைத்த தமிழ் ஆசிரியர் நாகலட்சுமி.
ஒரு மணி நேர சவாலில் வித்தியாசமாக அசத்தியவர்களின் படைப்பு அணிவகுப்பு இங்கே... 

ஸ்கூல் ரவுண்ட்ஸ்!
ஸ்கூல் ரவுண்ட்ஸ்!

காகித சுவர் அலங்காரம்!

பழைய செய்திதாள்களைக் கத்தரித்து, வளையமாக சுற்றி, ஒன்றன் மீது ஒன்றாக ஒட்டினேன். இது, கொத்து விளக்கு போல இருந்தது.

பிறகு, டிகாக்‌ஷன் தண்ணீரில் பிரஷ்ஷினால் தொட்டு எடுத்து,  வளையங்களுக்கு வித்தியாசமான வண்ணம் தீட்டி காயவைத்தேன். வண்ணத்தாள்களில் சின்ன சின்ன மணிகள் போல சுருட்டி, வளையங்களில் ஒட்டினேன்.

இதை வாசலிலோ, சுவரிலோ தொங்கவிட்டால் அழகாக இருக்கும்!

 - பிரியதர்ஷினி  

கொஞ்சம் யோசிங்க ஃப்ரெண்ட்ஸ்!

சிவப்பு மாளிகை இடப் பக்கத்திலும், நீல மாளிகை வலப் பக்கத்திலும், கறுப்பு மாளிகை முன் பக்கத்திலும் இருந்தால், வெள்ளை மாளிகை எங்கே இருக்கும்?

விடை:

* வெள்ளை மாளிகை, வாஷிங்டனில் இருக்கும்.

 ஒரு ஆப்பிள் மரத்தில் 12 ஆப்பிள்கள் இருந்தன. அந்த வழியே 12 பேர் வந்தனர். தலா ஒரு பழம் பறிக்க, 11 ஆப்பிள்கள் மிச்சம்  இருந்தன. இது எப்படி?

விடை:

 * தலா’ என்பது ஒருவனின் பெயர். மற்ற 11 பேரும் பழத்தைப்  பறிக்கவில்லை.

 - எ.ப்ரவிஷா

ஸ்கூல் ரவுண்ட்ஸ்!

கற்க கசடற!

ஒரு குழந்தையைப் பாராட்டி வளர்த்தால், சுயமதிப்பைக் கற்றுக்கொள்ளும்.

குறை சொல்லி வளர்த்தால், வெறுப்பைக் கற்றுக்கொள்ளும்.

கேலி செய்து வளர்த்தால், கூச்சத்தைக் கற்றுக்கொள்ளும்.

நியாயம் சொல்லி வளர்த்தால், நேர்மையைக் கற்றுக்கொள்ளும்.

ஊக்குவித்து வளர்த்தால், வெற்றியைக் கற்றுக்கொள்ளும்.

அணைத்து வளர்த்தால், அனைவரையும் நேசிக்க கற்றுக்கொள்ளும்.

- ம.அப்ரோஸ் பீ

ஸ்கூல் ரவுண்ட்ஸ்!

பணச் சுத்தம்!

‘‘விக்னேஷ், 10 ரூபாய் இருந்தா கொடுடா!”

‘‘என்கிட்ட சுத்தமா  இல்லைடா!’’

‘‘பரவாயில்லே... அழுக்கா இருந்தாலும் கொடுடா!’’

 - ஆ.யாமினி

ஸ்கூல் ரவுண்ட்ஸ்!

துடிக்கும் இதயம்!

சார்ட் பேப்பரில் இதயத்தின் படம் வரைந்தேன். ஒரு பலூனின் தலைப்பகுதியை சார்ட்டின் பின்பக்கத்தில் ஒட்டினேன். ஊதும் பகுதியில் ஒரு ஸ்ட்ராவை இணைத்தேன். ஒரு சிறிய துளையிட்ட தெர்மாகோலில், சார்ட்டை ஒட்டி, பலூனை பின்பக்கமாக  எடுத்துக்கொண்டேன்.

ஸ்ட்ராவை ஊதினால், பலூன் வழியே காற்று சென்று இதயம் சுருங்கி விரிவதைக் காண்பிக்கும்.

 - வினோதினி   

நெஞ்சம் மறப்பதில்லை!

ஸ்கூல் ரவுண்ட்ஸ்!

 என் மாமாவின் கல்யாணத்துக்காக பெற்றோரிடம் புத்தாடை கேட்டேன். அவர்கள் மறுத்தபோது, வானமும் பூமியும் அதிர அழுதேன். அடுத்த நாள், அப்பாவின் மூக்குக் கண்ணாடியை மறைத்துவைத்துவிட்டேன். கண்ணாடி இல்லாமல் அப்பாவால் எதுவும் செய்ய முடியாது என்பதால் சோகமாகிவிட்டார். மறுநாள், ‘‘உனக்கு புது டிரெஸ் வாங்கறதுக்காக பணம் தேத்தி வெச்சு இருந்தேன். ஆனா, கண்ணாடி வாங்க வேண்டியதா இருக்கு’’ என்றார். இதைக் கேட்டதும், ‘ஐயோ! வட போச்சா!’ என மனதுக்குள் பதறியபடி, கண்ணாடியை எடுத்துகொடுத்து நடந்ததை சொன்னேன். அப்பா  மன்னித்துவிட்டார். நாம் தவறாக யோசித்தால், அது நமக்கே தீமையாக முடியும் என்பதை புரிந்துகொண்டேன்.

 - ஜ.ரிப்கா

ஸ்கூல் ரவுண்ட்ஸ்!

 ஒருநாள் என் வகுப்பறையில் தமிழ் ஆசிரியர் என் தோழியை எழுப்பி, தமிழ்ப் பாடத்தில் இருந்து ஒரு வாக்கியத்தை படிக்கச் சொன்னார். கிளி அழகாகப் பேசும் என்பதை, ‘கிளி அலகாக பேசும்’ என்று படித்தாள். ஆசிரியர் ‘சரியாக உச்சரி. அலகு அல்ல அழகு’’ என்றவர், ‘‘தமிழுக்கே சிறப்பு எழுத்தான ‘ழ’வை சரியாக உச்சரிக்க வேண்டும். சரி, சிறப்பு என்றால் என்ன?’’ என்று கேட்டார். உடனே ஒரு மாணவன் எழுந்து, ‘‘சிறப்பு என்றால் டானிக்’’ என்றான். அதைக் கேட்டவுடன் வகுப்பறை, சிரிப்பறையாக மாறியது.

 - சங்கரமணி

 

ஸ்கூல் ரவுண்ட்ஸ்!

தீபாவளி அன்று இறைச்சிக் கடைக்குச் சென்று அரை கிலோ இறைச்சி வாங்கினேன். கூட்டநெரிசல் காரணமாக, வேறொருவருக்கு கொடுக்க வேண்டியதை கடை ஊழியர் தவறாக என்னிடம் கொடுத்துவிட்டார். வீட்டுக்கு வந்த பிறகுதான் அது ஒரு கிலோவுக்கும் மேலே இருக்கும் எனத் தெரிந்தது. உடனே அந்தக் கடைக்கு சென்று விஷயத்தை சொன்னேன். அந்த ஊழியர் கண் கலங்கியபடி, ‘‘இது என்னோட ஒரு நாள் சம்பளம். இன்னைக்கு சம்பளத்தைக் கொடுக்க மாட்டேன்னு ஓனர் சொல்லிட்டு இருந்தார். ரொம்ப நன்றி பாப்பா’’ என்றார். அந்த தீபாவளி எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.

- ஸ்ரீசுப்புலட்சுமி