Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

முதல் ஓட்டுநர் உரிமம்

சுட்டி ஸ்டார் நியூஸ்

விமானம் ஓட்ட, முதன்முதலில் ஓட்டுநர் உரிமம் பெற்றவர் யார்?  இந்தக் கேள்விக்கு நாம், விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதரர்களில் ஒருவர் என்றுதானே நினைத்திருப்போம். ஆனால், அது முற்றிலும் தவறு. வில்லியம் பி.மெக் கிராக்கன் என்பவர்தான் அது. அவரும்கூட, விமானம் கண்டுபிடிக்கப்பட்டு 24 வருடங்களுக்குப் பிறகுதான், ஓட்டுநர் உரிமம் பெற்றார். அமெரிக்க அரசாங்கம், 1927-ம் ஆண்டு அவருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கியது. அவரது உரிமத்தின் எண் 1.

சுட்டி ஸ்டார் நியூஸ்

வா.ரியாசக்தி, கீதாஞ்சலி அகில இந்திய மேல்நிலைப் பள்ளி, ஈரோடு.

பழங்கால விளையாட்டுகளின் பின்னணி!

சுட்டி ஸ்டார் நியூஸ்

• இருக்கும் இடத்தில் எடுத்து, இல்லாத இடத்தில் கொடுக்கும் குணம் வளர, பல்லாங்குழி.

• ஏற்ற இறக்கம் இரண்டும் உள்ளதே வாழ்க்கை என்பதை உணர்த்த, பரமபதம்.

• கூட்டல், பெருக்கல் கணக்கைக் களிப்புடன் கற்றுக்கொள்ள, கில்லி.

• வெட்டி வெளியே எறிந்தாலும் மீண்டும் முயன்று, தொடங்கி முன்னேற தாயம்.

• எந்த வழியும் இல்லாதபோதும் இறுதிவரை போராடும் உறுதியான மனம் பெற, சதுரங்கம்.

• சமமாக இல்லாதபோதும் சாதிக்கத் தூண்டும் சக்தியைப் பெற, நொண்டி.

• மறைந்து ஒளிந்து கொள்பவர்களைக் கண்டுபிடிக்கவும், நாம் மாட்டிக் கொள்ளாமல் மறைந்திருக்கவும் கண்ணாமூச்சி.

சுட்டி ஸ்டார் நியூஸ்

பி.யாழ் அரசி, சென்னை  மேல்நிலைப் பள்ளி கிண்டி, சென்னை.

சிலந்தியின் சிறப்புகள்

சுட்டி ஸ்டார் நியூஸ்

சிலந்திகள், எந்த சீதோஷ்ண நிலையிலும் வாழக்கூடியவை. சில சிலந்திகள் மூன்று அங்குல நீளம் உள்ளவை. ராட்சச சிலந்திகள், 13 வருடங்கள் வரை வாழக்கூடியவை. ஆனால், சாதாரண சிலந்திகளுக்கு ஆயுள் மிகவும் குறைவு. அவை ஒரு வருடமே வாழும். சிலந்திகள் பூச்சிகள் இனத்தைச் சேர்ந்தவை அல்ல. அவை ‘அரச்சனீட்ஸ்’ என்னும் தனிப்பிரிவைச் சேர்ந்தவை. சிலந்திக்கு எட்டுக் கால்களும் எட்டுக் கண்களும் உள்ளன. அவற்றின் உடல் இரண்டு பாகங்களாக உள்ளன.

சுட்டி ஸ்டார் நியூஸ்ஒரு சிலந்தியின் வலையின் இழையை நீட்டினால், 2000 மைல் நீளத்துக்கு வரும். சிலந்திகள், தினமும் சூரியன் உதிப்பதற்கு முன்பாகப் புதிய வலையைப் பின்னுகின்றன.

சுட்டி ஸ்டார் நியூஸ்

சு.உ.சௌபாக்யதா, அமிர்த வித்யாலயம், திருச்சி.

சுற்றுச்சூழலைக் காக்கும் வண்டி!

சுட்டி ஸ்டார் நியூஸ்

ன்று பெரும்பாலான வாகனங்களில்,  பயன்படுத்தும் எரிபொருள்களான பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை மூலம் அதிக அளவில் புகை வெளிப்பட்டு  சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

இதனால் ஜப்பானைச் சேர்ந்த ஹோண்டா நிறுவனம் ‘அழுத்தப்பட்ட  இயற்கை எரிவாயு’வில் (Compressed natural gas) இயங்கும், சி.என்.ஜி ஆக்டிவா என்ற, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத வாகனத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. உத்தேசமாக 75,000 ரூபாயில் இருந்து வாகனத்தின் விலை ஆரம்பிக்கிறது. இந்த சி.என்.ஜி எரிபொருள் சுற்றுச்சூழலுக்குக் கேடுவிளைவிக்காது. புகையும் வராது. இதனால் பெட்ரோலில் ஓடும் போது ஆகும் செலவை விட சி.என்.ஜி-யில்  ஓடும்போது ஆகும் செலவு மிகவும் குறைவு. மேலும், ஒரு கிலோ சி.என்.ஜி-யில் சுமார் 120 கி.மீ வரை மைலேஜ் தரும் என்று சொல்லப்படுகிறது.  

சுட்டி ஸ்டார் நியூஸ்

வி.தனேஷ், ஸ்ரீ நாராயண மிஷன் மேல்நிலைப் பள்ளி, மேற்கு மாம்பலம், சென்னை.

நம்ம ஃப்ரெண்டு ரோபோ

சுட்டி ஸ்டார் நியூஸ்

ப்பானின் மிகப்பெரும் எலெக்ட்ரானிக் நிறுவனமான, சோனி, மனிதர்களைப் போன்ற, எஸ்.டி.ஆர் - 4 எக்ஸ் என்னும் ரோபோவை அறிமுகம்செய்துள்ளது. அது ஆடும், பாடும், மனிதர்களின் முகங்களை நினைவில் பதிந்து வைத்துக்கொள்ளும். 58 செ.மீ உயரமுள்ள இந்த ரோபோ, மற்ற ரோபோக்களுக்கு ஏற்ப, தனது இயக்கத்தையும் குரலையும் மாற்றிக்கொள்ளும். இதன் விலை, ஓர் ஆடம்பரக் காரின் விலைக்குச் சமம்.

சுட்டி ஸ்டார் நியூஸ்

சு.லலிதா ஸ்ரீநிதி, இராணியார் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை.

ஏழு பூமிகள்! 

சுட்டி ஸ்டார் நியூஸ்

ளவில் பூமியைப் போன்று இருக்கும் ஏழு கோள்களின் அணிவகுப்பை வானியலாளர்கள்கண்டுபிடித்திருக்கிறார்கள். அக்குவாரியஸ் விண்மீன் கூட்டத்தில், மங்கலாகத் தெரியும் ‘டிராப்பிஸ்ட் - 1’ என்ற சிறிய விண்மீன் தொகுப்பைச் சுற்றி வருபவை இந்தக் கோள்கள்.

மனித இனம் உயிர் வாழ்வதற்குத்  தேவையான தட்பவெப்ப நிலையையும் நீரையும் இந்தக் கோள்கள் கொண்டிருக்கலாம் என்று வானியலாளர்கள் கருதுகின்றனர்.

சூரியக் குடும்பத்துக்கு அப்பால், உயிர் வாழ்க்கையின் சாத்தியங்களைத் தேடிக்கொண்டிருக்கும் வானியலாளர்களின் நம்பிக்கையை  மேலும் அதிகரிக்கிறது இந்தக் கண்டுபிடிப்பு.

சுட்டி ஸ்டார் நியூஸ்

க.பாலமுருகன், அரசினர் உயர்நிலைப் பள்ளி சிறுகளத்தூர் (தெற்கு), நந்தம்பாக்கம். சென்னை.

ட்ரெட் மில் சைக்கிள்

சுட்டி ஸ்டார் நியூஸ்

ர் அறைக்குள் இருந்துகொண்டு ட்ரெட்மில்லில் நடப்பது கொஞ்சம் அலுப்பூட்டக்கூடிய விஷயம். பூங்கா, கடற்கரை போன்ற இடங்களில் ட்ரெட்மில்லில் நடந்தால் எவ்வாறு இருக்கும் என்று ப்ரூயின் பெர்க்மேஸ்டர் சிந்தித்தார். ‘‘நான் இப்படி யோசித்தேனே தவிர, அதை எப்படிச் செய்வது என்ற சிந்தனை என்னிடம் இல்லை. கொஞ்ச  காலம் இதை மறந்தும் போனேன். மறுபடியும் நினைவுக்கு வந்தபோது,  தீவிரமாக இறங்கிவிட்டேன். சில ஆண்டுகள், பல விதங்களில் முயற்சி செய்துபார்த்தேன்.

இறுதியில், சைக்கிள் ஓட்டிக்கொண்டே ட்ரெட்மில்லில் நடக்கும் விதமாக எலெக்ட்ரிக் சைக்கிளை உருவாக்கி விட்டேன். என் கண்டுபிடிப்புக்கு LOPIFIT என்று பெயர் சூட்டினேன். இந்த சைக்கிள் மூலம் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் பயணிக்கலாம். அப்படியே ட்ரெட்மில்லில் நடந்து, உடற்பயிற்சியையும் முடித்துக்கொள்ளலாம். இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால், நேரம் மிச்சமாகிறது. நடப்பது அத்தனை சுவாரஸ்யமாக மாறிவிடும். சைக்கிளை நிறுத்துவதற்குத் தனியாகவும் ட்ரெட்மில்லை நிறுத்துவதற்குத் தனியாகவும் இரண்டு பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன. யார் வேண்டுமானாலும் இந்த சைக்கிளை இயக்குவது எளிது” என்கிறார், ப்ரூயின் பெர்க்மேஸ்டர்.

சுட்டி ஸ்டார் நியூஸ்

அ.ஜாவித் அஹ்மத், மீனாட்சி இராமசாமி மேல்நிலைப் பள்ளி, தத்தனூர்.