Published:Updated:

குழந்தை பிழைக்கணும்... மனிதநேயம் ஜெயிக்கணும்...  #NeedHelp (Sponsored Content)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குழந்தை பிழைக்கணும்... மனிதநேயம் ஜெயிக்கணும்...  #NeedHelp (Sponsored Content)
குழந்தை பிழைக்கணும்... மனிதநேயம் ஜெயிக்கணும்...  #NeedHelp (Sponsored Content)

குழந்தை பிழைக்கணும்... மனிதநேயம் ஜெயிக்கணும்...  #NeedHelp (Sponsored Content)

ஸ்ரீநிவாசனுக்கு இதயத்தில் கோளாறு உள்ளது. மருத்துவத் துறை அபரிவிதமாக வளர்ந்துவிட்ட இந்தக்காலத்தில் ஸ்ரீநிவாசனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்துவிடலாம்தான், ஆனால் சுலபமாகச் செய்துவிடமுடியாத சூழ்நிலை, இதற்கு காரணங்கள் இரண்டு - முதல் காரணம் ஸ்ரீநிவாசனின் வயது 18 மாதம்; இரண்டாவது காரணம்: அவனின் பெற்றோரோ ஏழைகள்!

குழந்தை பிழைக்கணும்... மனிதநேயம் ஜெயிக்கணும்...  #NeedHelp (Sponsored Content)

வெங்கட்ராமன், சுதா தம்பதியினர் நாம் அன்றாடம் பார்க்கும் சாமானியர்களாவர். சுதா கர்ப்பமாக இருந்தபோது, குழந்தையின் இருதயத்தில் ஓட்டையிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தையின் உயிரைக் காப்பாற்ற, பிறந்து சில மாதங்களில் முதல்கட்டமாக ஒரு ஆபரேஷன், வாழ்நாளை நீட்டிக்க ஒன்றரை வயதில் இரண்டாவது ஆபரேஷன் என இரண்டு அறுவை சிகிச்சைகள் கட்டாயமாம் எனத் தெரிவிக்கப்பட்டது. ​

பிரசவ வலி தரும் வேதனையை விட இந்தச் செய்தி தந்த வலி இருவரையும் துயரத்தில் ஆழத்தில் அழுத்துகிறது. இருந்தாலும் மனோ தைரியத்துடன் மனைவிக்கு ஆறுதல் கூறுகிறார் வெங்கட்ராமன். பிரசவ செலவுகளுக்கே சிரமப்படும் நிலையில் குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு பணம் புரட்டவேண்டிய கட்டாயத்தில் கணவர். வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு என்ன நேருமோ என கணப்பொழுதும் கலங்கும் மனைவி. 

முதல்கட்ட ஆபரேஷனுக்கு இரண்டு லட்சம் தேவைப்பட மருத்துவக் காப்பீட்டில் பாதி பணம் கிடைக்கிறது, மீதிக்கு கடன் வாங்கி ஆபரேஷனை நடத்த, இறுதியாக குழந்தையின் உயிர் அபாயக் கட்டத்தைக் கடக்கிறது. இவ்வளவு சிரமப்பட்டு தங்கள் குழந்தை தங்களுக்குக் கிடைத்ததை எண்ணி கண்ணீர் விடுகின்றனர் சுதா, வெங்கட்ராமன். ஒன்பது மாதம் ஓடிப்போக, இப்போது குழந்தைக்கு ஒன்றரை வயது. தனக்கு என்ன பிரச்னை என்பது கொஞ்சமும் தெரியாமல், வெகுளியாய் விளையாடித் திரிகிறது அந்த சிசு. ஆனால், வருத்தமெல்லாம் பெற்றோருக்குத்தான், காரணம் இரண்டாவது ஆபரேஷனுக்கான நேரம் வந்துவிட்டது.

குழந்தை பிழைக்கணும்... மனிதநேயம் ஜெயிக்கணும்...  #NeedHelp (Sponsored Content)

குழந்தை ஸ்ரீநிவாசன் மற்ற குழந்தைகள் போல வளர்ந்து ஓடியாடித் திரிய இந்த இரண்டாவது ஆபரேஷன் கட்டாயமாகும். இதைச் செய்யத் தவறினால், சின்ன சின்ன வேலைகள் செய்தாலும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தைப் பரிதவித்துப்போகும் என டாக்டர்கள் கூறுகின்றனர். மூச்சு அடைத்தால் பெரியவர்களே கதிகலங்கிப் போகும் நிலையில், தாய்ப்பால் அருந்தும் குழந்தை எப்படி அதைத் தாங்கிக்கொள்ள முடியும்? நினைக்கவே நெஞ்சு பதறுகிறது!

இப்போது இந்த அறுவை சிகிச்சைக்குத் தேவை 3.60 லட்சம் ரூபாய். ஏற்கனவே மருத்துவ செலவுகளுக்காக கடன் வாங்கி, அதைச் சமாளித்துவரும் இந்த ஏழைத் தம்பதியினருக்கு இந்தத்தொகை பெரும் பணமாகும். பிஞ்சுக் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற இவர்களுக்கு நம் உதவி தேவைப்படுகிறது. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தேதியில் பணம் புரட்ட முடியாததால் ஆபரேஷனைத் தள்ளிப்போட்டுவிட்டனர். நாள் ஆக ஆக ஆபத்து. குழந்தையின் உயிரைக் காப்பாற்ற நம்மால் ஆன உதவியை இவர்களுக்குச் செய்யலாம். https://www.edudharma.com/campaigns/help-baby-srinivasan-fight-heart-surgery எனும் தளத்துக்குச் சென்று நம்மால் ஆன உதவியை இவர்களுக்கு வழங்கலாம். பிறரிடமும் இத்தகவலைப் பகிர வேண்டுகிறோம்.

குழந்தை பிழைக்கணும்... மனிதநேயம் ஜெயிக்கணும்...  #NeedHelp (Sponsored Content)

மருத்தவம் வளர்ச்சி பல அடைந்திருந்தாலும், மானுடத்தை வாழ வைத்துக்கொண்டிருப்பது என்னவோ மனிதேநேயம்தான். நாம் இதயம் இறங்கிக் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் குழந்தை ஸ்ரீநிவாசனின் உயிரைப் பிழைக்கச் செய்யும் எனபதில் சந்தேகமில்லை. இப்போதே உதவிட https://www.edudharma.com/campaigns/help-baby-srinivasan-fight-heart-surgery செல்லவும். இதயத்துடிப்பு உயிர்த்துடிப்பு!

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை  Edudharma- வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும் வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு