Published:Updated:

ஓவியத்தில் அசத்தும் மெர்சி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஓவியத்தில் அசத்தும் மெர்சி!
ஓவியத்தில் அசத்தும் மெர்சி!

ஞா.சக்திவேல் முருகன் - வீ.நாகமணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

த்திய அரசுத் துறை சார்பில் நடத்தப்படும் ஓவியப்போட்டியில் தேசிய விருதுகளை வாங்கி இருக்கிறார் எமோரா மெர்சி.  திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள ஜெயராஜேஷ் மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மெர்சி கடந்த மாதம் மரபுசாரா எரிசக்தி துறை நடத்திய தேசிய அளவிலான ஓவியப்போட்டியில் முதல் பரிசை வென்றார். பரிசுத்தொகையாகப் பதினைந்தாயிரம் ரூபாய், லேப்டாப், கோப்பைக் கேடயத்துடன் சென்னைக்கு வந்திருந்தார். அவரைச் சந்தித்துப் பேசினோம்.

ஓவியத்தில் அசத்தும் மெர்சி!

“பெட்ரோலை சேமித்து இயற்கையினை எப்படிப் பாதுகாப்பது என்பதை அடிப்படையாக வைத்துதான் ஓவியத்தை வரைந்து முதல் பரிசினை பெற்றிருக்கிறேன். இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத்தை இயக்குபவர்கள் அனைவரும் டிராபிக்கில் இரண்டு நிமிடம், மூன்று நிமிடம் காத்திருக்க வேண்டும் என்று தெரிந்தும் இன்ஜினை இயக்கத்திலேயே வைத்திருப்பார்கள். இதன் மூலம் எரிபொருள் இழப்பு ஏற்படுகிறது, கூடுதலாகக் காற்றும் மாசுபடுகிறது.

தற்போது நாட்டின் முக்கியத் தலைநகரங்களில் மட்டுமே சிஎன்ஜி ஏரிவாயுஉபயோகப்படுத்தப்படுகிறது. ஆனால், இன்னும் பிற நகரங்களில் இதற்கான பயன்பாடு வராமல் இருக்கிறது. சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம், பயோகேஸ் போன்றவற்றை எல்லாம் பயன்படுத்தும்போது இயற்கை சூழ்நிலை மாறாமல் இருக்கும். ஒரு கிலோ மீட்டர் தூரம் என்றால் நடந்தும், இரண்டு கிலோ மீட்டர் தூரம் என்றால் சைக்கிளிலும், மூன்று கிலோ மீட்டர்  தூரம் என்றால் மாநகரப் பேருந்தையும் பயன்படுத்த வேண்டும். இதனை எல்லாம் என்னுடைய ஓவியத்தில் கொண்டு வந்து பரிசினை வென்றிருக்கிறேன்.” என்றவர், “இயற்கை இருந்தால் மட்டும் பசுமையான காற்று கிடைக்கும்” என்கிறார் மெர்சி.

ஓவியக் கலையை எப்படிக் கற்றுக்கொண்டீர்கள்?


“அப்பா அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருக்கிறார். அம்மா வீட்டுப் பணியினை செய்து வருகிறார்.  அப்பாவும் ஓவியர்தான் அவர் வரைவதைப் பார்த்து நானும் வரையக் கற்றுக்கொண்டேன். படிப்பு நேரத்தைத் தவிர, மீதமுள்ள நேரத்தில் ஏதேனும் ஒரு கான்செஃப்ட் வைத்து வரைந்து பார்ப்பேன். வீட்டிலும், பள்ளியிலும் போட்டியில் கலந்துகொள்ளவும், வரையவும் நல்ல முறையில் ஊக்கம் கொடுத்தார்கள். இதன் மூலம் எந்தவிதமான சிரமமும் இல்லாமல் வரைய முடிகிறது” என்கிறார். 

ஓவியத்தில் அசத்தும் மெர்சி!

உங்களுடன் போட்டியில் கலந்துகொண்டவர்கள் பற்றி சொல்லுங்களேன்...

“தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 4 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள். இதில் இருந்து ஜூனியர் பிரிவில் 50 பேரையும், சீனியர் பிரிவில் 50 பேரையும் தேர்ந்தெடுத்தார்கள். நான் சீனியர் பிரிவில் தேர்வாகி, சென்னையில் நடந்த போட்டியில் கலந்துகொண்டேன். இதில் முதல் பரிசினை பெற்றேன். தமிழ்நாட்டில் இருந்து முதல், இரண்டாவது, மூன்றாவது பரிசு பெற்றவர்களை டெல்லிக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு மொத்தம் 108 பேர் கலந்துகொண்டார்கள். இதிலும் நான் முதல் பரிசினை பெற்றிருக்கிறேன்” என்று மகிழ்ச்சி பொங்கச் சொன்னார்.

இந்தப் போட்டியைத் தவிர வேறு என்னென்ன போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்?


“தேசிய அளவில் பவர்கிரிட் நிறுவனம் நடத்திய  தேசிய அளவிலான போட்டியிலும் முதல் பரிசினை வென்றிருக்கிறேன். இதைப்போலவே, மத்திய அரசின் நீர்வளத் துறை நடத்திய போட்டியிலும் மாநில அளவில் முதல் பரிசிசையும், தேசிய அளவில் மூன்றாவது பரிசையும் பெற்றிருக்கிறேன். இதுவரை, தேசிய அளவில் நான்கு போட்டியிலும், மாநில அளவில் நான்கு போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கிறேன். இதுவரை மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் பரிசுப்பொருளைப் பெற்றிருக்கிறேன். இதைத்தவிர, மாவட்ட அளவிலும் பல பரிசுகளை வாங்கி குவித்து இருக்கிறேன்” என்கிறார்.

படிப்பில் எப்படி?


“வகுப்பில் முதல் மூன்று ரேங்க்கில் இருக்கிறேன். படித்து முடித்து மாவட்ட ஆட்சித் தலைவராக வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது” என்றார் சந்தோஷத்துடன். தெரிவித்த மெர்சி, “பொதுவாக, மாநில அளவிலானப் போட்டியில் ஒரே பள்ளிக்கு இரண்டு பரிசுகள் கிடைப்பது அபூர்வம். எங்கள் பள்ளியில் இருந்து ஜூனியர் பிரிவில் ஐந்தாம் வகுப்பினைச் சேர்ந்த சிவ்நரேன் கணேஷ்வர் முதல் பரிசையும் தேசிய அளவில் ஆறுதல் பரிசையும் பெற்றிருக்கிறார்” என்று கணேஷ்வரை அறிமுகப்படுத்தினார்.

இருவரும் பல்வேறு விருதுகள் பெற்று தமிழகத்துக்குப் பெருமை சேர்க்க வாழ்த்துகள் சொல்லி கிளம்பினோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு