FA பக்கங்கள்
புதிர் பக்கங்கள்
Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

திருவள்ளுவர் ஆண்டு!

தொன்மையான மரபுடைய தமிழர்களுக்கு ஓர் ஆண்டு முறை வேண்டும் என 1921-ம் ஆண்டு, பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள் தலைமையில் தமிழறிஞர்கள் கூடிப் பேசினர். தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார், தமிழ்க் காவலர் சுப்பிரமணிய பிள்ளை, சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் நா.மு.வெங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதம் அடங்கிய இந்தக் குழுவில், இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் திருவள்ளுவர் என ஆய்வுசெய்து, திருவள்ளுவர் ஆண்டை உருவாக்கினர். தமிழக அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை 1972-ம் ஆண்டு அரசிதழில் வெளியிட்டது.

சு.உ.சௌபாக்யதா, அமிர்த வித்யாலயம், திருச்சி.

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

முதுகெலும்பு விலங்குகள்... முற்றுப்புள்ளி வைத்த மனிதன்!

பூமியில் 60 சதவிகித முதுகெலும்பு விலங்குகள் அழிந்ததுக்கு மனிதனே காரணம் என்று அதிரவைக்கிறது ஓர் ஆய்வு. சுற்றுச்சூழல் அமைப்பான ‘உலக வன உயிரின நிதியம்’ (World Wildlife Fund) மற்றும் ‘லண்டன் உயிரியல் அமைப்பு’ இணைந்து வெளியிட்ட ‘தி லிவிங் பிளானட் ரிப்போர்ட்’ என்கிற அந்த அறிக்கையில், 1970 முதல் 60 சதவிகித முதுகெலும்பு விலங்குகள் அழிக்கப்பட்டதற்கு மனித நடவடிக்கைகளே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதேபோக்கு தொடர்ந்தால், பூமியின் பல்லுயிர் பெருக்கத்தன்மை முற்றிலும் அழிந்துவிடும் என்று எச்சரிக்கிறது.

வி.சாரதி, அரசு மேல்நிலைப் பள்ளி, அளே தருமபுரி, தருமபுரி.

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

விமான உணவு விடுதி!

‘சீனாவின் முதல் விமான உணவு விடுதி’ என்ற சிறப்பைப் பெற்றுள்ளது, வூஹான் (Wuhan) நகரில் அமைந்திருக்கும் ஓர் உணவு விடுதி. இதன் உரிமையாளர், லி யாங் (Li Yang). இவர் வாங்கிய போயிங் 737 ரக விமானம் ஒன்று, 4 மாதங்களில் இந்தோனேஷியாவுக்கும் அஹான் நகருக்கும் 8 முறை சென்று வந்தது. ஆனால், விமானத்தின் பாகங்களில் பலவற்றை மாற்றினால்தான் இனி பயன்படுத்த முடியும் என்கிற நிலை. நிறைய செலவு பிடிக்கும் எனத் தெரிந்தது. யோசித்த லியாங், விமானத்தையே உணவு விடுதியாக மாற்றிவிட்டார். இந்த வித்தியாசமான உணவு விடுதிக்கு கூட்டம் அலைமோதுகிறது. இங்கே இரவு உணவு ஒருவருக்கு 2 ஆயிரம் ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது.

அ.ஜாவித் அஹ்மத், மீனாட்சி இராமசாமி மேல்நிலைப் பள்ளி, தத்தனூர்.

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

நீர் நுரையீரல்!

சுட்டி ஸ்டார் நியூஸ்

டலின் ஆழத்துக்குச் செல்வோர் சுவாசத்துக்காக கொண்டுசெல்லும் சுவாசக் கருவியை நவீன வடிவில் உருவாக்கியவர், ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜாக்ஸ் கஸ்டூ (Jacques Cousteau). ‘ஃபாதர் ஆஃப் ஸ்கூபா டைவிங்’ என அழைக்கப்படும் இவர், ஃபிரான்ஸ் கப்பற்படையில் பணியாற்றினார். விஞ்ஞானி, சினிமா தயாரிப்பாளர், புகைப்படக்காரர், எழுத்தாளர் என இவருக்குப் பல முகங்கள். இரண்டாம் உலகப் போரின்போது கடலுக்கு அடியிலும் நீண்ட பயணம் செய்து, போரில் ஈடுபட வேண்டியிருந்தது. அதற்காக, இந்தக் கருவியை 1942-ம் ஆண்டு உருவாக்கினார். இப்போது, அனைவருக்கும் கடல் ஆழத்தில் நீர் நுரையீரலாக இந்தக் கருவி பயன்படுகிறது.

சு.லலிதா ஸ்ரீநிதி, இராணியார் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை.

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

உலகம் சுற்றிய வாலிபன்!

ஸ்திரேலியாவைச் சேர்ந்த  லாக்லன் ஸ்மார்ட் (Lachlan Smart) எனும் இளைஞர், மிக குறைவான வயதில் சிறிய ரக விமானம் மூலம் உலகை வலம் வந்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 2016 ஜூலை 4-ம் தேதி, ஆஸ்திரேலியாவின் மரூச்சிடார் (Maroochydore) என்ற இடத்தில் தனது பயணத்தை ஆரம்பித்தார். செப்டம்பர் முதல் வாரத்தில் அதே இடத்துக்கு முடித்தபோது, சுமார் 45,000 கிலோமீட்டர் பயணித்து இருந்தார். அப்போது அவருடைய வயது 18 வருடம் 7 மாதம் 21 நாட்கள். இதற்கு முன்பு, அமெரிக்காவின் மேட் கத்மில்லர் (Matt Guthmiller) என்பவர் 19 வயதில் படைத்த சாதனையை ஸ்மார்ட்டாக முறியடித்துவிட்டார் லாக்லன் ஸ்மார்ட்.

பா.மனோஜ் குமார், அணுவாற்றல் மையப் பள்ளி. கல்பாக்கம்.