பொது அறிவு
Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

கலரில்லா காபி!   

சுட்டி ஸ்டார் நியூஸ்

காபியின் மணத்துக்கும் சுவைக்கும் மயங்கி, டம்ளர் டம்ளராகக் குடிப்பவர்கள் உண்டு. இவர்கள், தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்வதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, CLR CFF என்ற நிறமற்ற காபி. ஸ்லோவேக்கியாவைச் சேர்ந்த டேவிட் மற்றும் ஆடம் நேகி என்ற சகோதரர்கள் இந்த காபியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அரேபியன் காபி கொட்டைகள் மூலம் செயற்கை இனிப்புச் சேர்க்காமல் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, சர்க்கரையோ, பாலோ சேர்க்காமலே இதைக் குடிக்கலாம். அதிகம் காபி பருகுவதால் பற்களில் கறை படிவது போன்றவையும் இந்த காபியால் தவிர்க்கப்படும்.    

சுட்டி ஸ்டார் நியூஸ்

ச.மதுரவாணி

கண்ணீர்!  

சுட்டி ஸ்டார் நியூஸ்

பிறந்த குழந்தைகள் அழும்போது கண்ணீர் வடிவதில்லை. மனிதருக்குக் கண்ணீர் நாளங்கள் முழுமையாக உருவாகப் பல வாரங்கள் ஆகின்றன. அதன் பிறகே, கண்ணீர் வடிகின்றது. அதுவரை, கண்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான ஈரப்பசையை இயற்கை கண்களில் கொடுத்துள்ளது. அடிப்படை கண்ணீர் (Basal Tears), எதிர்வினைக் கண்ணீர் (Reflex Tears), உணர்ச்சி சார்ந்த கண்ணீர் (Emotional Tears) என கண்ணீர் வெளிப்பாட்டை மூன்று வகையாகப் பிரிக்கலாம். கண்ணீர் மிகச் சிறந்த கிருமிநாசினி. இதில் இருக்கும் ‘லைனோசம்’ என்ற ரசாயனம், கண்களைத் தாக்க நினைக்கும் பல நோய்க்கிருமிகளைக் கொல்கிறது.    

சுட்டி ஸ்டார் நியூஸ்

இர.ஐஸ்வர்யா, கலைமகள் கல்வி நிலையம் மெட்ரிக் மே.நி. பள்ளி, ஈரோடு.

செல்லத்துக்கு ஐஸ்கிரீம்!   

சுட்டி ஸ்டார் நியூஸ்

ம்மச் செல்ல நாயோடு வெளியே போகும்போது, நாமெல்லாம் ஜாலியா ஐஸ்கிரீம் சாப்பிட, நம்மையே ஏக்கத்துடன் பார்த்துட்டிருக்கும். கொடுக்க ஆசைப்பட்டாலும், நாம் சாப்பிடும் ஐஸ்கிரீம் நாய்களுக்கு ஏற்றதல்ல என்பதால், கொடுக்க மாட்டோம். இந்தக் குறையைத் தீர்க்க இப்போது நாய்களுக்கான ஐஸ்கிரீமும் வந்துடுச்சு. மெக்ஸிகோவைச் சேர்ந்த ஹேலாடாக்ஸ் என்ற நிறுவனம், இயற்கையான பழச்சுவைகளில் வெவ்வேறு வகைகளில் நாய்களுக்கான ஐஸ்கிரீம்களைத் தயாரித்துள்ளது. எளிதில் ஜீரணமாகும் வகையில் சுவையுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஐஸ்கிரீம்களை நாய்கள் விரும்பிச் சாப்பிடுகின்றன.   

சுட்டி ஸ்டார் நியூஸ்

வி.தனேஷ், ஸ்ரீ நாராயண மிஷன் மேல்நிலைப் பள்ளி, மேற்கு மாம்பலம், சென்னை.

கண்ணாடித் தவளைகள்!    

சுட்டி ஸ்டார் நியூஸ்

வளை இனங்களில் பலவகை உண்டு. அவற்றில் ஒன்று, கண்ணாடித் தவளைகள். இவற்றின் வயிற்றுப் பகுதி தோல், கண்ணாடியைப் போன்று உள்ளுறுப்புகளைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். இவற்றிலும் பல வகைகள் உள்ளன. சமீபத்தில், அமேசான் காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கண்ணாடித் தவளை ஒன்றின் நெஞ்சுப் பகுதியும் கண்ணாடியைப் போன்று உள்ளது. இதனால், தோலின் ஊடாக தவளையின் இதயப் பகுதியைக் காண முடிகிறது. இரண்டு சென்டிமீட்டர் அளவுக்கு இந்தத் தவளைகள் உள்ளன. இயற்கை, இன்னும் எத்தனை அதிசயங்களை தனக்குள் வைத்திருக்கிறதோ?

சுட்டி ஸ்டார் நியூஸ்

இரா.அனிதா