Published:Updated:

காகித பொம்மைகள்!

காகித பொம்மைகள்!
பிரீமியம் ஸ்டோரி
காகித பொம்மைகள்!

சே.சின்னதுரை - படங்கள்: க.விக்னேஸ்வரன்

காகித பொம்மைகள்!

சே.சின்னதுரை - படங்கள்: க.விக்னேஸ்வரன்

Published:Updated:
காகித பொம்மைகள்!
பிரீமியம் ஸ்டோரி
காகித பொம்மைகள்!

குப்பறையில் மாணவர்கள் கீழே போடும் காகிதக் குப்பைகளுக்கு வடிவம் கொடுத்து, அதை வரலாற்றுக் கதையாக விளக்கி, ‘வாவ்’ என வியக்கவைக்கிறார் அஜய்.   

காகித பொம்மைகள்!

மதுரை, மேலூர் அருகே இருக்கும் ஊரான அரிட்டாபட்டி, தெற்குத் தெரு அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் அஜய், ‘‘எனக்குச் சின்ன வயசுல இருந்தே பேப்பர் மற்றும் சாக்பீஸ்களில் குட்டி குட்டி உருவங்களைச் செய்யறது ரொம்பவும் பிடிக்கும். அதுமாதிரி நிறைய செஞ்சுவெச்சிருக்கேன். ‘எந்தப் பொருளையும் வீணாக்கக் கூடாது. மறுசுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும்’ என்று படிச்சிருக்கேன். அதனால், பள்ளியில் மாணவர்கள் எழுதி முடித்த பேப்பர்களைக் கேட்டு வாங்கிப்பேன். மறுசுழற்சி முறையில் கூழாக்கி, விரும்பிய வடிவங்களில் மாற்றுவேன். அப்புறம், கலரடிச்சு சின்னச் சின்னச் சிலைகளாக்குவேன். அதைவெச்சு நண்பர்களுக்குக் கதை சொல்வேன். சில பாடங்களைக்கூட இப்படிக் கதை வழியே சொல்றேன். அதையெல்லாம் செல்போனில் வீடியோவாக எடுத்து, வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கேன். இதைப் பார்த்து நண்பர்களும் ஆசிரியர்களும் ரொம்பவும் பாராட்டியிருக்காங்க’’ என்கிறவர், அவற்றை உருவாக்கிய முறையைச் சொல்கிறார்.   

காகித பொம்மைகள்!

 ‘‘இதுக்குப் பெரிய செலவு ஆகாது. பயன்படுத்தி முடிச்ச பேப்பர்களைக் கசக்கி, நீரில் ஊறவைக்கணும். சிதையும் அளவுக்கு மாறினதும், விரும்பிய என்ன சிலை செய்யப்போறோமோ அதன் பாகங்களைத் தனித்தனியாகச் செய்துக்கணும். குறைந்தபட்சம் ஐந்து மணி நேரம் வெயிலில் காயவைக்கணும். அப்புறம், அதையெல்லாம் எடுத்து உருவமாக ஒட்டணும். வடிவம் தத்ரூபமாக இருக்க, ஐஸ்குச்சிகள், பிளாஸ்டிக் துண்டுகள், ஜிமிக்கி, உடைஞ்ச வளையல், பொட்டு என உருவத்துக்கு ஏத்த மாதிரி பயன்படுத்துவேன். அதுக்கு வாட்டர் கலர் கொடுத்தால், அழகான பொம்மைகளாக மாறிவிடும். ஒரு பாடம் நடத்தும்போது, இந்தப் பொம்மைகளைப் பயன்படுத்தி, கதை மாதிரி சொல்வேன். இதை ஆர்வமா கவனிப்பாங்க. இந்த மாதிரி சுதந்திரத்துக்கு முந்தைய வரலாறு பற்றி சுமார் 150 பொம்மைகளைக் காகிதக் கூழில் தயாரிச்சிருக்கேன். இதுக்காக, கோடை விடுமுறையை முழுமையாகப் பயன்படுத்திக்கிட்டேன்.

 உதாரணத்துக்கு, பாண்டியர்களைப் பற்றி வரலாற்றில் அவர்களது உடை, சின்னம், கொடி போன்றவற்றை ஸ்டடி பண்ணி பொம்மைகளைச் செய்திருக்கேன். தமிழகத்தில் சேரசோழபாண்டியர் என மூவேந்தர்களின் படைகளும் வலிமையாக இருந்துச்சு. பெரிய பெரிய ஆயுதங்கள் இல்லைன்னாலும், மாபெரும் வீரர்களாக இருந்தாங்க. அந்தச் சமயத்தில் வெள்ளையர்கள் இந்தியாவுக்குள் வந்திருந்தால், நம் தமிழ்நாட்டுக்குள் மட்டும் நுழைஞ்சிருக்கவே முடியாது. இப்படியெல்லாம் சொல்லிக்கிட்டே பேப்பர் பொம்மைகளை நகர்த்துவேன். இதைப் பார்க்கும்போது, நம் முன்னோர்களின் வரலாறு மனசுல ஆழமாப் பதியும். பேப்பரிலேயே குட்டி பீரங்கியும் செஞ்சிருக்கேன். தீக்குச்சிகளை அதில் போட்டுக் காட்டி பீரங்கி இயங்கும் விதத்தையும் போரின் அடிப்படையையும் விளக்குவேன்’’ என்று வியக்கவைக்கிறார் அஜய்.

 தொழிற்சாலைக் கழிவுகளைத் தடுக்கும் முறை, பிளாஸ்டிக் பொருள்களைக் கட்டுப்படுத்துவது, இயற்கை உரங்கள் தயாரிப்பது என அஜய் எடுத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் சமூக அக்கறை பளிச்சிடுகிறது. ஒரு மாணவனாக இருக்கும்போதே சமூக நோக்கில் சிந்திக்கும் அஜயை நினைக்க நினைக்கப் பெருமிதம் உண்டாகிறது.