Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

வாங்க... பொம்மை ஆகலாம்!

சுட்டி ஸ்டார் நியூஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சுட்டி ஸ்டார் நியூஸ்

நம்மைப்போல ஒருவர் இருந்தால்... அதிலும் நம் கைக்கு அடக்கமாக, குட்டியாக இருந்தால்...? நினைக்கவே பரவசமாக இருக்கிறதல்லவா? வாங்க... உங்களை பொம்மையாக்கிக் கொடுக்கிறோம் என அழைக்கிறது டூப் (Doob) என்ற நிறுவனம். ஜெர்மனியைச் சேர்ந்த இந்த 3-டி கம்பெனி, நியூயார்க், கனடா போன்ற இடங்களிலும் தனது கிளையை நிறுவியிருக்கிறது. இங்குள்ள அறையில் 54 கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். நீங்கள் உள்ளே சென்று நின்றால் போதும். 54 கேமராக்களும் ஒரே நேரத்தில் படம் எடுத்துக்கொள்ளும். பிறகு, உங்களைப் போன்ற அச்சு அசலான பொம்மையை உங்கள் கையில் கொடுப்பார்கள். அப்புறமென்ன... உங்களைப்போல ஒருவன் ரெடி!

வி.தனேஷ், ஸ்ரீ நாராயண மிஷன் மேல்நிலைப் பள்ளி, மேற்கு மாம்பலம், சென்னை.

சூரியனுக்கு ஒரு சகோதரன்!

‘மனிதர்களில் இரட்டைப் பிறவிகள் இருப்பதுபோல சூரியன் போன்ற நட்சத்திரங்கள் பெரும்பாலும் ஒரு துணையுடனே பிறந்துள்ளன’ என்கிறார்கள் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள். சூரியக் குடும்பத்துக்கு மிக அருகிலுள்ள நட்சத்திரமான ஆல்ஃபா சென்டரிக்கும் இரண்டு துணை நட்சத்திரங்கள் உள்ளன. வானவியலாளர்கள் பல காலமாக இதற்கான காரணம் என்னவென்று கண்டறிய முயன்றனர்.

சுட்டி ஸ்டார் நியூஸ்

பெர்லியஸ் என்னும் நட்சத்திர மண்டலத்தில் சமீபத்தில் உருவான நட்சத்திரங்களைக்கொண்ட பெரிய மூலக்கூறு மேகத்தை ரேடியோ அலைகளால் ஆய்வுசெய்தபோது, இந்த இரட்டைப் பிறவி விஷயத்துக்கு வந்தார்கள். நமது சூரியன் உருவானபோதும் ஒரு துணையுடனே பிறந்திருக்கலாம். அதன் பெயர் ‘நெமிசிஸ்’ என்று சொல்கிறார்கள். இந்த நட்சத்திரம்தான் டைனோசர் அழியக் காரணமான விண்கல், பூமியின் சுற்றுப்பாதையில் நுழைவதற்குக் காரணமாக இருந்திருக்கும் என்கிறார்கள்.

சு.அனிருத் ராகவேந்திரா, மகாத்மா காந்தி நூற்றாண்டுப் பள்ளி, திருச்சி.

பொம்மைகளின் தாத்தா!

ஜப்பானைச் சேர்ந்த 67 வயது மசோ குன்ஜி (Masao Gunji) என்பவர்,  ‘ஹலோ கிட்டி’ பொம்மைச் சேகரிப்பில் கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறார். ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான மசோ, கடந்த 30 ஆண்டுகளாக ‘ஹலோ கிட்டி’ பொம்மைகளைச் சேகரித்துவருகிறார். “சுற்றுலா சென்ற இடத்தில் ஹலோ கிட்டியைப் பார்த்தேன். என்னைக் கவர்ந்துவிட்டது. ஒரு பொம்மையை வாங்கி வீட்டில் வைத்தேன். நான் கடினமான பணியைச் செய்வதால், மன அழுத்தத்தோடு வீட்டுக்கு வருவேன். கிட்டியின் சிரிப்பைக் கண்டதும் என் மனம் லேசாகிவிடும். அதன்பிறகு, பார்க்கும் இடங்களிலெல்லாம் கிட்டியை வாங்கினேன். என் ஆர்வத்தைப் பார்த்து அக்கம்பக்கத்தினரும் கிட்டியை வாங்கிக் கொடுத்தனர்’’ என்கிறார் இந்தக் குழந்தை மனசு தாத்தா.

சுட்டி ஸ்டார் நியூஸ்

இப்போது உலகிலேயே அதிக அளவில் ஹலோ கிட்டி பொம்மைகளைச் சேகரித்தவர் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறார் மசோ. தற்போது, அவர் வீடு பத்தாயிரம் கிட்டி பொம்மைகளால் நிரம்பியுள்ளது.

சுட்டி ஸ்டார் நியூஸ்

ஜப்பானைச் சேர்ந்த  யுகோ ஷிமிஷு (Yuko Shimizu) என்பவர் இளம் பெண்களுக்காக வடிவமைத்த பூனை பொம்மைதான் ஹலோ கிட்டி (Hello Kitty). இது உலகம் முழுவதும் குழந்தைகளைக் கவர்ந்துள்ள பொம்மைகளில் ஒன்று.