Published:Updated:

ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம்! - சுட்டிகளின் திருவிழா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம்! - சுட்டிகளின் திருவிழா
ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம்! - சுட்டிகளின் திருவிழா

ச.பவித்ரா, மு.பிரசன்ன வெங்கடேஷ், படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

பிரீமியம் ஸ்டோரி

கொண்டாட்டங்களுக்குப் பெயர்போன மதுரையில், சுட்டிகளுக்காகப் பிரமாண்டமான நிகழ்ச்சி ஒன்று நடந்தால், ஆட்டம் பாட்டத்துக்குச் சொல்லவும் வேண்டுமா?

கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான சுட்டிகளின் பன்முகத் திறமைகளை ஊக்குவிக்கும் திருவிழாவாக அரங்கேறியது, ரேடியோ மிர்ச்சி 98.3 வழங்கிய ‘மிர்ச்சி கிட்டி ஃபெஸ்ட் சீசன் 6’. சுட்டி விகடன் மீடியா பார்ட்னராகக் களமிறங்க, மதுரை சோஷியல் சயின்ஸ் கல்லூரியே கலர்ஃபுல்லானது. 8 மாவட்டங்களிலிருந்து 140 பள்ளிகளின் குட்டீஸ், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் வந்திருந்தார்கள்.

ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம்! - சுட்டிகளின் திருவிழா

சோலோ டான்ஸ், குரூப் டான்ஸ், டிராமா, டிராயிங், ஸ்டோரி டெல்லிங், பேஷன் பரேட் எனப் போட்டிகள் வரிசையாக நடந்தன.

ஓவியப் போட்டியில், 500-க்கு மேற்பட்ட சுட்டிகள் பங்கேற்றனர். சோட்டா பீம், மயில், கழுகு, டோரா என விதவிதமாக வரையத் தொடங்கினார்கள். சற்று நேரத்தில், அந்த ஓவியங்கள் எல்லாம் உயிர்பெற்று அந்த அரங்கம் முழுவதும் ஓடியாடி விளையாட ஆரம்பித்துவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.

ஃபேஷன் நிகழ்ச்சியில் ஏஞ்சல், ‘ஆட்டோகிராப்’ சேரன் - கோபிகா, அப்துல் கலாம், கிராமத்துப் பெண் என வரிசையாக வர ஆரம்பிக்க, விசில் சத்தமும் கைதட்டலும் அரங்கத்தை மெர்சலாக்கியது.

ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம்! - சுட்டிகளின் திருவிழா

பரபரப்பான இறுதி அறிவிப்பில், மதுரை குயின் மீரா இன்டர்நேஷனல் ஸ்கூல் பரிசுத்தொகை மற்றும் ரோலிங் டிராபியைத் தட்டிச்சென்றது. ரன்னர்ஸ்-அப்பாக திருநெல்வேலி இலஞ்சி பாரத் மாண்டிசோரி மற்றும் சிவகாசி, லயன்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இடம்பிடித்தன.

இயக்குநரும் நடிகருமான பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக வந்திருந்து வெற்றிபெற்ற சுட்டிகள் மற்றும் பள்ளிகளுக்குப் பரிசுக் கோப்பைகளை வழங்கினார். சுட்டிகளின் கரகோஷத்தில் அரங்கம் குலுங்கியது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு