Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

பிரீமியம் ஸ்டோரி
சுட்டி ஸ்டார் நியூஸ்

நெதர்லாந்து என்றொரு சொர்க்கம்    

சுட்டி ஸ்டார் நியூஸ்

நெதர்லாந்து மக்கள் அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் வல்லவர்களாக இருக்கும் அதே சமயத்தில், இயற்கை அன்னையை அரவணைத்துச் செல்வதிலும் முன்னோடிகளாக விளங்குகிறார்கள். சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்கும் வகையில், மின்சக்தி கார்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். கார்களை சார்ஜ் செய்வதற்காக சாலைதோறும் சார்ஜிங் பாயின்ட்களை அந்த நாட்டு அரசு உருவாகியுள்ளது. 1980-ம் ஆண்டு மத்தியில் நெதர்லாந்தில் உள்ள ஹௌடென் (Houten) நகரத்து மக்கள், கார்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று முடிவெடுத்து, பெரும்பாலும் சைக்கிள்களையே இன்று வரை பயன்படுத்துகின்றனர். காடுகளை ஒட்டி நெடுஞ்சாலை அமைக்கும்போது, அந்தச் சாலைகளுக்கு மேலே விலங்குகளுக்காகவே நீர் நிலைகளுடன் பசுமையான பாலங்களை அமைக்கிறார்கள். இதற்கு எகோடக்ட் (Ecoduct) என்று பெயர். அறிவியலும் இயற்கையும் இணைந்த வாழ்வே என்றும் சிறப்பானது. 

சுட்டி ஸ்டார் நியூஸ்

ரா.சுபாஷினி, பாரதிய வித்யாபவன் மெட்ரிகுலேஷன் பள்ளி, திண்டல், ஈரோடு.

சுட்டி ஸ்டார் நியூஸ்

ரிஸ்ட்பேண்ட் சார்ஜர்!

நெட் கனக்‌ஷன், மெயில், யூடியூப், ஏகப்பட்ட ஆப்ஸ் என உலகத்தையே ஸ்மார்ட்போனுக்குள் கொண்டுவந்த பிறகு, சூரியனைக் கண்ட பனித்துளியாக சார்ஜ் காலியாகிவிடுகிறது. எனவே, சார்ஜரையும் எப்போதும் தூக்கிக்கொண்டு திரிய வேண்டியிருக்கிறது. அதற்குத் தீர்வாக, கையில் ரிஸ்ட்பேண்டுபோல அணிந்துகொள்ளும் வகையில் சார்ஜர்கள் வந்துவிட்டன. எடை குறைந்த நைலான் நூலிழைகளால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த யுஎஸ்பி சார்ஜர் பலரின் ஃபேவரிட்டாக மாறியிருக்கிறது. எல்லாம் சரி, போனை அளவுக்கதிகமா பயன்படுத்துறதைக்  குறைச்சுக்கிறது நல்லது.  

சுட்டி ஸ்டார் நியூஸ்

ஆர்.யாழினி, அன்னை ஈவா மேரி கோக் பெண்கள்  மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர்.

சுட்டி ஸ்டார் நியூஸ்

சோலார் பாண்டா!

பா
ண்டா கரடி வடிவில் பிரமாண்டமான சோலார் தகடுகளை உருவாக்கி, உலக நாடுகளை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது சீனா.

பெட்ரோலுக்கு மாற்று எரிசக்தியைப் பயன்படுத்த வேண்டி உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சீனாவின் ஷான்ஷி மாகாணத்தின் வடக்குப் பகுதியில் இருக்கும் டெடாங் என்ற இடத்தில், சோலார் பேனல்களை பாண்டா வடிவில் அடுக்கி பிரமாண்டமாக உருவாக்கியிருக்கிறார்கள். இந்த சோலார் தகடுகள் மூலம் 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. வருங்காலத்தில் மேலும் பல பகுதிகளில் பாண்டா வடிவில் சோலார் தகடுகள் அமைக்கப்படும் என்று சீனா தெரிவித்துள்ளது.  

சுட்டி ஸ்டார் நியூஸ்

ஜெ.ஆஸ்திகா, ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, கம்பம். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு