பிரீமியம் ஸ்டோரி

ச்சைப் பசேலென்று காட்சியளிக்கும் மலைகள், காடுகள், புல்வெளிகளைப் பார்க்கும்போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் இயற்கையைக் கண்டு ரசிக்க நேரம் கிடைப்பதில்லை.   

ஃபாரஸ்ட் பஸ்!
ஃபாரஸ்ட் பஸ்!
ஃபாரஸ்ட் பஸ்!

நமக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள மக்கள் அனைவருக்கும் இதே நிலைமைதான். இந்தப் பிரச்னையைத் தீர்க்க, மக்களிடமே இயற்கையைக் கொண்டுசெல்லத் தீர்மானித்தார், ஆல்ஃபீ லின் (Alfie Lin). இவர் தைவான் நாட்டைச் சேர்ந்த பூ வியாபாரி. தலைநகர் தைபேயில் இயங்கும் மாநகரப் பேருந்தில் செடிகொடிகள், புற்கள், மலர்களைக்கொண்டு காடுபோல மாற்றிவிட்டார். 

ஃபாரஸ்ட் பஸ்!
ஃபாரஸ்ட் பஸ்!
ஃபாரஸ்ட் பஸ்!

பயணிகள் பஸ்ஸுக்குள் ஏறியதும், வண்ண வண்ணப் பூச்செடிகள் வரவேற்கும். கமகமவென வீசும் மலர்களின் வாசம், மனதுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும். நடமாடும் காடாகத் திகழும் இந்தப் பேருந்தை, ‘ஃபாரஸ்ட் பஸ்’ என்று மக்கள் அழைக்கிறார்கள். பஸ்ஸின் உள்ளே சென்றதும் முதலில் சீட் பிடிக்கிறார்களோ இல்லையோ, போட்டி போட்டுக்கொண்டு செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள். இந்த முயற்சியைப் புகழும் தைபே நகரவாசிகள், ஃபாரஸ்ட் பஸ் வரும் வரை காத்திருந்து, அதில் பயணிக்க ஆர்வம் காட்டுகிறார்களாம். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு