Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

Published:Updated:
சுட்டி ஸ்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
சுட்டி ஸ்டார் நியூஸ்

ஒரிகாமி தெரியும், கிரிகாமி தெரியுமா? 

சுட்டி ஸ்டார் நியூஸ்

‘கிரிகாமி’ என்பது ஒரிகாமியின் மாறுபட்ட வடிவமாகும். ஜப்பானிய மொழியில் ‘கிரி’ என்றால் ‘வெட்டு’ என்றும் ‘காமி’ என்றால், ‘தாள்’ என்றும் பொருள். எனவே, இந்த கிரிகாமியில் தாளை வெட்டுவது அனுமதிக்கப்படுகிறது.  

சுட்டி ஸ்டார் நியூஸ்

கிரிகாமி செய்ய மடிக்கப்பட்ட தாளில், சில வெட்டுகளுடன் பிரிக்க வேண்டும். ஒரிகாமிக்கும் கிரிகாமிக்கும் வித்தியாசம் உண்டு. ஒரிகாமியில் மடிப்புகளாலேயே உருவத்தை உருவாக்க வேண்டும். அதில் கத்தரிக்கோலையோ, பசையையோ பயன்படுத்தக்கூடாது.

சுட்டி ஸ்டார் நியூஸ்

வி.தனேஷ், ஸ்ரீ நாராயண மிஷன் மேல்நிலைப் பள்ளி, மேற்கு மாம்பலம், சென்னை.

நம் நாடு... நம் மாடு! 

சுட்டி ஸ்டார் நியூஸ்

‘தேசிய விலங்குகள் நல மரபணு ஆதார அமைப்பு' இந்தியாவில் இருக்கும் 30-க்கும் மேற்பட்ட நாட்டு மாட்டு இனங்களை அடையாளப்படுத்திப் பட்டியலிட்டுள்ளது. கறவை ரகங்கள், உழவு ரகங்கள், உழவு மற்றும் கறவைக்கான ரகங்கள் என்று வகைப்படுத்தி இருக்கிறார்கள். கறவை ரகங்களில் சாஹிவால், கிர், தார்பார்க்கர் எனப் பல உள்ளன. இந்தியாவின் பழைமையான மாட்டு இனங்களில், குஜராத் பகுதியின் காங்கிரேஜ் என்ற இனமும் இடம்பெற்றுள்ளது. மன்னர் கால நாணயங்களில் காங்கிரேஜ் மாட்டின் கொம்புப் பகுதியை உருவமாகப் பதித்துள்ளனர். தமிழ்நாட்டிலும் காங்கேயம், உம்பளச்சேரி, பர்கூர் எனப் பல மாடுகள் புகழ்பெற்றவை. நம் மாடுகளின் அருமையை உணர்ந்து அவற்றைக் காப்போம்.

சுட்டி ஸ்டார் நியூஸ்

வி.சாரதி, அரசு மேல்நிலைப் பள்ளி, அளே தருமபுரி, தருமபுரி.

எஸ்ஸ்ஸ்...கலேட்டர்! 

சுட்டி ஸ்டார் நியூஸ்

‘எஸ்கலேட்டர்' எனப்படும் நகரும் படிக்கட்டுகள், வயதானவர்கள் மற்றும் படியேற சிரமப்படுபவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். ரயில் நிலையங்கள், மால்கள், நிறுவனங்கள் என மக்கள் புழங்கும் இடங்களில் இந்த நகரும் படிக்கட்டுகளைப் பார்த்திருப்பீர்கள். அதிகபட்சம் ஒன்றிரண்டு நிமிடங்கள் பயணிக்கும் வகையில் இருக்கும். ஆனால், மத்திய சீனாவின் ஹீபே நகரில், 688 மீட்டர் நீளத்துக்கு உலகின் மிக நீளமான நகரும் படிக்கட்டுகளை அமைத்துள்ளனர். என்ஷி கேன்யன் (Enshi Canyon) எனப்படும் பள்ளத்தாக்கை காண வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக,  இந்த எஸ்கலேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. 18 நிமிடங்கள் இந்த எஸ்கலேட்டரில் நகர்ந்தவாறு பள்ளத்தாக்கின் இயற்கை அழகை ரசிக்கலாம்.

சுட்டி ஸ்டார் நியூஸ்

ஆ.பாஸ்டின் ஜோயல், தே.பிரித்தோ மேல்நிலைப் பள்ளி, தேவகோட்டை.

வெள்ளையரை வெளியேற்றுவோம்! 

சுட்டி ஸ்டார் நியூஸ்

ம் நாட்டின் சுதந்திரத்துக்காக நம் தாத்தா, பாட்டிகள் போராடி, வெள்ளையர்களை வெளியேற்றினார்கள். நமக்கு இப்போது, சில வெள்ளையர்களை வெளியேற்றவேண்டிய கடமை இருக்கிறது. சீனி, மைதா, உப்பு போன்றவையே அந்த வெள்ளையர்கள். இவற்றை நம் உணவு முறையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து வெளியேற்ற வேண்டும். ஏனெனில், சீனி என்கிற சர்க்கரை, உடலில் உள்ள கால்சியத்தைச் சிதைத்து, சர்க்கரை நோய்க்கு அடித்தளம் அமைக்கிறது. மைதா மாவு, மலச்சிக்கலை உண்டாக்குகிறது. நம் முன்னோர்கள் காலத்தில் இவை கிடையாது. எனவே, சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம், மைதாவுக்குப் பதிலாக கம்பு, கேழ்வரகு, சோளம் போன்றவற்றைப் பயன்படுத்துவோம்.

சுட்டி ஸ்டார் நியூஸ்

வே.கேசவன், ஸ்ரீ சங்கரா மேல்நிலைப் பள்ளி, திருவான்மியூர், சென்னை.

வழி நில்லா விமானம்! 

சுட்டி ஸ்டார் நியூஸ்

த்தார் தலைநகர் தோகாவில் இருந்து இடையில் எங்கும் தரையிறங்காமல் நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்துக்கு விமானம் இயக்கப்படும் எனக் கடந்த ஆண்டு கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி, பிப்ரவரி 6-ம் தேதி, தோகாவில் இருந்து கிளம்பிய விமானம் 16 மணி நேரம் 23 நிமிடங்களில் 14,535 கிலோமீட்டர் வான்வழி பயணித்து, ஆக்லாந்து விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதன் மூலம், வான் வழி போக்குவரத்தில் இடையில் இறங்காமல் மிக நீண்ட தூரம் பயணித்த விமானம் என்ற பெயரைப் பெற்றது. 

சுட்டி ஸ்டார் நியூஸ்

அ.ஜாவித் அஹ்மத், மீனாட்சி இராமசாமி மேல்நிலைப் பள்ளி, தத்தனூர்.

ஸ்மார்ட் சீப்பு 

சுட்டி ஸ்டார் நியூஸ்

ழகு சாதனங்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் லோரியல் நிறுவனம், ஸ்மார்ட் சீப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்தச் சீப்பினால் தலையை வாரும்போது எழும் அதிர்வு மற்றும் ஒலியைக்கொண்டு, தலைமுடியின் தன்மையை நமது ஸ்மார்ட்போனுக்கு செய்தியாக அனுப்பும். தலையை விருப்பத்துக்கு ஏற்ப வாருவதற்கு அழுத்தத்தையும் கொடுக்கும். லாஸ் வேகாஸில் நடந்த கண்காட்சியில் இந்தச் சீப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விற்பனைக்கு வரும் என்றும் லோரியல் நிறுவனம் அறிவித்துள்ளது.

சுட்டி ஸ்டார் நியூஸ்

சு.லலிதா ஸ்ரீநிதி, இராணியார் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை.