Published:Updated:

நம்பர் 1 மாணவியாவது எப்படி? - தங்க மீன்கள் சாதனா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நம்பர் 1 மாணவியாவது எப்படி? - தங்க மீன்கள் சாதனா
நம்பர் 1 மாணவியாவது எப்படி? - தங்க மீன்கள் சாதனா

கு.ஆனந்தராஜ், படங்கள்: ரா.வருண் பிரசாத்

பிரீமியம் ஸ்டோரி

“துபாய் நாட்டின் பள்ளி மாணவர்களுக்கான பெருமைமிகு விருதான  ‘ஹேம்டன்’ விருது பெற்றிருக்கிறார் சாதனா.

‘‘பல ஆண்டுக் கனவான டான்ஸ் அரங்கேற்றம், சினிமா குருநாதர் ராம் அங்கிள் டைரக்‌ஷனில் நடிச்ச ‘பேரன்பு’ ரிலீஸ்னு இந்த வருஷம் எனக்கு ரொம்ப ரொம்ப ஹேப்பியான விஷயங்கள் நடந்துட்டிருக்கு. இப்போ, ஸ்கூல் லீவில் சென்னைக்கு வந்து அரங்கேற்றம் முடிச்சுட்டு, பிடிச்ச இடங்களுக்கெல்லாம் அவுட்டிங் போயிட்டிருக்கேன் அங்கிள்!” என்று பட்டாம்பூச்சியாக கண்கள் சிமிட்டிச் சிரிக்கிறார் சாதனா. ‘தங்கமீன்கள்’ செல்லம்மாவாக அனைவரையும் கவர்ந்த குழந்தை நட்சத்திரம்.

நம்பர் 1 மாணவியாவது எப்படி? - தங்க மீன்கள் சாதனா

“துபாய்லதான் பிறந்து வளர்ந்தேன். அப்பா வெங்கடேஷின் வேலை விஷயமா, என் அஞ்சு வயசுல சென்னைக்கு வந்தோம். சென்னையில் சுட்டிப் பொண்ணா, ஓடியாடி விளையாடினதெல்லாம் மறக்கவே முடியாது. ஃபேமிலி ஃப்ரெண்டு மூலமா ராம் அங்கிள் அறிமுகம் கிடைச்சது. ‘தங்கமீன்கள்’ செல்லம்மா ஆனேன். அந்தப் படம் ரிலீஸான சமயம் மறுபடியும் துபாய்ல செட்டிலாயிட்டோம். என் வாழ்க்கையே பெரிய அளவுல மாறிடுச்சு’’ என்று படபடவெனப் பேசுகிறார் சாதனா.

‘‘இங்கே இருந்தவரை படிப்புல ஆர்வம் இருந்தாலும், செல்லம்மா மாதிரி ஸ்கூல் போக சோம்பலா இருக்கும். துபாயில், ‘ஜெம்ஸ் அவர் ஓன் இண்டியன்’ ஸ்கூலில் ஆறாம் வகுப்பிலேர்ந்து படிப்பைத் தொடர்ந்தேன். அங்கே புதுசா ஒரு பாடம் படிக்கிறதுக்கு முன்னாடி, அந்தப் பாடம் சார்ந்த விஷயங்களை பிராக்டிகலாக வீட்டுல தெரிஞ்சுக்கணும். அடுத்த நாள் கிளாஸில் ஒவ்வொரு ஸ்டூண்ட்டும் தனக்குத் தெரிஞ்ச விஷயங்களைப் பத்தி பாடம் நடத்தற மாதிரி சொல்வோம். ‘இது இப்படித்தானே நடக்கும்; எதனால் இப்படிச் சொல்றே; இது சுலபமான வழிமுறை’னு முக்கால்வாசி போர்ஷனை நாங்களே டிஸ்கஸ் பண்ணி புரிஞ்சுப்போம். எங்களுக்குத் தெரியாத, பேசாத ஃபோர்ஷனை மட்டும் டீச்சர்ஸ் சொல்லுவாங்க. அப்புறம், டெஸ்ட் அண்ட் எக்ஸாம் முறைக்காக மட்டும் புக்கைப் படிக்கிறப்போ, பாடங்கள் சுலபமாகப் புரியும். இதனால், மார்க்கை நோக்கி ஓடும் எண்ணமே வராது. எங்களின் சுயதேடல் விரிவடையும். ஸ்டேஜ் ஃபியர் சுத்தமா இருக்காது.

நம்பர் 1 மாணவியாவது எப்படி? - தங்க மீன்கள் சாதனா

அங்கே டீச்சர்ஸும் ஸ்டூடன்ட்ஸும் ரொம்பவே ஃப்ரெண்ட்லியா இருப்போம். படிப்பு பெரிய சுமையா தெரியாததால, ரொம்ப நல்லா படிச்சேன். எங்க ஸ்கூல்ல இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள்தான் படிக்கிறாங்க. அதனால், நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்க. ஒவ்வொரு மாணவரும் பத்தாம் வகுப்பு வரைக்கும் அந்த நாட்டுப் பொதுமொழியான அரபிக் பாடத்தில் பாஸ் ஆகணும். இல்லைன்னா எல்லா பாடத்திலும் ஃபெயில் ஆக்கிடுவாங்க. இந்த வருஷம் இந்த சிஸ்டத்தை கேன்சல் செய்துட்டாங்க. ஆனாலும், அரபிக் மொழியை நல்லா கத்துக்கிட்டேன்” என்கிறார் சாதனா.

“தினமும் காலையில் 7.30 மணிக்கு ஆரம்பிச்சு 1.45 மணிக்கு ஸ்கூல் முடிஞ்சுடும். மதியம் 3 மணிக்குள்ளே வீட்டுக்கு வந்துடுவேன். ஹோம்வொர்க் முடிச்சுட்டு, மியூசிக், டிராயிங், டான்ஸ்னு கவனம் செலுத்த ஆரம்பிச்சுடுவேன். துபாய் நாட்டுல படிப்பு மற்றும் கரிக்குலர் ஆக்டிவிட்டியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருஷமும் ‘Hamdan Bin Rashid Al Maktoum Award for Distinguished Academic Performance (HBRADAP)’ என்ற விருது கொடுப்பாங்க. இது, மாணவர்களுக்காக வழங்கப்படும் மிக உயரிய அரசு விருது. இந்த விருதை வாங்குறது அவ்வளவு சுலபமில்லை. பல விஷயங்களில் நம் திறமையை நிரூபிக்கணும். கடைசி மூணு வருட பள்ளிப் படிப்பில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களை வாங்கணும். அடுத்து, முதன்மையான தனித்திறமையை சமர்ப்பிக்கணும். அதுக்குத் தேசிய விருது வாங்கிய ‘தங்கமீன்கள்’ நடிப்பும், மற்ற மூணு சப் டேலன்ட்ஸுக்கு என்னுடைய டான்ஸ், சிங்கிங், டிராயிங் திறமைகளும் கைகொடுத்துச்சு. மேலும், மூணு பயனுள்ள பொழுதுபோக்குகளுக்கு அபாகஸ், வீணை வாசிப்பது, புத்தகம் வாசிப்பது உதவுச்சு.

நம்பர் 1 மாணவியாவது எப்படி? - தங்க மீன்கள் சாதனா

ஒவ்வொரு ஸ்கூலில் இருந்தும் 10 பேர் வீதம் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் ‘ஹேம்டன்’ விருதுக்கு விண்ணப்பிச்சாங்க. பல கட்டப் போட்டிகள், இன்டர்வியூ முடிஞ்சு 70 மாணவ, மாணவிகளைத் தேர்வுசெஞ்சு விருது கொடுத்தாங்க. ஆயிரத்துக்கு 994 மார்க் எடுத்து நானும் விருது வாங்க செலக்ட் ஆனேன். 10 வருஷத்துக்கு அப்புறம் எங்க ஸ்கூல் சார்பில் விருது வாங்கி, ஸ்கூலுக்குப் பெருமை சேர்த்தேன். ‘தங்கமீன்கள்’ படத்துக்காக நம்ம நாட்டு ஜனாதிபதியிடம் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது வாங்கினதுபோலவே, துபாய் நாட்டு மன்னர் கையால் விருது வாங்கினேன்’’ என வியக்கவைத்த சாதனா, இன்னும் முடியலை என்பதுபோலத் தொடர்ந்தார்.

நம்பர் 1 மாணவியாவது எப்படி? - தங்க மீன்கள் சாதனா

‘‘இதெல்லாம் என்ன பிரமாதம் அங்கிள். இன்னொரு முக்கியமான விஷயம் சொல்றேன். நம்ம ஊர்ல காலாண்டு, அரையாண்டு எக்ஸாம் முடிஞ்சு, பத்து நாள்கள்தான் லீவ் விடுவாங்க. அங்கே மாசக்கணக்கில் லீவ் விடுவாங்க. அப்படி முதல் பீரியாடிக் டெஸ்ட் முடிஞ்சு, ஒன்றரை மாசம் லீவில்தான் இப்போ சென்னை வந்திருக்கேன். இந்த லீவுல சரியா திட்டமிட்டு, அரங்கேற்றம் செய்து முடிச்சுட்டேன். டான்ஸ் மாஸ்டரான அம்மா லட்சுமிகிட்ட அஞ்சு வயசிலிருந்து கிளாசிக்கல் டான்ஸ் கத்துக்கிறேன். பூர்வீகமான சென்னையில்தான் என் முதல் அரங்கேற்றம் இருக்கணும்னு ஆசைப்பட்டேன். அதன்படி ஆகஸ்ட் 13-ம் தேதி, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் தொடர்ந்து மூணு மணி நேரம் அரங்கேற்றம் செஞ்சேன். என் சினிமா குருநாதர் ராம் அங்கிள் உள்ளிட்ட நிறைய பிரபலங்கள் வந்து வாழ்த்தினாங்க. இன்னும் படிப்பு, டான்ஸ், நடிப்புன்னு பெரிய உயரங்களை நோக்கிப் போகப்போறேன்.

‘தங்கமீன்கள்’ படத்துக்குப் பிறகு மறுபடியும் ராம் அங்கிளின் ‘பேரன்பு’ படத்தில், மம்மூட்டி அங்கிளின் பொண்ணா நடிச்சிருக்கேன். இந்தப் படமும் எல்லோருக்கும் பிடிக்கும்... பாராட்டும் வரவேற்பும் கிடைக்கும்னு நம்புறேன். அடுத்து, பத்தாம் வகுப்பு பப்ளிக் எக்ஸாமுக்குத் தயாராகிட்டிருக்கேன். படிப்பு பாதிக்காத வகையில், தொடர்ந்து பல துறைகளில் கலக்குவேன். உங்க எல்லோரின் அன்பும் ஆதரவும் இருந்தா நிச்சயம் சாதிப்பேன் ஃப்ரெண்ட்ஸ்” என அழகாகப் புன்னகைக்கிறார் சாதனா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு