Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

தெற்கு ஸ்பெயின் நகரமான ‘செவாலே’வில் உள்ள சேர்ந்த மெட்ரோபோல் பராசோல் (Metropol Parasol) என்கிற நிறுவனத்தால் 2011-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கட்டடம்தான், மரப்பொருள்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கட்டடம். ‘ஜர்கன் மேயர்’  என்கிற ஸ்பெயின் நாட்டுக்காரர், இந்தக் கட்டடத்தை வடிவமைத்தார். உலகெங்கும் இருக்கும் 50 புதுமையான கட்டடங்களில், ஆறு கட்டடங்களை வடிவமைத்தவர் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு. செவாலே நகரத்தின் மத்தியில் மியூஸியம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் பராசோல் நிறுவனம் ஈடுபட்டபோது, நூற்றுக்கும் மேற்பட்ட மாதிரிகளை ஜர்கன் மேயர் அனுப்பினார். அதில் தேர்வானதுதான் இந்தக் கட்டடம். ஸ்பெய்ன் நாட்டு மக்கள் மர வீடுகளை அதிகம் விரும்புபவர்கள். இப்போது, உலகம் முழுவதும் அனைவரையும் கவர்ந்த கட்டடமாக இது உள்ளது. 

சுட்டி ஸ்டார் நியூஸ்

அ.ஜாவித் அஹ்மத், மீனாட்சி இராமசாமி மேல்நிலைப் பள்ளி, தத்தனூர்.

சுட்டி ஸ்டார் நியூஸ்

சியாவின் மிகப்பெரிய முதல் மிதிவண்டி நெடுஞ்சாலை, உத்தரப்பிரதேசத்தில் தொடங்கப்பட்டுள்ளது. எட்டாவா (Etawah) மற்றும் ஆக்ராவுக்கு இடையில், 207 கிலோமீட்டர் வரை நீள்கிறது இந்த மிதிவண்டிகளுக்கான நெடுஞ்சாலை. 2016 நவம்பரில், உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், இந்த நெடுஞ்சாலையைத் திறந்துவைத்தார். இந்த நெடுஞ்சாலை 92 கிராமங்களைக் கடப்பதால், கிராம மக்களும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். பல கோயில்களைக்கொண்ட சுற்றுலாத் தலங்களையும் கடந்துசெல்கிறது. மிதிவண்டி நெடுஞ்சாலைகள் மூலம், மிதிவண்டி ஓட்டுபவர்களை ஊக்குவிப்பதுடன் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம். 

சுட்டி ஸ்டார் நியூஸ்

வி.தனேஷ், ஸ்ரீ நாராயண மிஷன் மேல்நிலைப் பள்ளி, மேற்கு மாம்பலம், சென்னை.

சுட்டி ஸ்டார் நியூஸ்

புகழ்பெற்ற லூனி டூன்ஸ் கேரக்டர்களில் ஒன்று, ரோடு ரன்னர் (Road Runner). இது, வட அமெரிக்காவின் பாலைவனப் பகுதிகளில் காணப்படும் ஒரு பறவை. குயில் குடும்பத்தைச் சேர்ந்த இதை, ‘தரைக்குயில்’ என்று சொல்லலாம். 52 முதல் 62 சென்டிமீட்டர் நீளம் இருக்கும். இந்தப் பறவையின் சிறப்பு, நீளமான வாலும் தரையில் ஓடும் வேகமும்தான். சுமார் 60 சென்டிமீட்டர் வரை வளர்ந்திருக்கும் வாலைத் தூக்கிக்கொண்டு மணிக்கு 32 கிலோமீட்டர் வேகத்தில் நிலத்தில் ஓடும் அழகே அழகு. அதைப் பார்த்துத்தான் கார்ட்டூன் கேரக்டராக உருவாக்கி, நம்மை வயிறு குலுங்கச் சிரிக்கவைத்தார்கள். இதன் விருப்பமான உணவு ஓணான், சிலந்தி போன்ற உயிரினங்களே. 

சுட்டி ஸ்டார் நியூஸ்

சு.லலிதா ஸ்ரீநிதி, இராணியார் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை.

சுட்டி ஸ்டார் நியூஸ்

லகின் எட்டாவது கண்டம், நியூசிலாந்து நாட்டின் அருகில் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதுவரை ஆசியா, ஆப்பிரிக்கா,  வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அன்டார்ட்டிகா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா என ஏழு கண்டங்கள் உலகில் இருக்கின்றன. கண்டங்கள் சம்பந்தமாகத் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த நியூசிலாந்து ஆராய்ச்சியாளர்கள், உலகின் எட்டாவது கண்டத்தைக் கண்டறிந்துள்ளனர். ஸீலாண்டியா என அழைக்கப்படும் அந்தக் கண்டத்தின் ஒரு சிறிய பகுதி மட்டும் நியூசிலாந்து அருகில், கடலுக்கு மேலாகத் தெரிவதாகக் கூறுகிறார்கள். இந்தக் கண்டத்தின் பரப்பளவு, 5 மில்லியன் சதுரகிலோமீட்டர் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சுட்டி ஸ்டார் நியூஸ்

இரா.அனிதா புனித மரியன்னை மகளிர் மேல் நிலைப் பள்ளி, சேலம்.

சுட்டி ஸ்டார் நியூஸ்

மேற்கு மலைத்தொடரில் சிறிய வகைத் தவளைகளைக் கண்டுபிடித்துள்ளனர், இந்திய விஞ்ஞானிகள். சிறியது என்றால், அதிகபட்சம் 15 மில்லிமீட்டரே இருக்கும். அதாவது, நமது கட்டைவிரல் நகத்தில் உட்காரவைத்துவிடலாம். டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள்,  பலநாள் தேடலில் இதைக் கண்டுபிடித்துள்ளனர். இரவுத் தவளைகள் வகையைச் சேர்ந்த இவற்றில், மொத்தம் 28 வகைகள் உள்ளன. சிறிய வகைத் தவளைகள் பெரும்பாலும் சிற்றாறுகளில் வாழும். ஆனால், இப்போது கண்டுபிடிக்கப்பட்டவை, அடர்ந்த காடுகளில் ஈரப்பதமான இடங்கள் மற்றும் இலைகளில் வாழ்பவை. 

சுட்டி ஸ்டார் நியூஸ்

வே.கேசவன், ஸ்ரீ சங்கரா மேல்நிலைப் பள்ளி, திருவான்மியூர், சென்னை.