Published:Updated:

குரூப் ஸ்டடி எங்கள் எனர்ஜி!

ஆர்.ஜெயலெட்சுமிஎல்.ராஜேந்திரன், க.தனசேகரன், தே.அசோக்குமார், நா.ராஜமுருகன்

பிரீமியம் ஸ்டோரி
குரூப் ஸ்டடி எங்கள் எனர்ஜி!

பிப்ரவரி வந்தாலே எக்ஸாம் ஃபீவர் ‘உள்ளே வரட்டுமா?’ எனக் கேட்கும். ‘‘எக்ஸாம் வந்துடுச்சு. இன்னும் விளையாடறியா? சரியா படிக்கலைன்னா அவ்வளவுதான்’’ என்று பயமுறுத்துவார்கள் பெற்றோர்.

குரூப் ஸ்டடி எங்கள் எனர்ஜி!

அட்வைஸ்கள் பலமுனைத் தாக்குதல்களாக இருக்கும். இவற்றையெல்லாம் விரட்ட நமக்குக் கிடைக்கும் எனர்ஜி பானங்களில் ஒன்று குரூப் ஸ்டடி. சிலருக்குத் தனியாக, அமைதியாக உட்கார்ந்து படிப்பதுதான் பிடிக்கும். ஆனால், பலருக்கோ குழுவாகச் சேர்ந்து படிப்பதுதான் பிடிக்கும். இப்படி குரூப்பாகச் சேர்ந்து படிப்பதால் பல சந்தேகங்களைத் தீர்த்து, உற்சாகமாகத் தேர்வை எதிர்கொள்ள வைக்கும். மாணவர்கள் அப்படி சின்ஸியராக குரூப் ஸ்டடியில் இருந்த சில இடங்களுக்கு விசிட் அடித்தோம்.

குரூப் ஸ்டடி எங்கள் எனர்ஜி!

மீனா பிரியதர்ஷினி, மதுரை மகாத்மா பள்ளி: ‘‘எக்ஸாம் டைமில் மட்டுமில்லே, ஸ்கூலில் எப்போ ஃப்ரீ

குரூப் ஸ்டடி எங்கள் எனர்ஜி!

டைம் கிடைச்சாலும் நாங்க குரூப் ஸ்டடிதான் செய்வோம். இது படிக்கிறதுக்கு மட்டும் இல்லாம, ஒருத்தரை ஒருத்தர் நல்லாப் புரிஞ்சுக்கவும், நட்பைப் பலப்படுத்தவும் வாய்ப்பாக இருக்கு. அறிவியல் மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கு குரூப் ஸ்டடி ரொம்ப வசதியாக இருக்கும். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு திறமையில ஸ்ட்ராங்கா இருப்பாங்க. நமக்குத் தெரியாத கான்செப்டை, ஃப்ரெண்ட் விளக்கும்போது, டீச்சர் சொல்றதைவிட எளிமையாகப் புரியும். ஒருவரி வினாக்களுக்கு எல்லாம் புத்தகம் முழுவதும் புரிஞ்சு படிச்சாதான் முழு மதிப்பெண் பெற முடியும். குரூப்பா விவாதிக்கிறப்ப, நமக்குத் தெரியாத நிறைய ஒரு வரி விடைகளைத் தெரிந்துகொள்ளலாம். எவ்வளவுதான் திறமை இருந்தாலும் ஆங்கில இலக்கண ஆற்றலில் ஒவ்வொருவரும் வேறுபடுவோம். அதில் புத்தகத்தில் இல்லாத பொதுவான விஷயங்கள் வரும். அதுக்கு  இந்த குரூப் ஸ்டடி ரொம்பப் பயனுள்ளதா அமையும்.’’

குரூப் ஸ்டடி எங்கள் எனர்ஜி!

விக்னேஷ்வரன், சென்னை நவபாரத் மெட்ரிக் பள்ளி: ‘‘ஒரு பாடத்தில் ஒவ்வொரு பகுதியாக அனைவரும் பிரித்துக்கொள்வோம். ஒவ்வொருவரும் படித்த பகுதியை குரூப்பில் விவாதிப்போம். அதனால் எல்லாப் பகுதிகளைப் பற்றியும் முழுமையாகக் கற்க இயலும். கடினமான வார்த்தைகளை எங்களுக்குப் புரியும் வகையில் வேடிக்கையாக மாற்றிக்கொள்வோம். இது பீம், இது டோரேமான் என எங்களுக்குப் பிடித்த கார்ட்டூன் கேரக்டர் பெயரை வைத்துவிடுவோம். தேர்வுகளில் அந்தக் கேள்வி வரும்போது படித்தது உடனடியாக ஞாபகம் வரும். எங்களுக்குள் தேர்வுத்தாள் தயாரித்து எழுதி, மாற்றி மாற்றித் திருத்திக்கொள்வோம். அதனால் தேர்வு எழுதிப் பார்க்கும் நல்ல அனுபவம் கிடைக்கிறது.’’

குரூப் ஸ்டடி எங்கள் எனர்ஜி!

அஸ்வினி, சென்னை நவபாரத் மெட்ரிக் பள்ளி: ‘‘வேதியியல், உயிரியல் பாடங்களை குரூப் ஸ்டடியில் எளிதாகக் கற்கலாம். அறிவியல் பாடத்தைப் பாடமாகப் படிக்காமல், அப்ளை பண்ணி படிப்பதற்கு வசதியாக இருக்கும். தனியாகப் படிக்கும்போது நோட்ஸைப் பார்க்கலாமா என்ற எண்ணம் வரும். குரூப் ஸ்டடியில சீக்கிரம் படித்துவிடலாம். மீண்டும் மீண்டும் எழுதிப் பார்க்கலாம். விரைவாக, குறித்த நேரத்துக்குள் படிக்கிற ஆற்றல் கிடைக்கும். ஸ்டடி லீவில், ஃப்ரெண்ட்ஸ் வீட்டில் ஃப்ரீயாகப் படிக்க என்னோட பெற்றோர்களும் ஊக்குவிப்பார்கள்.’’

குரூப் ஸ்டடி எங்கள் எனர்ஜி!
குரூப் ஸ்டடி எங்கள் எனர்ஜி!

மாதேஷ்பாபு, மதுரை மகாத்மா பள்ளி: ‘‘தேர்வு முடிந்து ஆசிரியர் விடைத்தாள் கொடுத்ததும்,

குரூப் ஸ்டடி எங்கள் எனர்ஜி!

ஒவ்வொருவரும் மற்றவர்களின் விடைத்தாள்களை மாற்றிப் பார்த்துக்கொள்வோம். கேள்விக்கான பதிலை எப்படி எழுதினால் முழுமையான மதிப்பெண் கிடைக்கும். எதனால் நமக்கு மதிப்பெண் குறைந்துள்ளது என்பதை அலசி, ஆராய குரூப் ஸ்டடி உதவியாக இருக்கிறது. இதனால், அடுத்த முறை ஒவ்வொரு கேள்விக்கும் எவ்வாறு விடை அளித்தால் முழு மதிப்பெண்களைப் பெற முடியும் என்ற டெக்னிக்கைக் கற்றுக்கொள்ள முடிகிறது. கணக்குகளை எளிமையாகச் செய்து பார்க்க முடியும். நாமே அறிவாளி என நினைக்கிற எண்ணம் குரூப் ஸ்டடியில் காணாமல் போய்விடும். ஏனெனில், ஒவ்வொருவரிடமும் பேசும்போது வெளிப்படும் அவர்களின் திறமை, நம்மை இன்னும் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்கிற உத்வேகத்துக்குக் கொண்டு போகும்.’’

குரூப் ஸ்டடி எங்கள் எனர்ஜி!

குரூப் ஸ்டடி செய்வதால், படிப்போடு சேர்ந்து சமூகத்தை எதிர்கொள்ளும் பண்புகளையும் மாணவர்கள் கற்கலாம் என்கிறார் மதுரையைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர் காயத்ரி அருண். “குரூப் ஸ்டடின்னா குழந்தைங்க ஒருத்தருக்கு ஒருத்தர் பேசி அரட்டை அடிப்பாங்க என்பது பெற்றோரின் பயமாக இருக்கும். ஆனால், அது ரொம்பக் குறைவுதான். நல்ல விஷயங்கள் நிறைய இருக்கு. குரூப் ஸ்டடி மூலம் சமூகத்தை எதிர்கொள்ளும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள இயலும்’’ என விவரிக்கிறார்.

குழந்தைங்க வீட்ல உட்கார்ந்து படிக்கிறப்ப பெற்றோர்கள் ‘சீக்கிரம் படிச்சிடு. இதை நீ படிச்சேன்னா அம்மா சந்தோஷப்படுவேன். அப்பா சந்தோஷப்படுவார். இதை வாங்கித் தருவேன். அதை வாங்கித் தருவேன்’னு ஏதாவது ஒன்றை எதிர்பார்க்க வைப்பாங்க. இது தவறான ஒன்று. குழந்தைகள் அவர்கள் சந்தோஷத்துக்காகப் படிக்க வேண்டும். இது குரூப் ஸ்டடியில் சாத்தியம். எந்த நிபந்தனையும் கட்டுப்பாடும் இல்லாமல் அவர்களாகவே கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் சீக்கிரம் முடிப்பார்கள். இது ஆரோக்கியமான விஷயம். படித்தால் இது கிடைக்கும் என நிர்பந்திக்கும் மனநிலையில் வளர்ந்தால், எதிர்காலத்தில் அவர்கள் வேலைக்குச் செல்லும்போதும் என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பே மேலோங்கி இருக்கும்.

குரூப் ஸ்டடியில் ஒரு மாணவரின் வீட்டிலோ அல்லது பொதுவான இடத்திலோ படிப்பார்கள். அதனால் சரியான நேரத்தில் படிப்பைத் தொடங்க வேண்டும். மற்றவர்கள் காத்திருப்பார்கள் என்ற உள்ளுணர்வு தானாக வந்துவிடும். தேவையில்லாத டென்ஷன் குறையும். சரியான நேரத்தில் பாடத்தை முடிக்க முடியும். இந்தப் பண்பு, எதிர்காலத்தில் பணிகளைத் தாமதம் இன்றி, குறிப்பிட்ட நேரத்தில் விரைந்து முடிக்க உதவும்.

ஹார்டு வொர்க் பண்ணினால்தான் ஜெயிக்க முடியும்’ எனப் பெற்றோர் அடிக்கடி சொல்வார்கள். இது தவறானது. படிப்பை நாம் எளிமையாக்க வேண்டும். ‘ஸ்மார்ட்டா படி’ எனச் சொல்வதே சரி. இந்த ஸ்மார்ட்னெஸ் ஒருவருக்கு ஒருவர் கலந்து பேசிப் படிக்கும்போது  கிடைக்கும். தன்னம்பிக்கை, முடிவெடுக்கும் திறன், விரைவாக ஒரு பணியை முடிக்கும் திறன் ஆகியவை கிடைக்கும்.

குரூப் ஸ்டடியில் ஒருவர் சொல்வதை மற்றவர்கள் கவனிப்பார்கள். பின்பற்றுவார்கள். இது, தலைமைப் பண்பு, குழுவாகச் சேர்ந்து பணியாற்றும் திறன், மற்றவர்களுக்குத் தெரிவிக்கவேண்டிய விஷயங்களைப் புரியும் விதத்தில் சொல்லும் திறன் ஆகியவற்றை உருவாக்கும்.

குரூப் ஸ்டடியில் பிறரின் பலம், பலவீனங்களைத் தெரிந்துகொண்டு உதவி செய்தும் உதவி பெற்றும் படிப்பார்கள். ஒருவரைச் சரியான முறையில் எடை போட இது உதவியாக  இருக்கும்.
  என்ஜாய் குரூப் ஸ்டடி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு