Published:Updated:

சலாம்... கலாம்!

சலாம்... கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
சலாம்... கலாம்!

சலாம்... கலாம்!

சலாம்... கலாம்!

சலாம்... கலாம்!

Published:Updated:
சலாம்... கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
சலாம்... கலாம்!
சலாம்... கலாம்!
சலாம்... கலாம்!
சலாம்... கலாம்!
சலாம்... கலாம்!

பார்க்கலாம்

தொகுப்பு: சாய்சுதன்

அவரது வாழ்க்கை நிகழ்வுகள் ஆல்பமாக

சலாம்... கலாம்!
சலாம்... கலாம்!
சலாம்... கலாம்!
சலாம்... கலாம்!

படிக்கலாம்

ஓவியம்: பிரேம் டாவின்ஸி

வுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல்கலாம், இதுதான் கலாமின் முழுப்பெயர்.  மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர், அறிவியலாளர். முக்கியமாக, இந்தியா அனைத்துத் துறைகளிலும் முன்னேறி, வளர்ச்சிபெற்ற நாடாக மாற வேண்டும் எனக் கனவு கண்டவர். அதை இளைஞர்களிடமும் விதைத்துவிட்டுச் சென்றவர். சிறுவயதில் கிணற்றுக்குள் கல்லைத் தூக்கிப் போட்டாராம் கலாம். குமிழ்கள் தோன்றவே, `கல்லை எறிந்தால் ஏன் குமிழ்கள் வருகின்றன?’ எனக் கேட்டாராம் அப்துல்கலாம். அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி இது. கேள்விகளைத் தொடர்ந்தார், கனவுகளைத் துரத்தினார், வளர்ச்சியில் பங்கெடுத்துக்கொண்டார். இன்று `அறிவியல்’ பாடத்தின் கேள்விகளில் அப்துல்கலாம் இருக்கிறார். அவர் எழுதிய புத்தகங்களின் சில சுவாரஸ்யங்கள் இவை.

• ஒருசிலர் உயர்ந்தவர்களாக இருப்பதால் மட்டுமே தேசம் உயர்ந்துவிடாது. மக்கள் அனைவரும் உயர்ந்தால்தான், அது வளர்ந்த தேசம். 100 கோடி மக்களாகிய நாம் அற்ப விவகாரங்களை மறந்துவிட்டு, ஒன்றுபட்டுக் கைகோத்துக் களமிறங்கினால் தடைகள் தவிடுபொடியாகிவிடும். உன்னதமான பாரம்பர்யமும் திறமையான உழைக்கும் பட்டாளமும் நிறைந்த இந்திய தேசம் அறிவார்ந்த ஒரு சமூகமாக உருவெடுத்துவருகிறது. அப்படி இருந்தும், நம் மக்களில் பலர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாடுகிறார்கள். படிப்பறிவு இல்லாமலும் வேலை கிடைக்காமலும் திண்டாடுகிறார்கள். செல்வச் செழிப்பான, அமைதியான, பாதுகாப்பான இந்தியாவில் வாழ அனைத்து தரப்பு மக்களும் ஆசைப்படுகிறார்கள். அதைச் சாத்தியமாக்க தொழில்நுட்பத்தில் முன்னேற வேண்டும். அதுதான் தேசத்தை முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச்செல்லும் ஆற்றல் வாய்ந்த என்ஜின். 2020-ம் ஆண்டில் `வளர்ச்சியடைந்த இந்தியா’ என்று சாதிப்பதை அனைத்து மக்களும் லட்சியமாக ஏற்க வேண்டும்.’’   

சலாம்... கலாம்!

`உதயமாகிறது வலிமைபடைத்த பாரதம்’ என்ற புத்தகத்திலிருந்து...

சலாம்... கலாம்!

• `நாம் ஒன்றையும் செய்யாமல், நமக்கு எல்லாவற்றையுமே அரசாங்கம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம். குப்பைகூளங்களை நாம் தெருவெங்கும் போடுவதை நிறுத்தப்போவதுமில்லை, ஒரு சிறு துண்டுக் காகிதத்தைக்கூட நாம் குப்பைத்தொட்டியில் எடுத்துப்போட முன்வருவதுமில்லை. பெண்களின் பிரச்னைகள், வரதட்சணைக் கொடுமைகள், பெண் குழந்தைகள் சார்ந்த பிரச்னைகள் ஆகியவற்றுக்கு வெளியே பலத்த எதிர்ப்பைக்காட்டும் நாம், வீட்டில் அதற்கு நேர்மாறாக நடந்துகொள்கிறோம். நம்மால் முடிந்ததைச் செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் வரும்போது யாராவது ஆபத்பாந்தவனாக வந்து தன் செயற்கரிய செயலைச் செய்துகாட்டும்போது, எப்படியாவது வேலை நடக்கட்டும் என நாம் நமது குடும்பத்துடன் அந்த இடத்திலிருந்து விலகிச் சென்றுவிடுவோம்.   

நமது பய உணர்வே நம்மை சோம்பேறிகளாகவும் கோழைகளாகவும் மாற்றிவிட்டதால், அமெரிக்காவுக்கு ஓடிப்போய் அவர்களுடைய வெற்றியில் குளிர்காய்ந்துகொண்டு அவர்களின் செயல்களைப் பாராட்டுகிறோம். அமெரிக்காவில் பாதுகாப்பு இல்லையென்றால், நாம் இங்கிலாந்து ஓடுகிறோம். இங்கிலாந்தில் வேலையில்லாத் திண்டாட்டம் என்றால், அடுத்த விமானத்திலேயே நாம் வளைகுடா நாட்டுக்குப் பறந்துவிடுவோம். வளைகுடா நாட்டில் போர் என்றால், நம்மை இந்தியா பத்திரமாக தாயகத்துக்கு அழைத்துவர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். நாம் ஒவ்வொருவரும் நம் நாட்டைப் பற்றி அவதூறு பேசுவதிலும், அவமானப்படுத்துவதிலும் மட்டுமே குறியாக இருக்கிறோம். இந்தியாவில் நாம் எந்தவொரு நல்ல திட்டத்துக்கும் உயிர்கொடுக்க நாம் முன்வருவதே இல்லை. இந்தியாவுக்கு என்ன தேவையோ, அதையே நாம் செய்வோம்!’’   

சலாம்... கலாம்!

`ஓர் இந்தியனின் கனவு’ புத்தகத்திலிருந்து...

எனக்கு அப்போது ஆறு வயது. ஒரு படகு கட்டும் வேலையில் அப்பா ஈடுபட்டிருந்தார். உள்ளூர் தச்சர் உதவியோடு கடற்கரையில் படகு கட்டும் வேலையை ஆரம்பித்தார். என் கண்ணெதிரிலேயே ஒரு படகு உருவெடுப்பதைக் கவனித்துப் பார்த்தேன். படகுப் போக்குவரத்தில் அப்பாவுக்கு நல்ல வருமானம்.

ஒருநாள், மணிக்கு 100 மைல் வேகத்தில் அடித்த புயல் காற்றில் எங்கள் படகும் கடற்கரையில் குறிப்பிட்ட நிலப்பரப்பும் கடலில் அடித்துச்செல்லப்பட்டன. பாம்பன் பாலம் தகர்ந்தது. பயணிகளோடு வந்துகொண்டிருந்த ரயில் கடலில் கவிழ்ந்தது. அதுவரை கடலின் அழகை மட்டுமே ரசித்துக்கொண்டிருந்த எனக்கு, அன்றுதான் அதன் கட்டுக்கடங்காத சக்தியின் ரகசியம் புலப்பட்டது.

நான்  எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது இரண்டாம் உலகப்போர் மூண்டது. அது 1939-ம் வருடம். அப்போது மார்க்கெட்டில் புளியங்கொட்டைக்கு ஏகப்பட்ட கிராக்கி. எதனால் இப்படி என்பதையெல்லாம் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. புளியங்கொட்டைகளைச் சேகரித்து மசூதித் தெருவில் உள்ள மளிகைக்கடை ஒன்றில் விற்பேன். இந்த வியாபாரத்தில் தினமும் ஒரு அணா கிடைக்கும். யுத்தம் பற்றிய கதையெல்லாம் எனக்கு ஜலாலுதீன் சொல்வார். பிறகு நான் அதைப் பற்றி தினமணியின் தலைப்புச் செய்திகளில் படித்துப் பார்ப்பேன். இந்தியா, நேசநாடுகள் அணியில் சேரும் நிர்பந்தம் வந்தது. நெருக்கடிநிலை போன்ற ஏதோ ஒரு பிரகடனம் அறிவிக்கப்பட்டது. ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் நிற்பதை ரத்துசெய்துவிட்டார்கள். இதுதான் முதல் பாதிப்பு.

ராமேஸ்வரத்துக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே, ராமேஸ்வரம் இரும்புப்பாதையில், ஓடும் ரயிலிலிருந்து கட்டுக் கட்டாக பத்திரிகைகளை வீசுவார்கள். இந்தக் கட்டுகளைப் பிடித்துக்கொண்டு வருவதற்கு சம்சுதீனுக்கு உதவி தேவைப்பட்டது. எனக்காகவே அந்த வேலை வந்ததுபோல, நான் அதைச் செய்தேன். என் முதல் சம்பாத்தியத்துக்கு சம்சுதீன் உதவினார். முதல்முறையாக சுயமாக நான் சம்பாதித்த பணத்தை ஐம்பது வருடங்களுக்குப் பிறகு இப்போது நினைத்துப்பார்த்தாலும் பெருமிதம் பொங்குகிறது.’’

`அக்னிச்சிறகுகள்’ புத்தகத்திலிருந்து...

- கே.ஜி.மணிகண்டன்

சலாம்... கலாம்!
சலாம்... கலாம்!
சலாம்... கலாம்!
சலாம்... கலாம்!
சலாம்... கலாம்!
சலாம்... கலாம்!
சலாம்... கலாம்!
சலாம்... கலாம்!

கேட்கலாம்

க்களின் ஜனாதிபதி அப்துல்கலாம், கடைசிமூச்சு உள்ளவரை இளைஞர்களிடம் மாற்றத்தை உருவாக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு பல கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாடினார். அவர்கள் கூட்டத்தில் பேசிய பேச்சுகளின் தொகுப்பிலிருந்து...

ஈரோடு புத்தகத் திருவிழாவில் கலந்துகொண்டு ‘நற்புத்தகங்கள் என் அரும்பெரும் ஆசிரியர்’ என்ற தலைப்பில் உரையாற்றியிருக்கிறார்.

‘நான் சமீபத்தில் சர் ஹம்பிரி டேவி, மைக்கேல் ஃபாரடே, தாமஸ் ஆல்வா எடிசன் மூவரைப் பற்றியும் படித்தேன். வேதியியல் துறையின் போற்றத்தக்க விஞ்ஞானி சர் ஹம்பிரி டேவி. இவர் ராயல் சொசைட்டியில் உறுப்பினராக இருந்தார். மைக்கேல் ஃபாரடே, நூலகத்தில் “Improvement of Minds” என்ற நூலைப் படித்த போது, எப்படியாவது டேவியிடம் சேர்ந்து மின்சார ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபடவேண்டும் என்று முடிவெடுத்தார்.  

சலாம்... கலாம்!

ஆனால், ஃபாரடேக்கு டேவி ஆய்வகத்தில் ஆராய்ச்சி உபகரணங்களைச் சுத்தப்படுத்தும் தற்காலிகப் பணியாளர் வேலைதான் கிடைத்தது. ஒரு மாதத்தில் ஃபாரடேயின் தனித்திறமை யையும், ஆராய்ச்சி உணர்வையும் கண்டுணர்ந்த டேவி, ஆராய்ச்சியில் பங்கு கொண்டு ஆராய்ச்சி முடிவுகளைக் குறிப்பெடுக்கும் பணியை வழங்கினார். ஆராய்ச்சியில் ஃபாரடே காந்தப்புலத்தில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி  செய்ய முடியும் என்பதைக் கண்டறிந்தார். இதுதான் ‘ஃபாரடே விதி’.

எடிசன்,  நூலகத்தில் ஃபாரடே எழுதிய மின்சார செய்முறை ஆராய்ச்சி குறித்த இரண்டு புத்தகத் தொகுதிகளையும் படித்திருக்கிறார்.  இந்த இரண்டு புத்தகங்கள்தான் எடிசனுக்கு அறிவியல் ஆராய்ச்சியைக் கற்றுக்கொடுத்திருக்கின்றன. ஃபாரடேதான் எடிசனுக்கு மானசீக குருவானார். எடிசன் தனது சிறுவயதில் நியூயார்க் நகரம் முழுவதையும் மின்மயம் ஆக்க வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார். அந்தக் கனவுதான் ஃபாரடேயின் விதியின்படி எடிசனை மின்சார பல்பையும், மின்சார சக்தியையும் கண்டுபிடிக்க உதவியிருக்கிறது.

இந்த மூன்று பேரிடமிருந்து கற்றுக்கொண்ட விஷயம், ஒவ்வொரு வெற்றியாளனுக்கும் ஒரு வழிகாட்டி இருந்திருக்கிறார். அவர்கள் சில நேரங்களில் ஆசிரியராகவும், பல நேரங்களில் புத்தகங்களாகவும் இருந்து வழிகாட்டியிருக்கிறார்கள் என்பதுதான்.

பொறியியல் கல்லூரி ஒன்றில் ‘வளர்ந்த இந்தியாவும் இளைய சமுதாயமும்’ என்ற தலைப்பில் உரையாடிய போது...


“நான் கடந்த 20 வருடங்களில், இரண்டு கோடி மாணவ மாணவிகளையும், இளைய சமுதாயத்தையும் சந்தித்து கலந்து உரையாடியிருக்கிறேன். அவர்களது கனவுகளையும் இலட்சியங்களையும் நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கர்நாடகாவில் ஆதி சுஞ்சுநகரியில் உள்ள பள்ளி மாணவி பாவனி, ‘ஏன் சார் வசதி படைத்தவர்கள் ஊழல் செய்கிறார்கள்?’ என்று கேட்டுவிட்டு, ‘இந்த லஞ்சத்தை ஒழிக்க நான் என்ன செய்ய வேண்டும் சார்?’ என்று என்னிடம் கேட்டாள்.

ஊழல் என்பது எனக்கு இழுக்கு என்று ஒவ்வொருவரும் நினைக்கக்கூடிய சூழ்நிலை வரவேண்டும். ஊழலால் வரும் பணத்தில் எங்களுக்கு எந்த வசதியும் வேண்டாம் என்று முடிவெடுக்க வேண்டும். லஞ்சமற்ற ஒரு சமுதாயத்தை இளைய சமுதாயத்தால் உருவாக்க முடியும் என்பதுதான் எனது நம்பிக்கை. அதாவது, சட்டத்தால் முடியாததை இளைஞர்களால் உருவாக்க முடியும் என்பதுதான் என் நம்பிக்கை.’’

அரியலூரில் நடந்த புத்தகக்காட்சியில் கலந்துகொண்டு உரையாடியபோது...

‘‘இளைஞர்களே... சிறுவர்களே... புத்தகங்களைப் படியுங்கள், படித்துக்கொண்டே இருங்கள், தமிழாய்ந்து நாடு செழிக்கக் கருத்துகளைப் படைத்த தமிழ்ச்சான்றோர்களைப் பற்றிப் படியுங்கள். தமிழர்தம் வாழ்வியலை, மற்ற நாட்டின் கலை, கலாசாரத்தை; வரலாற்றையும் அறிவியலையும் கணிதத்தையும் பூகோளத்தையும் படியுங்கள். தன்னம்பிக்கையின் தாரக மந்திரத்தைப் படியுங்கள். சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளை, நாட்டை வளப்படுத்தும் வழிமுறைகளை, தலைமைப்பண்பை வளர்க்கும் புத்தகங்களைப் படியுங்கள். வாழ்க்கையை வளப்படுத்தும் கதைகளையும் சம்பவங்களையும் படைப்புகளைப்பற்றியும், அவர்கள் கண்ட கனவைப் பற்றியும் படியுங்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் தினமும் ஒரு மணி நேரம் நல்ல புத்தகங்கள் படிக்க ஒதுக்குவீர்களானால் சில வருடங்களுக்குள் நீங்கள் ஓர் அறிவுக்களஞ்சியமாவீர்கள். புத்தகம் என்றென்றும் உங்களுக்கு ஓர் உற்ற நண்பனாகத் திகழும். உங்கள் ஒவ்வொருவரது வீட்டிலும், ஒரு நூல்நிலையம் அவசியம் இருக்க வேண்டும்.’’

தொகுப்பு: ஞா. சக்திவேல் முருகன்

சலாம்... கலாம்!
சலாம்... கலாம்!

வணங்கலாம்

ன் வாழ்நாளின் பெரும்பகுதியை ஆராய்ச்சிக்கூடத்திலும், மாணவர்கள் மத்தியிலும் கழித்தவர் டாக்டர் அப்துல் கலாம். மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக்கொண்டிருக்கும்போதே அவர் உயிர் பிரிந்தது. மக்கள் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும் கலாம் மறைந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. வாழும்போது மாணவர்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்தவர் கலாம். அவரது நினைவிடமும் அதே பணிகளைச் செய்யவிருக்கிறது. கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள பேக்கரும்பில் 50 கோடி ரூபாய் செலவில் நினைவகம் அமைக்கும் பணி நடந்துவருகிறது. அவரது நினைவிடத்துக்கு தேசத்தின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் அஞ்சலி செலுத்த வருகிறார்கள். இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் மூலம் கலாமின் நினைவிடப் பணி நடந்துவருகிறது.  

சலாம்... கலாம்!

சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமையப்போகும் இந்த நினைவிடத்தில், முதல் கட்டமாக 2.4 ஏக்கரில் 15 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட நினைவிடப் பணி நிறைவடையப் போகிறது. இந்த நினைவிடத்தில் கலாமின் ஏழு அடி உயர வெண்கலச் சிலை, அவர் பயன்படுத்திய பொருள்கள், புத்தகங்கள், கண்டுபிடிப்பு மாதிரிகள், புகைப்படக் கண்காட்சி, நூலகம் ஆகியன அமையவுள்ளன. இவை தவிர, மாணவர்களின் பயன்பாட்டுக்காக அறிவுசார் மையமும், விவாதக் கூட்ட அரங்கும் அமைக்கப்பட உள்ளன. இதற்கென ஜெய்ப்பூரிலிருந்து விலையுயர்ந்த கிரானைட் கற்கள் கொண்டுவரப்பட்டு நினைவு மண்டபம் உருவாக்கப் பட்டுள்ளது. கலாமின் மரம் வளர்க்கும் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், ராஜமுந்திரியிலிருந்து கொண்டுவரப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழகுச் செடிகள், நிழல்தரும் மரங்கள் நினைவிட வளாகத்தைச் சுற்றிலும் நடப்பட்டுள்ளன. பிரார்த்தனைக் கூடம், கல்வி குறித்த ஆராய்ச்சிக்கூடம் எனப் பன்முகத் தன்மையுடன் டாக்டர் அப்துல் கலாம் தேசிய நினைவகத்தின் பணி எட்டு மாதங்களாக நடந்துவருகிறது. ஜூலை 27-ம் தேதி இந்த நினைவிடத்தை, பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.

நாட்டின் வளர்ச்சிக்காகவும் மாணவர்களின் முன்னேற்றத்துக்காகவும் ஓயாமல் சிந்தித்த அப்துல் கலாமின் நினைவகத்துக்கு ஒருமுறையாவது சென்று வருவோம்!

-இரா.மோகன்   படங்கள்: உ.பாண்டி