பொது அறிவு
Published:Updated:

காகித நெசவாளி!

காகித நெசவாளி!
பிரீமியம் ஸ்டோரி
News
காகித நெசவாளி!

எம்.செய்யது முகம்மது ஆசாத்

காகித நெசவாளி!

ண்ணக் காகிதங்களைக் கத்தரித்து, பூக்கள் மற்றும் வித்தியாசமான வடிவங்களை உருவாக்குவது பலருக்குப் பழக்கம். பொதுவாக, இவை எல்லாமே சின்னச் சின்ன வடிவங்களாக இருக்கும். இதிலும், பாகுபலி போல பிரமாண்டத்தைக் கொண்டுவர முடியும் என நிரூபித்திருக்கிறார் குஞ்சான் அய்லாவாடி (Gunjan Aylawadi). ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், கணினிப் பொறியாளராகப் பணியாற்றும் இவரது சொந்த ஊர் புது டெல்லி. இவர் சொந்த முயற்சியில் கற்றுக்கொண்ட காகித நெசவுக் கலை,  அவரைப் புகழின் உச்சத்தைத் தொடவைத்துள்ளது.   

காகித நெசவாளி!
காகித நெசவாளி!

வண்ணக் காகிதங்களை நீள் துண்டுகளாகக் கத்தரித்தும் (குல்லிங்) ஒட்டியும் நெசவு நெய்வதுபோல இவர் உருவாக்கும் ஒவ்வொரு வடிவமும் வாரே வாவ் ரகம். 3D முறையிலும் இந்தக் காகித வடிவங்களை உருவாக்குகிறார். 2013-ம் ஆண்டிலிருந்து உருவாக்கிய இந்தக் கலைப் படைப்புகளை, சிட்னியின் பல்வேறு பகுதிகளில் கண்காட்சியாக வைத்துள்ளார். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விருதுகளையும் குவித்துள்ளார் குஞ்சான் அய்லாவாடி. தற்போது, ‘தியானத்துக்கான இடம்’ என்ற தலைப்பில் உருவாக்கிய காகிதப் படைப்புகளை, ஆஸ்திரேலியாவின் கோச்கெலா கேலரியில் ஜூன் 24 முதல் ஜூலை 23 வரை காட்சிப்படுத்துகிறார்.