Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

Published:Updated:
சுட்டி ஸ்டார் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

வள்ளுவர் பிறந்தார்   

சுட்டி ஸ்டார் நியூஸ்!

திருவள்ளுவரின் உருவப் படத்தை வரைந்தது யார் தெரியுமா? பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவர் எப்படி இருப்பார் என்பது யாருக்கும் தெரியாது. அவருக்கு உருவம் கொடுக்க, பல ஓவியக் கலைஞர்கள் முயன்றனர்.  அதில் ஒருவர்தான், வேணுகோபால் சர்மா. பாரதிதாசனால் ஊக்குவிக்கப்பட்டு, திருவள்ளுவரின் உருவத்தை 1953 ஆம் ஆண்டு வரைந்தார்.  அந்த ஓவியத்தைப் பார்க்க, அண்ணாதுரையையும் அன்றைய முதலமைச்சர் பக்தவத்சலத்தையும் அழைத்தார். ஓவியத்தைப் பார்த்த பக்தவத்சலம், ‘இவர்தான் திருவள்ளுவர்’ என்று பரவசப்பட்டார். அன்றிலிருந்து, அந்த ஓவியமே அரசு அலுவலகங்களிலும் புத்தகங்களிலும் பயன்பட்டுவருகிறது. 

சுட்டி ஸ்டார் நியூஸ்!

வி.தனேஷ், ஸ்ரீ நாராயண மிஷன் மேல்நிலைப் பள்ளி, மேற்கு மாம்பலம், சென்னை.

ஆப்பிள் ஸ்டிக்கர்        

சுட்டி ஸ்டார் நியூஸ்!

நீங்கள் ஆப்பிள் பழங்களைக் கடையில் வாங்கும்போது, அதன்மீது ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரைப் பார்த்திருப்பீர்கள். வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்த வேகத்தில் அந்த ஸ்டிக்கரைப் பிய்த்துவிட்டு ஆப்பிளைக் கழுவிச் சாப்பிட்டிருப்பீர்கள்.  அந்த ஸ்டிக்கரில் முக்கியமான ஒரு செய்தி இருக்கிறது தெரியுமா?

PLU CODE (PRICE LOOKUP NUMBER) என்பது, நாம் சாப்பிடும் பழத்தைப் பற்றிய வரலாற்றையே சொல்கிறது. அதாவது, இந்த PLU CODE-ல் நான்கு இலக்க எண்கள் இருந்தால், அந்தப் பழம் ரசாயன உரத்தால் விளைந்தது என்று பொருள். ஐந்து இலக்கம் இருந்து, 8 என ஆரம்பித்தால், மரபணு மாற்றம் செய்யப்பட்டது என்று பொருள். ஐந்து இலக்கத்தோடு 9 என ஆரம்பித்தால், அது முழுக்க இயற்கையில் விளைந்தது என்று பொருள். ஆகவே, இனி பழத்தை வாங்கும்போது, இந்த விஷயங்களை அவசியம் கவனியுங்கள் நண்பர்களே...

புறாவுக்குப் புது மவுசு    

சுட்டி ஸ்டார் நியூஸ்!

ன்னர்கள் ஆட்சிக் காலத்தில், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குச் செய்திகளை அனுப்ப, தூதுவர்களாக  புறாக்கள் பயன்படுத்தப்பட்டன. பிறகு, அஞ்சல்துறை வந்தது. இப்போது, ஜி மெயிலும் வாட்ஸ்அப்பும் தகவல் பரிமாற்றத்தில் புரட்சியை ஏற்படுத்திவிட்டன. இதனால், சும்மா இருந்த புறாக்களுக்கு இப்போது புது மவுசு வந்துள்ளது. நகரத்தின் நெரிசல் அதிகமான இடங்களில், உயரமான கட்டடங்களின் மேற்பகுதி எந்த அளவுக்கு மாசடைந்துள்ளது என்பதைப் புறாக்கள்மூலம் கண்டறியலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். புறாவின் உடலில் நுண்ணிய மாசுக்கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்தி, உயரமான கட்டடங்களில் பறக்கவிட்டு, அதன்மூலம் மாசு அளவைக் கண்டறியப்போகிறார்களாம். இனி, புறாக்கள் பிஸியாகிவிடும்.  

சுட்டி ஸ்டார் நியூஸ்!

அ.ஜாவித் அஹ்மத், மீனாட்சி இராமசாமி மேல்நிலைப் பள்ளி, தத்தனூர்.

எண்மின் செம்மொழி!  

சுட்டி ஸ்டார் நியூஸ்!

ன்றைய டிஜிட்டல் உலகில், தினம் தினம் புதிய விஷயங்கள், கண்டுபிடிப்புகள் நம்மை ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. எத்தனை தொழில்நுட்பங்கள் வந்தாலும், அவற்றை நம் தமிழ் மொழியும் அழகாக ஏற்றுக்கொள்கிறது. அப்படியிருக்க, அவற்றின் பெயர்களும் தமிழில் இருந்தால் அழகுதானே... மலேசியாவில் நடந்த தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட சில புதிய வரவுகளின் கலைச் சொற்கள் இங்கே...

1. WHATSAPP - புலனம்

2. YOUTUBE - வலையொளி

3.
INSTAGRAM - படவரி

4. BLUETOOTH - ஊடலை

5.
WIFI - அருகலை

6. ONLINE - இயங்கலை

7. OFFLINE - முடக்கலை

8.
HARD DISK - வன்தட்டு

9. GPS - தடங்காட்டி

10. CCTV - மறைகாணி

11. LED - ஒளிர்விமுனை

12. 3D - முத்திரட்சி

13. PROJECTOR - ஒளிவீச்சி

14. SCANNER - வருடி

15. SMART PHONE - திறன்பேசி

16. SIMCARD - செறிவட்டை

17.
CHARGER - மின்னூக்கி

18. DIGITAL - எண்மின்

19. CYBER - மின்வெளி

20. SELFIE - தம்படம்

தரையில் அமர்ந்து சாப்பிடுவோம்...    

சுட்டி ஸ்டார் நியூஸ்!

டைனிங் டேபிள் முன் அமர்ந்து சாப்பிடுவதுதான் இன்றைய நாகரிகமாகக் கருதப்படுகிறது. ஆனால், தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. அப்படிச் சாப்பிடும்போது, நாம் அதிகம் குனிந்து நிமிர்வதால், அடிவயிற்றுத் தசைகள் நன்கு இயக்கப்படுகின்றன. இதனால், உணவு எளிதில் ஜீரணிக்கப்படும். தவிர, நம் வயிற்றுக்கு எந்த அளவு உணவு தேவை என்பதையும் வயிற்று நரம்புகள் வழியே மூளைக்கு உணர்த்தப்படுகிறது. ஆகவே, வீட்டில் நாம் சாப்பிடும்போது தரையிலேயே அமர்ந்து சாப்பிடுவோம். உடல் ஆரோக்கியத்தைக் காப்போம். 

சுட்டி ஸ்டார் நியூஸ்!

ச.கமலி, வாலரைகேட் வித்யாலயம், திருச்செங்கோடு.