உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் 1945-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி பிறந்தார்.
1977 முதல் 1979 வரை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார்.

ஆகஸ்டு 8, 2015 அன்று ராம்நாத் கோவிந்த் பீகாரின் 36-வது ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஐ.நா சபையில் இந்தியாவுக்கான பிரதிநிதியாக இருந்துள்ளார், 2002-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த ஐ.நா பொதுக் குழுக் கூட்டத்தில், இந்தியா சார்பில் உரை நிகழ்த்தியுள்ளார்.
குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு உரையாற்றிய ராம்நாத் கோவிந்த் ‘‘அப்துல் கலாம் வழியில் நடப்பேன்’’ என்றார்.
இந்திய நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார்.
மே 30, 1974 அன்று சவிதா என்பவரை ராம்நாத் கோவிந்த் மணந்தார். இவர்களுக்கு பிரசாந்த் என்ற மகனும், சுவாதி என்ற மகளும் உள்ளனர்.
கான்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றவர்.
ராம்நாத் கோவிந்த் 1994-ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006 வரை 12 வருடங்கள் தொடர்ச்சியாக மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பு வகித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராக தாய்லாந்து, நேபாளம், பாகிஸ்தான், சிங்கப்பூர், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இவர் பயணம் செய்துள்ளார்.
