Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

Published:Updated:
சுட்டி ஸ்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

செய்தி சீக்ரெட்!

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர், நம்மை (கேமராவை) பார்த்தவாறே எப்படி மனப்பாடமாக செய்திகளை வாசிக்கிறார் என்று யோசித்து இருக்கிறீர்களா?

செய்தி வாசிப்பவர்களின் கண், கேமராவைப் பார்த்தவாறு இருக்கும். அங்கே, ஒரு கண்ணாடியும், படுக்கைவசமாக ஒரு மானிட்டரும் இருக்கும். கட்டுப்பாட்டு அறையில் இருந்து அந்த மானிட்டரில் வரும் செய்தி, கண்ணாடியில் பிரதிபலிக்கும். செய்தி வாசிப்பவர்கள் இதைப் படிப்பார். இந்த முறைக்கு பிராம்டர் (Prompter) என்று பெயர்.

சு.உ.சௌபாக்யதா,
அமிர்த வித்யாலயம், திருச்சி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுட்டி ஸ்டார் நியூஸ்

டிக் டிக் ஆரோக்கியம்!

 நம் உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் வகையில் கார்மின் (Garmin) என்ற நிறுவனம், Forerunner 220 மற்றும் 620 என்ற கைக்கடிகாரங்களை  அறிமுகம் செய்திருக்கிறது. இந்த கடிகாரத்தை அணிந்துகொண்டு நடந்தால், இதயத் துடிப்பு மற்றும் உடல் சூடு, நாம் பயணித்த தூரம், செலவான கலோரியின் அளவு ஆகியவற்றை சொல்லும். உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகளை செய்யலாம்.

ப.பரக்கத் நிஷா,
YWCA மெட்ரிக்
மேல்நிலைப் பள்ளி,
நெம்-1, டோல்கேட், திருச்சி.

சுட்டி ஸ்டார் நியூஸ்

 மழைக்காடுகளை அழிக்கும் லிப்ஸ்டிக்!

அழகுசாதனப் பொருட்களில் ஒன்றான லிஃப்ஸ்டிக் தயாரிப்பில் பாமாயிலின் பங்கும் உண்டு. இதற்காக, மலேசியா, இந்தோனேஷியா, பர்மா போன்ற நாடுகளின் மழைக்காடுகளை அழித்து பனைமரங்களைப் பயிரிடுகிறார்கள். மழைக்காடுகள் அழிக்கப்படுவதால், வன விலங்குகளின் எண்ணிக்கையும்  குறைந்து  வருகிறது. இயற்கையைக் காக்க, இதுபோன்ற அழகுப் பொருட்களின் பயன்பாட்டைத் தவிர்ப்போம்.

பா.மனோஜ் குமார்,
அணுவாற்றல் மையப் பள்ளி. கல்பாக்கம்.

சுட்டி ஸ்டார் நியூஸ்

பறந்து பறந்து செல்ஃபி!

செல்ஃபி பிரியர்களைக் குஷிப்படுத்த, பறந்து வருகிறது புதிய செல்ஃபி ஸ்டிக்.

டிரோன் வடிவில் உருவாக்கப்பட்டு இருக்கும் இதன் பெயர் ரோம் (ROME). ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘எல்ஓடி’ என்ற தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் பறக்கும் செல்ஃபி ஸ்டிக்கில் நமது ஸ்மார்ட்போனை இணைத்துக்கொள்ளலாம். 25 மீட்டர் தூரத்துக்குப் பறந்து படம் பிடிக்கும். 20 நிமிடங்களுக்குப் பறந்தவாறே வீடியோவும் எடுக்கும். இதில் 5 மெகா பிக்சல் கேமராவும் உள்ளது. விரைவில் சந்தைக்கு வரும் இந்த செல்ஃபி ஸ்டிக் மூலம் விதம்விதமாக படங்களை சுட்டுத் தள்ளலாம்.

அ.ஜாவித் அஹ்மத்,
மீனாட்சி இராமசாமி மேல்நிலைப் பள்ளி,
தத்தனூர்.

சுட்டி ஸ்டார் நியூஸ்

பூம் பூம் பீட்பாக்ஸிங்!

வாயை வைத்து பேசியும் பாடியும் கைதட்டல் வாங்குவது தெரியும். அதையும் தாண்டி, பாக்ஸிங் செய்தும் கைதட்டல் வாங்குவது தெரியுமா? உதடுகள் இரண்டையும் பாக்ஸிங் போடுவது போல செய்து, பல்வேறு இசைக்கருவிகளின் ஒலியை வரச்செய்வதுதான் பீட்பாக்ஸிங்    (Beatboxing). 19-ம் நூற்றாண்டு முதலே மேடையை அதிரவைக்கும் இந்தக் கலை, இப்போது உலகம் முழுவதும் பிரபலம். humanbeatbox.com என்னும் இணையதளத்தில் நுழைந்தால், பீட்பாக்ஸிங் கலையை நாமும் கற்றுக்கொள்ளலாம்.

வி.தனேஷ்,
ஸ்ரீநாராயண மிஷன்
மேல்நிலைப் பள்ளி,
மேற்கு மாம்பலம், சென்னை.

சுட்டி ஸ்டார் நியூஸ்

 சூடான செய்தி!

இந்த 2016-ம் ஆண்டை உலகின் வெப்பமான ஆண்டாக உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் செப்டம்பர் வரை நடத்திய ஆய்வில், பூமியின் வெப்பநிலை 0.88 டிகிரி செல்சியஸ் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. இது, 1960 முதல் 1990 வரையான சராசரி வெப்பநிலையைவிட அதிகமாம். வடகோளத்தின் பெரும்பாலான இடங்களின் வெப்பநிலை, வழக்கத்தைவிட ஒரு டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக இருந்ததாம். ஆசியா மற்றும் வட அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இந்த வருடம் மிகவும் வெப்பமானதாக இருந்ததாம். கடலின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது. இந்த வெப்பநிலை மாற்றத்தால் அன்டார்டிகா கண்டத்தில் உள்ள பனிப்பாறைகள் உருகுவது அதிகமாகி, கடல் மட்ட உயர்வு, வறட்சி, வெள்ளம் போன்ற பாதிப்புகள் அதிகமாக ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர். சுற்றுச்சூழலைப் பாதுகாத்து பூமியைக் காப்போம்.

சு.அனிருத் ராகவேந்திரா,
மகாத்மா காந்தி நூற்றாண்டுப் பள்ளி, திருச்சி.