Published:Updated:

நாங்களே உருவாக்கினோம் ஒரு காமிக்ஸ்!

நாங்களே உருவாக்கினோம் ஒரு காமிக்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
நாங்களே உருவாக்கினோம் ஒரு காமிக்ஸ்!

க.பாலாஜி, படங்கள்: பா.காளிமுத்து

நாங்களே உருவாக்கினோம் ஒரு காமிக்ஸ்!

க.பாலாஜி, படங்கள்: பா.காளிமுத்து

Published:Updated:
நாங்களே உருவாக்கினோம் ஒரு காமிக்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
நாங்களே உருவாக்கினோம் ஒரு காமிக்ஸ்!
நாங்களே உருவாக்கினோம் ஒரு காமிக்ஸ்!

‘‘ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ரஃப் நோட்ல ஜாலியா ஆரம்பிச்சது. இப்படி அட்டகாசமான புத்தகமா மாறி இருக்கிறதைப் பார்க்கிறப்போ அவ்வளவு சந்தோஷமா இருக்கு’’ - துள்ளும் உற்சாகத்துடன் சொல்கிறார்கள் கேஷவ்ராம் மற்றும் தானோதி அ.கணேஷ்.

சென்னை, சின்மயா வித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இருவரும், எட்வர்டு ஹியூஜ் ஹேண்ட்ஸ் (EDWARD HUGE HANDS) என்ற காமிக்ஸ் புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.

“எனக்கு கதைகள் படிக்கவும் எழுதவும் அவ்வளவு பிடிக்கும். துப்பறியும் சாம்பு கதைகளை விரும்பி படிப்பேன். ரொம்ப நாளாவே நானும் என்னோட ஃப்ரெண்டும் ஒரு காமிக் ஸ்டோரி பண்ணணும்னு பேசிட்டு இருந்தோம். ஒரு நாள், தானோதி அவங்க ரஃப் நோட்டுல வரைஞ்சு இருந்த டிராயிங்ஸைப்  பார்த்தேன். க்யூட்டாவும் ஃபன்னாவும் இருந்துச்சு. உடனே, ‘நான் எழுதற காமிக் கதைக்கு நீதான் இல்லஸ்ட்ரேட். எனக்கு வரைஞ்சு கொடுப்பியா?’னு கேட்டேன். அப்படித்தான் ஆரம்பிச்சது இந்தக் கதை’’ என்று புன்னகைக்கிறார் கேஷவ்ராம்.

நாங்களே உருவாக்கினோம் ஒரு காமிக்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓவியங்கள் வரைந்த தானோதி, “சின்ன வயசுல இருந்தே எனக்கு டிராயிங்னா ரொம்ப இஷ்டம். தினமும் என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை ‘A day in the life Thano’ என்கிற பெயரில் குட்டிக் குட்டியா நோட்டுல வரைஞ்சு வைப்பேன். கேஷவ், காமிக் கதையைப் பற்றி சொன்னதும், அந்த சேலஞ்சை உடனே ஏத்துக்கிட்டேன். தினமும் ஃப்ரீ பீரியட்ல உட்கார்ந்து டிஸ்கஸ் பண்ணுவோம். கேஷவ் சொல்லச் சொல்ல, நான் வரைவேன். கொஞ்சம் கொஞ்சமா, கிட்டதட்ட ஏழு மாசமா உருவாக்கினோம். சாதாரணமா வரையுறதைவிட ஒரு ஸ்டோரிக்கு வரையறது ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங்கா இருந்துச்சு. அப்பா, அம்மாவும் ரொம்ப சப்போர்ட் பண்ணினாங்க’’ என்கிறார் மலர்ச்சியுடன்.

சரி, யார் இந்த எட்வர்டு? என்ன கதை?

“சூப்பர் ஹீரோ கதைதான். இந்தக் கதையில் வரும் ஹீரோ பேரு எட்வர்டு. மத்தவங்க கைகளைவிட அவனோட கைகள் ரொம்ப பெருசா இருக்கும். அதுதான் அவனோட சூப்பர் பவர். எட்வர்டுவின் கசின், லியோனார்டு. அவனுக்கு ரொம்ப பெரிய கால்கள். இவனுக்கு எட்வர்டுவைப் பிடிக்காது. ரெண்டு பெரும் எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க. எட்வர்டுவின் ஃப்ரெண்ட், எலிபண்டா (யானை). அதை, லியோனார்டு கொன்னுடுவான். அந்த எலிபண்டாவை மறுபடியும் உயிர்பிச்சு, லியோனார்டுக்குப் பாடம் புகட்ட நினைக்கிறான் எட்வர்டு. இந்த நேரத்தில், லியோனார்டோவின் தலை, ஒரு ரோபோவின் உடம்பில் ஒட்டிக்குது. அப்புறம் என்ன நடக்குதுங்கிறதுதான் மிச்சக் கதை’’ என கேஷவ்ராம் சொல்லும்போதே, அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறது.

‘‘இதில் வர்ற சில கேரக்டர்ஸை உருவாக்கும்போது நடந்த விஷயங்களே குட்டிக் குட்டி கதைகள்தான். ஒருநாள் டிராயிங் கிளாஸ்ல யானை வரையச் சொன்னாங்க. வித்தியாசமா இருக்கட்டுமேனு, நான் வரைஞ்ச யானைக்கு நம்ம தேசியக்கொடியின் மூவர்ணங்களைக் கொடுத்தேன். அதையே இந்தக் கதையின் சூப்பர் பவர் எலிபண்டாவாக கொண்டுவந்துட்டோம்’’ என்கிறார் தானோதி.

நாங்களே உருவாக்கினோம் ஒரு காமிக்ஸ்!

‘‘முழுசா முடிக்கிற வரைக்கும் இதைப் பற்றி அதிகமா யார்கிட்டேயும் ஷேர் பண்ணிக்கலை. ஒப்பீனியன் கேட்கறதுக்காக சில ஃப்ரெண்ட்ஸ்கிட்டே மட்டும் காட்டுவோம். அதில் ஒருத்தனான என் ஃப்ரெண்ட் யஷ்வந்துக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. ஒவ்வொரு எபிசோடு முடிஞ்சதும் உடனே வாங்கிப் படிப்பான். சில சமயம், வரைஞ்சுட்டு இருக்கும்போதே பாதியில் பிடுங்கிட்டுப்போய் படிப்பான். அந்த ஆர்வம்தான் எங்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்துச்சு. முழு கதையையும் முடிச்சதும் டீச்சர்ஸ்கிட்டே காண்பிச்சோம். ரொம்ப பாராட்டினாங்க. புத்தகமா பண்ற தைரியமும் வந்துச்சு’’ என்கிறார் கேஷவ்ராம்.

கதைகளால்தான் சுட்டிகளின் உலகம் அழகாகிறது. சுட்டிகளே அந்தக் கதையை எழுதும்போது, அழகு இரட்டிப்பு ஆகிறது.