வயல்கள் இல்லாத நாடு

உலகில் வளர்ச்சிபெற்ற நாடுகளில் ஒன்று, சிங்கப்பூர். ஆனால், இங்கு வயல்வெளிகள் கிடையாது. மின்னணுப் பொருள்கள், இயந்திரங்கள், மருந்துப் பொருள்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலமும் சுற்றுலா வருமானம் மூலமுமே சிங்கப்பூர் மாபெரும் வளர்ச்சிபெற்றுள்ளது. இந்த நாட்டு மக்களுக்கான உணவுத் தேவையை மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகள் தான் பூர்த்திசெய்கின்றன. வயல்வெளிகள் இல்லாவிட்டாலும், Hydroponics Plants எனப்படும் மண்ணில்லாத விவசாயம் ஆங்காங்கே நடைபெறுகின்றது.

சு.உ.சௌபாக்யதா, அமிர்த வித்யாலயம், திருச்சி.

ஆல்பாபெட் பலூன்!

இணையம் என்கிற இன்டர்நெட் இல்லாமல் இனி, நமது ஒரு நாளின் எந்த ஒரு செயலையும் செய்ய முடியாது என்கிற அளவுக்கு, இணையம் நம்மோடு இணைந்துவிட்டது. எனவே, இணையத்தை நமக்கு அளிக்கும் நிறுவனங்களும் புதிய புதிய முயற்சிகளுடன் நம்மை இன்னும் நெருங்க ஆரம்பித்துவிட்டன. உலகத்தின் எந்த மூலையில் இருப்பவர்களுக்கும் மிக எளிதாக இணையத் தொடர்பைப் பெற வேண்டும் என்பதற்காக, கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட், ‘புராஜெக்ட் லூன்' என்கிற பலூனைப் பறக்கவிட்டுள்ளது. இதற்குச் செல்லப் பெயராக, ‘பெய்லி ஜீன்' என்று பெயரிட்டுள்ளது. உலகம் முழுவதும் இணைய வசதி குறைவான பல இடங்களில், வானில் பறந்தவாறு இருக்கும் இந்தப் பலூன்கள், மக்களுக்கான இணையத் தேவையைப் பூர்த்திசெய்யும்.

ஆர்.யாழினி, அன்னை ஈவா மேரி கோக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர்.

போலீஸ்... போலீஸ்!

‘போலீஸ்’ என்கிற சொல்லுக்கு இரண்டு பொருள்கள் உள்ளன. ஒன்று, ‘போலிசியா’ என்ற கிரேக்கச் சொல். இதற்கு ‘காத்தல்' என்று பொருள். காவல்துறையை ஆங்கிலத்தில் போலீஸ் என்கிறோம். Protection of life in civil establishment என்பதன் சுருக்கமே Police.

சு.லலிதா ஸ்ரீநிதி, இராணியார் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை.

நான்கு வயது நூலகர்!

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருக்கும் ‘Library of Congress’ நூலகம்தான் உலகின் மிகப்பெரிய நூலகம். அந்த நூலகத்துக்கு, மேரி அரானா என்ற நான்கு வயது குட்டிப் பெண் இரண்டு வயது முதல் தனது தாயுடன் தொடர்ந்து வந்துள்ளார். இதுவரை 1000 புத்தகங்கள் வரை படித்தும் இருக்கிறார். அமெரிக்காவின் முதல் ஆப்பிரிக்க - அமெரிக்க நூலகரான கர்லா ஹைடனைச் சந்தித்த அரானாவின் தாய், இது பற்றிச் சொல்லி, அதற்கான வருகைப் பதிவுகளையும் காண்பித்துள்ளார். வியந்துபோன கர்லா ஹைடன், அரானாவைப் பெருமைப்படுத்தும் விதமாக, லைப்ரரி ஆஃப் காங்கிரஸின் ஒரு நாள் நூலகராக அவரை நியமித்து, சிறப்புச் செய்துள்ளார்.

பா.மனோஜ் குமார், அணுவாற்றல் மையப் பள்ளி, கல்பாக்கம்.

துவர்ப்பு + இனிப்பு = நெல்லிக்காய்

நெல்லிக்காயைச் சாப்பிடும்போது முதலில் துவர்ப்பாகவும் தண்ணீர் குடித்த பிறகு இனிப்பாகவும் இருப்பது ஏன் தெரியுமா? நெல்லிக்காயில் ‘தனின்’ என்ற ரசாயனம் உள்ளது. அது நீருடன் சேரும்போது, சில அமிலங்களும் குளுக்கோஸும் உண்டாகின்றன. அதுவே, இனிப்புச் சுவையை ஏற்படுத்துகிறது. இந்தக் குளுக்கோஸ் தண்ணீரில் கரையும்போது, வாயிலிருந்து வெப்பத்தை உறிஞ்சும். அதனால்தான், அப்போது குளிர்ச்சியையும் உணர்கிறோம்.

இர.ஐஸ்வர்யா, கலைமகள் கல்வி நிலையம் மெட்ரிக் மே.நி.பள்ளி, ஈரோடு.

தாயத்துப் பின்னணி!

கிராமப்புறங்களில், குழந்தைகளின் இடுப்பில் தாயத்து கட்டுவதைப் பார்த்திருப்பீர்கள். பெரியவர்களும் கைகளில், கழுத்தில் தாயத்து கட்டிக்கொண்டிருப்பார்கள். இதற்கு திருஷ்டி கழிய, நினைத்தது நிறைவேற எனப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இதன் பின்னணியே வேறு. குழந்தை பிறந்தவுடன், அதன் தொப்புள் கொடியைக் காயவைத்துப் பொடியாக்கி, தாயத்துக்குள் வைத்து, குழந்தைகளுக்குக் கட்டிவிடுவர். பிறகு குழந்தைகளுக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால், அந்தத் தாயத்தினுள் உள்ள பொடியைப் பாலிலோ, நீரிலோ கலந்துகொடுப்பார்கள். இது ஒரு மருத்துவ முறை. அதுதான் இப்போது, பெரிய பெரிய மருத்துவ மையங்களில் ‘ஸ்டெம்செல்’ என்கிற பெயரில் பிசினஸாக்கப்பட்டுவருகிறது.

ச.கமலி, வாலரைகேட் வித்யாலயம், திருச்செங்கோடு.

ஐஸ் வாட்டர் உஷார்!

கோடைக் காலத்தில், வெப்பத்தைத் தணிக்க குளிரூட்டப்பட்ட தண்ணீரைக் குடிப்பதையே பலரும் விரும்புவார்கள். ஆனால், இந்தக் குளிர்ந்த தண்ணீரைக் குடிப்பது, உடல் நலத்துக்குத் தீங்கையே அளிக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். குளிர்ந்த நீர், உடலில் செரிமான மண்டலத்தைப் பாதிக்கும், உடம்பில் இருக்கும் ஊட்டச்சத்துகளைக் குறைக்கும். இதயத்துடிப்பின் அளவையும் குறைக்கும். தொண்டைப் புண், வாய்ப் புண் நெஞ்சுச் சளி, மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படவும் வழிவகுக்கும். எனவே, பானையில் வைக்கப்படும் தண்ணீரைக் குடிப்பதே நல்லது. அதுவே, உடல் நலத்தைக் காக்கும்!

அ.ஜாவித் அஹ்மத், மீனாட்சி இராமசாமி மேல்நிலைப் பள்ளி, தத்தனூர்.