FA பக்கங்கள்
Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

உணவே... ஆரோக்கிய உணவே! 

சுட்டி ஸ்டார் நியூஸ்

ல்ல உணவே மருந்தாகும் நமக்கு நல்ல விருந்தாகும் தொல்லை இன்றி நாம் வாழ எல்லை வகுத்து உண்டிருப்போம்!

பயறு, கீரை, பழங்களை வயிறு நிறையச் சாப்பிடலாம் பரோட்டா, பர்கர், பீட்ஸாவை துரத்தித் தூக்கி எறிந்திடலாம்!

சுட்டி ஸ்டார் நியூஸ்மூத்தோர் சொன்ன முறைகளை காத்தே நாமும் நடந்திட்டால் வருத்தும் துயரைக் கடந்திடுவோம் வளமாய் நாமும் வாழ்ந்திடுவோம்! 

தி.ஸ்ரீ ஸ்வர்ணா, P.S.B.B மில்லெனியம் ஸ்கூல், கடலூர்.

மலரே... மெகா மலரே! 

சுட்டி ஸ்டார் நியூஸ்

டைட்டன் ஆரம் (Titan Arum) என்பது, உலகின் மிகப்பெரிய பூக்களைக் கொடுக்கும் கிளையில்லாத் தாவரமாகும். இது, மழைக்காடுகளில் வளரும் தன்மைகொண்டது. உலகிலேயே பெரிய மலர் என்கிற சிறப்பு இதற்கு உண்டு. இந்த மலர் தன்மகரந்தச் சேர்க்கை செய்யாது. மலரில் இருந்து வீசும் நறுமணம், வண்டுகளையும், ஈக்களையும் கவரும். அவற்றின் மூலம் அயல்மகரந்தச் சேர்க்கை நடக்கும். இந்தப் பூக்கள், மலர்ந்த 24 மணி நேரத்தில் வாடிவிடுகின்றன. ஆனால், ஒரு பூ மலர எட்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

சுட்டி ஸ்டார் நியூஸ்

அ.அரவிந்தன், ஸ்ரீ அரபிந்தோ மீரா மெட்ரிக் பள்ளி, மதுரை.

அசத்தல் பனிக்கட்டி சிற்பங்கள்! 

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

சீனாவின் ஹார்பின் நகரில், ஆண்டுதோறும் பனிச்சிற்பங்கள் திருவிழா நடைபெறுகிறது. உலகிலேயே மிகப்பெரிய, தனித்துவ மிக்க பனிச் சிற்பங்கள் இங்கே உருவாக்கப்படுகின்றன. நகரின் அருகில் இருக்கும் சோங்ஹூவா நதியில் இருந்து பனிக்கட்டிகளை வெட்டி எடுத்துச் சிற்பங்களை வடிப்பார்கள். விலங்குகள், பறவைகள், பிரமாண்டமான கோட்டைகள், உலகப் புகழ்பெற்ற சின்னங்கள், கார்ட்டூன் கதாபாத்திரங்கள் என விதவிதமாக வடிவமைப்பார்கள். இந்தப் பனிச் சிற்பத் திருவிழா ஜனவரியில் ஆரம்பித்து மார்ச் வரை நடைபெறும்.

சுட்டி ஸ்டார் நியூஸ்

அ.ஜாவித் அஹ்மத், மீனாட்சி இராமசாமி மேல்நிலைப் பள்ளி, தத்தனூர்.

நாசாவில் ஹாலோவீன் தினம்! 

சுட்டி ஸ்டார் நியூஸ்

நாசா விஞ்ஞானிகள் ராக்கெட்டுகளைக்  கட்டமைத்து, நிலவுக்கும் பிற கிரகங்களுக்கும் செயற்கைக்கோள்களை அனுப்புவார்கள் என்பது தெரியும். ஆனால், ‘நாங்கள் பூசணிக்காய் செதுக்குவதிலும் (Pumpkin carving) கில்லாடிகள். இதைக் கடந்த ஆறு ஆண்டுகளாக, அக்டோபரில் நடக்கும் ஹாலோவீன் (Halloween) கொண்டாட்டங்களில் நிரூபித்து வருகிறோம்’’ என்கிறார்கள். 2016-ம் ஆண்டு நடந்த போட்டியில் பூசணிக்காயில் இவர்கள் செய்த ஹைடெக் சிற்பங்கள், ஒவ்வொன்றும் அசத்தலோ அசத்தல், இதன் வீடியோப் பதிவை https:/youtu.be/pF0KLtfIbSw என்ற இணைப்பில் பார்க்கலாம். அதுசரி, விஞ்ஞானிகளுக்கும் ரிலாக்ஸ் தேவைதானே!

சுட்டி ஸ்டார் நியூஸ்

வா.ரியாசக்தி, கீதாஞ்சலி அகில இந்திய மேல்நிலைப் பள்ளி, ஈரோடு.

நாயும் பூனையும் - பூனையும் நாயும்! 

சுட்டி ஸ்டார் நியூஸ்

பொதுவாக, பூனையும் நாயும் எதிரிகள் போல விரட்டிக்கொள்ளும். அபூர்வமாக, சில இடங்களில் இரண்டும் ஒன்றாக இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், நாய்களைப் போன்றே நடந்துகொள்ளும் பூனைகளைத் தெரியுமா? அவற்றில் ஒன்றுதான் அபிஸ்னியன் பூனை (Abyssinian Cat). இந்த வகைப் பூனை, எத்தியோப்பியாவின் அபிசீனியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இவை, தண்ணீரில் விளையாடுகின்றன. நாய்களோடும் அதிகளவில் பழகுகின்றன. நாய்களைப் போன்று, உரிமையாளர்கள் வந்தால், அவர்கள் மேல் ஏறி விளையாடி முத்தம் கொடுக்கின்றன. அதேபோல, சிபா ஷினு (Shiba Inu) என்னும் ஜப்பானிய நாய் வகை, பூனையைப் போன்று நடந்து கொள்ளும். இது குரைப்பது இல்லை. பூனையைப் போன்று மெல்லிய ஒலியை ஏற்படுத்தும். பூனைகளைப் போல அவ்வப்போது உடலைச் சுத்தம் செய்துகொள்ளும்.

சுட்டி ஸ்டார் நியூஸ்

வி.தனேஷ், ஸ்ரீ நாராயண மிஷன் மேல்நிலைப் பள்ளி, மேற்கு மாம்பலம், சென்னை.