FA பக்கங்கள்
Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

கம்பீரப் பாலம்!

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

லக மக்களை கழுத்தை நிமிர்த்திப் பார்க்க வைத்திருக்கிறது சீனா. இரண்டு மலைகளுக்கு இடையே பிரமாண்டமான பாலத்தை உருவாக்கி, டிசம்பர் இறுதியில் திறந்துள்ளனர். சீனாவில் உள்ள யுன்னான் மற்றும் கிஸோ (Yunnan and Guizhou) பகுதிகளை இணைக்கும் இந்தப் பாலம் 1,850 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. 1,340 மீட்டர் அகலத்தில் நான்குவழிச் சாலையாகப் போக்குவரத்து நடைபெறத் திட்டமிட்டு, மூன்று வருடங்களில் கட்டி முடித்துள்ளனர். இது, உலகின் மிகப்பெரிய, மிக உயரத்தில் கட்டப்பட்ட பாலங்களின் பட்டியலில் கம்பீரமாக இடம்பெறுகிறது.

செ.நிபாஸத் ஃபாத்திமா

ட்ரம்ப் பூச்சி

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

ந்துப்பூச்சி இனத்தைச் சேர்ந்த ஒரு பூச்சிக்கு, அமெரிக்காவின் புதிய அதிபரான டொனால்ட் ட்ரம்ப் பெயரைச் சூட்டியுள்ளனர். இந்தப் பூச்சியின் மாதிரி ஏற்கெனவே கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் போஹார்ட் பூச்சியியல் அருங்காட்சியகத்தில் உள்ளது. இந்த இனத்துக்கு நியோபால்பா டொனால்ட் ட்ரம்பி (Neopalpa DonaldTrumpi) எனப் பெயரிட்டுள்ளார்கள். ‘‘முழுவதுமாக வளர்ந்த இந்தப் பூச்சியின் தலையில், மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் செதில்கள் இருக்கும். இது, டொனால்ட் ட்ரம்ப் ஹேர்ஸ்டைல் போலவே இருக்கிறது. இதுவே, ட்ரம்ப் பெயரை சூட்டுவதற்கு ஒரு காரணமாக அமைந்தது'' என்கிறார் பரிணாம வளர்ச்சி உயிரியலாளரும் புள்ளியிலாளருமான வாஸ்ரிக் நஸாரி. கடந்த வருடம் அதிபர் ஒபாமாவின் பெயரை, ஒரு புது வகை தட்டைப்புழுக்களுக்குச் சூட்டினார்கள்.

சுட்டி ஸ்டார் நியூஸ்

சு.அனிருத் ராகவேந்திரா, மகாத்மா காந்தி நூற்றாண்டுப் பள்ளி, திருச்சி.

நன்மை தரும் ஏ2 பால்!

சுட்டி ஸ்டார் நியூஸ்

ல்லிக்கட்டு போராட்ட சமயத்தில் ஏ1 பால், ஏ2 பால் என்ற பெயர்களைக் கேட்டிருப்பீர்கள். அது என்ன தெரியுமா?

சுட்டி ஸ்டார் நியூஸ்

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் - இந்தியா (Food Safety and Standards Authority of India - FSSAI) 2011-ம் ஆண்டு நடத்திய ஆய்வு, நாம் பயன்படுத்தும் 68.4% பால், கலப்படமானது என்று தெரிவித்துள்ளது. இதற்கு ஏ1 பால் முக்கியக் காரணம். இந்தப் பாலில், உடலுக்குக் கேடு விளைவிக்கும் பீட்டா காஸ்மார்ஃபின் (Beta casomorphin) என்ற புரோட்டீன் உள்ளது. இது, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, மரபணு மாற்றம் செய்யப்பட்ட மாடுகள் சுரக்கும் பால். இந்தப் பாலை அருந்துவதால், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், சர்க்கரை நோய் போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகம். ஆனால், நம் இந்திய நாட்டு மாடுகள் சுரக்கும் பாலில் நன்மை தரக்கூடிய சத்துகள் அதிகம் இருக்கின்றன. இதையே ஏ2 பால் என்கிறோம். ஆகவே, முடிந்த வரை பாக்கெட் பாலைத் தவிர்ப்போம். நாம் வசிக்கும் பகுதியில் வளர்க்கப்படும் நாட்டு மாடுகளின் மூலம் கிடைக்கும் பாலை வாங்கிப்  பருகுவோம்.

வி.தனேஷ், ஸ்ரீ நாராயண மிஷன் மேல்நிலைப் பள்ளி, மேற்கு மாம்பலம், சென்னை.

அம்பேத்கர் 14

சுட்டி ஸ்டார் நியூஸ்

ராம்ஜி சக்பால் - பீமாபாய் தம்பதியருக்கு 14-வது குழந்தையாகப் பிறந்தவர், அம்பேத்கர்.

• அம்பேத்கர் பிறந்தது 1891-ம் ஆண்டு ஏப்ரல் 14.

• அம்பேத்கருக்குத் திருமணம் நடந்தபோது வயது 14. அவரது மனைவி ரமாபாய்க்கு வயது 9.

• 1942 ஜூலை இரண்டாம் தேதி, வைஸ்ராயின் நிர்வாகக் குழுவில் அம்பேத்கர் சேர்ந்தபோது, இந்தியர்களின் பிரதிநிதித்துவம் 14.

சுட்டி ஸ்டார் நியூஸ்

• ஐந்து லட்சம் ஆதரவாளர்களுடன் புத்த மதத்துக்கு அம்பேத்கர் மாறிய நாள் 1956 அக்டோபர் 14.

• அம்பேத்கரின் தந்தை மறைந்த ஆண்டு 1913. இந்த எண்ணின் கூட்டுத்தொகை 14.

ச.கமலி, வாலரைகேட் வித்யாலயம், திருச்செங்கோடு.

முதல் பிரமிடு!

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

லகின் முதல் பிரமிடு கட்டப்பட்டது கஸகஸ்தான் நாட்டில்தான் என்ற புதுத் தகவலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளனர். இதுவரை, எகிப்து நாட்டின் ‘டிஜோசர் பிரமிடு’தான் உலகின் பழைய பிரமிடு என ஆராய்ச்சியாளர்கள் நம்பி வந்தனர். ஆனால், கெய்ரோவில் இருந்து 3,900 மைல் வடகிழக்கில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பிரமிடு, 3000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக இருக்கும் என்கிறார்கள். இது, டிஜோசர் பிரமிடைவிட 1000 ஆண்டுகள் பழைமையானது. அழிந்துபோன இந்த பிரமிடு, தற்போது வெறும் கற்குவியலாகக் காட்சி தருகிறது.

அ.ஜாவித் அஹ்மத், மீனாட்சி இராமசாமி மேல்நிலைப் பள்ளி, தத்தனூர்.