Published:Updated:

அழிய விடல் ஆகாது பாப்பா! - ஆனை மலை பறக்கும் தவளை

அழிய விடல் ஆகாது பாப்பா! - ஆனை மலை பறக்கும் தவளை
பிரீமியம் ஸ்டோரி
அழிய விடல் ஆகாது பாப்பா! - ஆனை மலை பறக்கும் தவளை

ஆயிஷா இரா.நடராசன்

அழிய விடல் ஆகாது பாப்பா! - ஆனை மலை பறக்கும் தவளை

ஆயிஷா இரா.நடராசன்

Published:Updated:
அழிய விடல் ஆகாது பாப்பா! - ஆனை மலை பறக்கும் தவளை
பிரீமியம் ஸ்டோரி
அழிய விடல் ஆகாது பாப்பா! - ஆனை மலை பறக்கும் தவளை
அழிய விடல் ஆகாது பாப்பா! - ஆனை மலை பறக்கும் தவளை

ன்பு நண்பர்களே, நலமா...

நான்தான் தமிழகத்தின் ஆனைமலையில் வசிக்கும் பறக்கும் தவளை எழுதுகிறேன். இந்தக் கடிதம் உங்களை அடைவதற்குள் நாங்கள் அழிந்துவிடாமல் இருக்க வேண்டும்.      

அழிய விடல் ஆகாது பாப்பா! - ஆனை மலை பறக்கும் தவளை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘ஆனைமலைப் பேரழகி’ என்றும் ‘தாவும் தேரை’ என்றும் ‘பறக்கும் பாசிகள்’ என்றும் பலவாறு இலக்கியங்கள் எங்களைப் போற்றின. மலபார் க்ளைடர்ஸ் என ஆங்கிலேயர்கள் எங்களை அழைத்தார்கள். அந்தளவுக்குப் பெயர் பெற்ற இனம். மழைக்காலத்தின் ஒரு வரவாக மட்டும் ஏனைய தவளை இனங்கள் இருக்கின்றன. நாங்களோ, வருடம் முழுவதுமே உயிர்த்திருந்து மேற்குத் தொடர்ச்சி மலையை வண்ணமயமாக்குகிறோம்.

மலையில், நீர்நிலைகளின் பகுதிகளில், செடிகொடிகள், மரங்கள், பசும்புதர்கள் என ஒரு காலத்தில் லட்சக்கணக்கில் இருந்தோம். பசுமைக்காடுகள் என அவை அழைக்கப்பட, எங்கள் பச்சை நிறமும் ஒரு காரணம். நன்னீர்த் தவளைகளான எங்களது உயிரியல் பெயர், ரச்சகோபோரஸ் சியூடோமலா பேரிகஸ் (Rchacophorus Pseudomala Baricus). பல மீட்டர் உயரம் சென்று வானில் தாவும் அளவுக்கு லாகவமான உடலமைப்பு. உண்மையில், நாங்கள் பறப்பது கிடையாது. விண்ணை நோக்கித் தாவிச்சென்று, பறக்கும் பூச்சிகளைப் பிடித்து உண்கிறோம். மிகத் துல்லியமாக 45 டிகிரி சாய்வாக மேலேறி, அதே 45 டிகிரி சாய்தளப் பாதையின் தரை நோக்கி வரும் எங்கள் பாய்ச்சல், பார்ப்பதற்கு பறப்பதுபோல  இருக்கும்.

கேரளாவில் உள்ள இந்திராகாந்தி தேசிய உயிரியல் பூங்காவிலும் ஆனைமலையிலும், சில நூறு பேர் எஞ்சி இருக்கிறோம் நண்பா. எங்களுடைய வாழிடங்களை அழித்து, மனிதர்களின் கேளிக்கைக்காக வாசஸ்தலங்களை அமைத்து, சுற்றுலாவில் வருமானம் காண வேண்டும் என்பதற்காக, எங்களை அழிக்கிறார்கள். இப்படி இருக்க, எங்களுடைய தாவும் பின்னங்கால்களை வெட்டி சூப்வைத்துச் சாப்பிட, கொத்து கொத்தாகப் பிடித்து, பல நாடுகளுக்கு அனுப்புவதற்காக மொத்தமாக அழிக்கிறார்கள்.

ஏறக்குறைய முற்றிலும் அழிந்துபோன உயிரினங்களின் பட்டியலில், உலக அளவில் நாங்கள் மூன்றாமிடத்தில் இருக்கிறோம். செயற்கை முறையில் குளம் குட்டைகளைக் கட்டி எங்களை வளர்க்க முடியாது. பல முறை வனத்துறை அதற்கு முயன்று தோற்றுப்போயிருக்கிறது. மலைகளின் நீர்நிலைகள், அங்குள்ள காற்றின் வற்றாத ஈரப்பதம் ஆகியவையே, நாங்கள் உயிர்த்திருக்கும் ஒரே சூழல்.

இனி உங்கள் சந்ததிகள்தாம் எங்களைக் காப்பாற்ற வேண்டும். இதற்கு மேலும் மலைகளின் பசுமைக்காடுகள் அழியாமல் இருக்க, தீவிரமாக நண்பர்களிடையே பிரசாரம் செய்யுங்கள். கட்டுரை, கவிதை என எல்லா வடிவங்களிலும் இயற்கைப் பாதுகாப்பு குறித்து எழுதி, நண்பர்களிடையே பரப்புங்கள். பேரழிவின் விளிம்பில் உள்ளதாக (Critically Endangered) பட்டியல் இடப்பட்ட விலங்குகளை உணவாக்கி விற்பனை செய்யும் விடுதிகளுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை தேவை. இது குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும். இயற்கையின் ஒவ்வொரு உயிரியும் ஏதோ ஒரு வகையில் இயற்கையின் சமநிலையைக் காப்பாற்றத் தன் பங்கைச் செய்கின்றன என்பதை மனிதர்களை உணரச் செய்ய வேண்டும்.

இந்தப் பொறுப்பை உங்களை நம்பி ஒப்படைக்கிறோம். செய்வீர்களா நண்பர்களே.

இப்படிக்கு,

ஆனைமலை பறக்கும் தவளை, ஆனைமலை, தமிழ்நாடு.