Published:Updated:

பரம்பிக்குளத்துக்கு ஒரு பயணம்!

பரம்பிக்குளத்துக்கு ஒரு பயணம்!
பிரீமியம் ஸ்டோரி
பரம்பிக்குளத்துக்கு ஒரு பயணம்!

செ.சா. நிலா - படங்கள்: கீதா இளங்கோவன்

பரம்பிக்குளத்துக்கு ஒரு பயணம்!

செ.சா. நிலா - படங்கள்: கீதா இளங்கோவன்

Published:Updated:
பரம்பிக்குளத்துக்கு ஒரு பயணம்!
பிரீமியம் ஸ்டோரி
பரம்பிக்குளத்துக்கு ஒரு பயணம்!

ம்ஜான் விடுமுறையில் எங்கள் குடும்பம் மற்றும் உறவினர்கள் 16 பேர் சேர்ந்து பரம்பிக்குளம் சென்றோம். 16 பேரும் பெண்கள் என்பதால், எங்கள் பயணத்துக்குப் ‘பெண்கள் பயணம்’ எனப் பெயர்வைத்தோம். அதில் என்னையும் சேர்த்து நான்கு பேர் சுட்டிகள். ‘என்னது, ஏழாம் வகுப்புப் படிக்கிறே, நீ குழந்தையா?” என்றெல்லாம் கேட்கக் கூடாது.   

பரம்பிக்குளத்துக்கு ஒரு பயணம்!

இது எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது. அப்பா, மாமா என ஆண்கள் துணையில்லாமல், பெண்களே போகலாம் என்பது ஆச்சரியமாகவும் சொல்லத் தெரியாத சந்தோஷமாகவும் இருந்தது. யாஷ்னாவுக்கு நாலு வயது. எங்கள் கூட்டத்தின் சின்ன்ன்னக் குழந்தை. ஜான்சி பாட்டிக்கு 61 வயது. எங்கள் பயணத்தின் பெரிய்ய்ய்ய குழந்தை. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேலையை எடுத்துக்கொண்டு செய்தோம். கீதா அத்தை தங்கும் இடத்தை ஏற்பாடு செய்தார். பிருந்தா அத்தை வேன் வருவதற்கான ஏற்பாட்டைச் செய்தார். ஹரிணி அக்கா எல்லோரிடமும் பணம் வசூல்செய்து, கணக்குகளைப் பார்த்துக்கொண்டார். எழில் அத்தையும் பொன்மொழி அத்தையும் பிரியாணிக்கு ஏற்பாடு செய்தார்கள். யாஷ்னா எல்லோர் கைகளுக்கும் மாறி மாறிச் செல்லும் வேலையைச் செய்தாள். ஹி... ஹி... இப்படி ஆளுக்கொரு பொறுப்பை எடுத்துக்கொண்டோம். ரயிலில் ஆடிப்பாடியவாறு பயணித்தோம். எங்களுக்குப் பிடித்ததை வாங்கிச் சாப்பிட்டோம்.   

பரம்பிக்குளத்துக்கு ஒரு பயணம்!

பரம்பிக்குளத்தில் மழை பெய்துகொண்டே இருந்தது. அந்த மழையிலேயே யானைச் சவாரி செய்தோம். யானை எங்களைக் காட்டுக்குள் அழைத்துச்சென்றது. இந்நேரம் வீட்டில் இருந்திருந்தால், ஜன்னல் வழியே வெளியே கையை நீட்டி மழை நீரைப் பிடித்திருந்தாலே திட்டியிருப்பார்கள். இங்கே அப்படியில்லை. எப்பவும் இப்படியே இருந்திடலாமே எனத் தோன்றியது. மலையேறும் பயணம், பறவைகள் மற்றும் விலங்குகளைத் தேடிச்செல்வது என நாள் ஓடியது. மூங்கில் காட்டில் மூங்கில் படகில் பயணித்தது மறக்கவே முடியாதது.   

பரம்பிக்குளத்துக்கு ஒரு பயணம்!

எங்களை எல்லா இடங்களுக்கும் வழிகாட்டியாக அழைத்துச்சென்றவர் சண்முகம் அய்யா. அவர் மலைவாழ் இனத்தைச் சேர்ந்தவர். 12 வருடங்களாக இந்தப் பணியில் இருக்கிறாராம். அவர்கள் பேசும் மொழியில் தமிழ், மலையாளம், தெலுங்கு கலந்திருக்குமாம். அவருக்குத் தமிழ், ஆங்கிலம், மலையாளம் நன்றாகத் தெரிந்திருந்தன. அகராதியின் உதவியோடு தானாகவே ஆங்கிலம் கற்றுக்கொண்டாராம். இணையத்தில் ஆர்டர் செய்து புத்தகங்களை வாங்கிப் படிப்பாராம். எனக்கு வியப்பாக இருந்தது. ஒவ்வொரு விஷயத்தையும் வருடங்களைக் குறிப்பிட்டு தகவல்களைச் சொன்னார். ஒரு மரத்தைப் பற்றிச் சொல்லும்போது, அது செடியாகப் பிறந்த நாள், பூப்பூத்த தேதி, முதல் பழம் பழுத்த தேதி எனச் சொல்கிறார். ‘நமக்கு நேற்று படித்த வரலாற்றின் வருடம் மறந்துபோகுதே’ என நினைத்துக்கொண்டேன்.     

பரம்பிக்குளத்துக்கு ஒரு பயணம்!

‘‘இந்தக் காட்டில் புலி, யானை, காட்டெருமை, காட்டு மாடு, காட்டு நாய், புள்ளிமான், மலபார் ராட்சச அணில், சிங்கவால் குரங்கு இருக்கு” என அடுக்கிக்கொண்டே போனார். மீன்கொத்தி, மரங்கொத்தி, மீன்தின்னிக் கழுகு எனப் பல்வேறு பறவைகளைக் காண்பித்தார்.

‘‘அடேங்கப்பா... பறவைகளில் இத்தனை வகைகள் இருக்கா?’’ என வியந்தால், ‘‘நீங்க பார்த்தது ரொம்ப ரொம்ப குறைவு’’ என்றார் சண்முக அய்யா. ஒரு நாகமரத்தைச் சுட்டிக்காட்டி “இதன் உயரம் 39.98 மீட்டர். வயது 460 இருக்கும்’’ என்றார். நாங்கள் எல்லோரும் அந்த மரத்தைக் கட்டிப்பிடித்து விளையாடினோம். பரம்பிக்குளத்தில் இருந்த ஒவ்வொரு நொடியையும் மறக்கவே மாட்டேன்.