Published:Updated:

கனவு ஆசிரியர் - 1330 லட்சியம்... அடைவது நிச்சயம்!

கனவு ஆசிரியர் - 1330 லட்சியம்... அடைவது நிச்சயம்!
பிரீமியம் ஸ்டோரி
கனவு ஆசிரியர் - 1330 லட்சியம்... அடைவது நிச்சயம்!

கே.ஆர்.ராஜமாணிக்கம், படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்

கனவு ஆசிரியர் - 1330 லட்சியம்... அடைவது நிச்சயம்!

கே.ஆர்.ராஜமாணிக்கம், படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்

Published:Updated:
கனவு ஆசிரியர் - 1330 லட்சியம்... அடைவது நிச்சயம்!
பிரீமியம் ஸ்டோரி
கனவு ஆசிரியர் - 1330 லட்சியம்... அடைவது நிச்சயம்!

‘‘எந்தக் காலத்துக்கும் பொருந்தும் திருக்குறளில் சொல்லப்படாத விஷயங்களே இல்லை. திருவள்ளுவரின் குறட்பாக்களின்படி நடப்பவர், உலகத்திலேயே சிறந்த மனிதனாக, பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழ முடியும்’’ என்கிறார் மெ.செயம்கொண்டான்.

கனவு ஆசிரியர் - 1330 லட்சியம்... அடைவது நிச்சயம்!

காரைக்குடி, வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர். வள்ளுவர் பேரவையின் நிறுவனத் தலைவர், ‘குறளமுது' என்ற இலக்கியச் சிற்றிதழின் ஆசிரியர், திருக்குறள் சம்பந்தமான பல நூல்களை எழுதியவர் என பிரமிக்கவைக்கிறது இவருடைய திருக்குறள் பற்று. எல்லாவற்றுக்கும் மேலாக, திருக்குறள் சிறப்புப் பயிற்றுநராக, நாடாளுமன்றம் வரை தனது மாணவர்களை அழைத்துச்சென்று சிறப்பித்தவர்.

‘‘சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு, திருக்குறள் முழுமையும் முடித்தவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் தரும் (இப்போது, ஓராண்டுக்கு ரூ.10,000), ‘குறள் பரிசுத் திட்டம்’ பற்றி அறிவித்தது. அந்த ஊக்கத்தொகை, மாணவர்களுக்குக் கல்வித்தொகையாகப் பயன்படும் என்ற நோக்கத்தில், ஆர்வமுள்ள மாணவர்களைத் தயார்படுத்தினேன். இப்படி ஆரம்பித்த பயணம், என்னையும் என் மாணவர்களையும் முழுமையாக திருக்குறள் கடலில் மூழ்கி முத்தெடுக்க செய்தது’’ என்று புன்னகைக்கிறார்.

இதற்கு முன்பு தான் பணியாற்றிய காரைக்குடி, ஸ்ரீகலைவாணி வித்யாலயா மெட்ரிக் பள்ளி மூலம் 19 மாணவர்களுக்கு, தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரிடம் ‘திருக்குறள் செல்வர்' என்ற பட்டத்தைப் பெறவைத்தார். இதுவரை இவர் உருவாக்கியுள்ள திருக்குறட் செல்வர்கள், 30 பேர். இவரால்,  தமிழ்நாட்டில் அதிக திருக்குறட் செல்வர்களை உருவாக்கிய மாவட்டமாக சிவகங்கை மாவட்டம் விளங்குகிறது.

உத்ரகாண்ட் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய்யின் முயற்சியால் நடைபெற்றது, ‘நாடாளுமன்றத்தில் திருக்குறள்' போட்டி. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக அளவில் ஒன்றரை லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டனர். உச்சரிப்பு, சீர் பிரித்துச் சொல்லும் திறன், குறளை வாழ்க்கையோடு ஒப்புநோக்கல் போன்ற பல்வேறு திறனாய்வுகள் அடிப்படையில் நடந்த இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற 133 மாணவர்களுள், இவரது மாணவர்கள் ஆறு பேர். இவர்களில் ஒருவர் மாநிலத்தில் முதல் இடம் பெற்றவர். 2015, டிசம்பர் 17-ல், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிலும் குடியரசுத் தலைவர் மாளிகையில் அளிக்கப்பட்ட தேநீர் விருந்திலும் இவருடைய மாணவர்கள் இடம்பெற்றனர்.

‘‘1,330 குறள்களைப் போல 1,330 மாணவ, மாணவிகளை திருக்குறட் செல்வர்களாக உருவாக்க வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம்'' என்கிறார் இந்த கனவு ஆசிரியர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism