பொது அறிவு
Published:Updated:

கலாம்சாட்

கலாம்சாட்
பிரீமியம் ஸ்டோரி
News
கலாம்சாட்

ர.சீனிவாசன் - படங்கள்:தே.அசோக் குமார்

கலாம்சாட்

‘கலாம்சாட்’ என்ற 64 கிராம் மட்டுமே எடை கொண்ட செயற்கைக்கோள் ஒன்றை, கார்பன் இழைகளால் 3D பிரின்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் தயாரித்திருக்கிறார் ரிஃபாத். அது விண்ணில் ஏவப்படும் நிகழ்வை, சென்னையில் ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ அலுவலகத்திலிருந்தே பார்க்கவும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.    

கலாம்சாட்

+2 மாணவரான ரிஃபாத் ஷாரூக், நாசா (NASA)நடத்தும் ‘Cubes in Space’ என்ற போட்டியில் ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற அமைப்பின் உதவியுடன் பங்குகொண்டு வெற்றிபெற்றிருக்கிறார்.

ஜூன் 17 முதல் 23 வரையில் நாசாவில் நடைபெற்ற ‘ராக்கெட் வீக்’ நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, கடந்த ஜூன் 22 அன்று, உலகின் பல பகுதிகளில் இருக்கும் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய 80 சிறிய க்யூப் செயற்கைக் கோள்களை ஏற்றிப் பறந்தது, ‘நாசா டெரியர்-இம்ப்ரூவ்ட் ஓரியன் சப்ஆர்பிடல் சவுண்டிங் ராக்கெட்’ (NASA Terrier-Improved Orion suborbital sounding rocket) என்ற ராக்கெட். 

“116 கி.மீ உயரம் தொடப்போகும் கலாம்சாட் விண்வெளியில் சுமார் 10 முதல் 12 நிமிடங்கள் அங்கு தங்கி, தகவல்களைச் சேகரிக்கும். இதன் மூலம் 3D பிரின்டட் கார்பன் இழைகள் விண்வெளியில் எவ்வளவு காலம் பயணிக்கமுடியும் என்பதை நாம் அறியமுடியும். மேலும், பூமியின் கதிர்வீச்சு, முடுக்கம், சுழற்சி மற்றும் காந்தப்புலன் குறித்த ஆய்வுகளையும் இது மேற்கொள்ளும். கூடுதலாக, விண்வெளியில் விவசாயம் சாத்தியமா என்ற கேள்விக்கு விடைகாணும் நோக்கிலும் இதை வடிவமைத்துள்ளோம்” என்று தங்கள் திட்டத்தை உற்சாகத்துடன் விளக்கினார் ரிஃபாத்.

இந்த மிஷனின் டைரக்டர் ஸ்ரீமதி கேசன் பேசுகையில், “விஞ்ஞானி ஆக வயது என்றுமே தடையில்லை என்று அனைவருக்கும் உணர்த்தியிருக்கிறார்கள் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அணியினர். இந்தப் பொன்னான வாய்ப்பளித்த நாசா, ‘Cubes in Space’ போட்டிக்கு உறுதுணையாக இருந்த idoodlelearning inc மற்றும் Colorado Space Grant Consortium ஆகிய நிறுவனங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.