FA பக்கங்கள்
Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

சிற்பம் சொல்லும் செய்தி!

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

ரு கல்லுக்கு உயிர் கொடுக்கும் சிற்பிகள், தங்கள் மனதில் உள்ள எண்ணங்களை சிற்பங்கள் வாயிலாக வெளிப்படுத்துகிறார்கள். அது பார்ப்போரின் மனங்களிலும் விதைக்கப்படுகிறது. அந்த வகையில், சிங்கப்பூரில் ஃபுல்லர்ட்டன் (Fullerton) என்ற ஹோட்டல் அருகே ஐந்து சிறுவர்கள் ஆற்று நீரில் பாய்வது போல இருக்கும் சிற்பம், உலகப் புகழ்பெற்றது. முதல் தலைமுறை (First Generation) எனப்படும் இந்தச் சிற்பம், 2000-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி சிங்கப்பூர் சுற்றுலாத் துறையினரால் நிறுவப்பட்டது. இந்தச் சிற்பத்தை உருவாக்கியவர், சிங்கப்பூரைச் சேர்ந்த, சொங் ஃபா சியாங் (Chong Fah Cheong). சிங்கப்பூரின் முதல் தலைமுறை குழந்தைகள், எவ்வளவு தைரியத்துடன் இயற்கையோடு இழைந்து வாழ்ந்தார்கள் என்பதை நினைவூட்டும் வகையில் இதை உருவாக்கினார்.

வி.தனேஷ், ஸ்ரீ நாராயண மிஷன் மேல்நிலைப் பள்ளி,  மேற்கு மாம்பலம், சென்னை.

தொலைநோக்கியின் முன்னோடி!

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அவர், மூக்குக்கண்ணாடி தயாரிப்பதில் நிபுணர். ஒரு நாள், கண்ணாடித் துண்டுகளை ஃபிரேமில் பொருத்தும் முயற்சியில் இருந்தார். தற்செயலாக இரண்டு துண்டுகளை ஒன்றின் மீது ஒன்றாக வைத்து தொலைவில் தெரிந்த காட்சியைப் பார்த்தார். அது, சற்று அருகில் தெரிவதுபோல இருந்தது. ஆச்சர்யப்பட்டு, வெவ்வேறு கண்ணாடித் துண்டுகளை இணைத்து உருவாக்கியதுதான், உலகின் முதல் தொலைநோக்கி. அதை உருவாக்கியவர் பெயர் ஹான்ஸ் லிப்பர்ஷே (Hans Lippershey). இது நடந்தது 1608-ம் ஆண்டு. இவருக்குப் பிறகு, கலீலியோ உட்பட பல்வேறு விஞ்ஞானிகள் நவீன தொலைநோக்கிகளைக் கண்டுபிடித்தார்கள்.

சு.லலிதா ஸ்ரீநிதி, இராணியார் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை.

மனித உடலில் புதிய உறுப்பு!

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

யற்கையை அறியும் அறிவியலுக்கு முடிவே கிடையாது என்பதற்கு சமீபத்திய உதாரணம், மெசென்டெரி (Mesentery). மனித உடலில் இருக்கும் அத்தனை உறுப்புகள் பற்றியும்  தெரிந்துகொண்டுவிட்டோம் என்று இவ்வளவு நாளாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், மனித உடலில் புதிய உறுப்பு ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். ‘மெசன்டரி’ எனப் பெயரிட்டுள்ள இந்த உறுப்பு, சிறுகுடல் பகுதியில் அமைந்துள்ளது. உடலில் இதன் பணி என்ன என ஆராய்ந்து வருகிறார்கள். இந்த உறுப்போடு சேர்த்து நம் உடலில் மொத்தம் 79 பாகங்கள் உள்ளன. ஃபேமிலியின் புது உறுப்பினருக்கு வெல்கம் சொல்லுங்க!

சு.அனிருத் ராகவேந்திரா, மகாத்மா காந்தி நூற்றாண்டுப் பள்ளி, திருச்சி.

புதிய கடல்வாழ் உயிரினங்கள்!

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

‘கடல்வாழ் உயிரினங்கள் பதிவேடு’ என்ற அமைப்பு, கடல்வாழ் உயிர்கள் அனைத்தையும் பதிவுசெய்யும் நோக்கத்துடன் இயங்கி வருகிறது. இது, ஒவ்வோர் ஆண்டும் கண்டுபிடித்த கடல்வாழ் உயிரினங்களைத் தங்கள் பட்டியலில் சேர்க்கும். அந்த வகையில் கடந்த ஆண்டில் மட்டும் 1,451 புதிய கடல்வாழ் உயிரினங்களைக் கண்டுபிடித்து சேர்த்துள்ளது.புதுவிதமான சுறா, விநோதமான தவளை மீன், பெரிய உருவமுள்ள புதுமையான டால்பின்கள் முதல் நுண்ணோக்கி வழியே மட்டுமே பார்க்கக்கூடிய இறால்கள் வரை இவற்றில் அடங்கும். தற்போது 2,28,000 கடலுயிர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இன்னும் பல்லாயிரம் உயிரினங்கள் கடலுக்குள் இருக்கும் என்கிறார்கள்.

அ.ஜாவித் அஹ்மத், மீனாட்சி இராமசாமி மேல்நிலைப் பள்ளி, தத்தனூர்.

எறும்புச்சிங்கம்

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

றும்புச்சிங்கம் (Antlion) என்பது பார்ப்பதற்கு வெட்டுக்கிளி போலவே இருக்கும் ஒரு பறக்கும் பூச்சி. லார்வா பருவத்தில் மூட்டைப்பூச்சி போல காணப்படும். வளர்ந்ததும் 2 முதல் 15 சென்டிமீட்டர் நீளத்துக்கு இறக்கை முளைக்கும். இது, தனது இரையைப் பிடிக்க வித்தியாசமான முறையைக் கையாளும். புனல் போன்ற அமைப்பில் மணலில் குழியைத் தோண்டி, அதன் அடியில் காத்திருக்கும். அந்த வழியே வந்து குழிக்குள் விழும் எறும்பு மற்றும் சிறுபூச்சிகள் மீது மணலை ஸ்ப்ரே மாதிரி அடித்து நிலைகுலையச் செய்து, பாய்ந்து பிடித்துச் சாப்பிடும். சிங்கம் போன்று வேட்டையாடுவதால் இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இர.ஐஸ்வர்யா, கலைமகள் கல்வி நிலையம் மெட்ரிக் மே.நி. பள்ளி, ஈரோடு.