விலங்குகளை டிவி-யில் பார்ப்பதென்றால் நமக்கு ரொம்பப் பிடிக்கும். அதையே, காட்டுக்குள் போய்ப் பார்க்கணும்னா பயப்படுவோம்தானே? ஆனால், ஸ்ரீதேவி ஆன்ட்டி அப்படி பயப்பட மாட்டாங்க... ஏன்னா அவங்க வைல்ட் போட்டோகிராபர். காட்டுக்குள் போய் போட்டோ எடுப்பது இவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசுலேர்ந்தே காட்டுக்குப் போய் வனவிலங்குகளையும் இயற்கைச் சூழலையும் புகைப்படங்கள் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இவங்களை நாங்க உலக யானைகள் தினமான ஆகஸ்ட் 12-ம் தேதி, பேட்டி எடுத்தோம்.

சுவேதா: Wild Life Photographer ஆக ஏதாவது அகாடமிக் குவாலிஃபிகேஷன் இருக்கா?

ஸ்ரீதேவி: போட்டோகிராஃபி படிக்க டிகிரி கோர்ஸ் இருக்கு. அதில் வைல்டு லைஃபுக்கான நுணுக்கங்களைச் சொல்லித் தருவாங்க.

ரத்தன் குமார்: இந்தத் துறைக்குப் பொறுமை ரொம்ப அவசியம். உங்கள் பொறுமையைச் சோதித்த விலங்கு எது?

ஸ்ரீதேவி: விலங்குகளைவிடப் பறவைகள்தான் சின்ன சத்தம் கேட்டாகூட பறந்துடும். ‘தி இந்தியன் கிரேட் பியர்டு ஹார்ன் பில்.’ அந்தப் பறவையை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அத போட்டோ எடுக்க 12 கி.மீ நடந்தோம். அட்டைப்பூச்சி காலில் ஏறிடுச்சு, ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்தே ஆகணும்னு எடுத்த போட்டோ அது.

சுவேதா: எத்தனை ஆண்டுகளாக இந்தத் துறையில் இருக்கிறீர்கள்?

ஸ்ரீதேவி: நான் முதல் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே காட்டுக்குச் செல்வேன். 2012 முதல் கேமராவுடன் தனியாகப் பயணிக்கிறேன்.

ரத்தன் குமார்: இந்தியாவில் வனவிலங்குகளைப் படம்பிடிக்க சிறந்த இடம்னு எதைச் சொல்வீர்கள்?

ஸ்ரீதேவி: இந்தியாவில் நிறைய இடம் இருக்கின்றன. ஆனைமலை, சின்னார், பந்திபூர், முதுமலை, டாப்சிலிப் ஆகியவைதான் நான் அடிக்கடி செல்லும் இடம். சமீபத்தில் போனதில் தடோபா மிகவும் பிடித்த இடம்.

சுவேதா: காட்டுக்குப் போகும்போது நாம் என்ன உடைகளை அணிய வேண்டும்?

ஸ்ரீதேவி: நாம் குளிக்காமல் போனால்கூட நல்லது. ஆனால், மணம் அதிகம் உள்ள சோப், வாசனைப் பொருள்கள் மற்றும் அடர்த்தியான வண்ணங்களில் இருக்கும் ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது.

ரத்தன் குமார்: காட்டுக்குள்ள எத்தனை நாள் தங்குவீங்க? சாப்பிட என்ன எடுத்துட்டுப் போவீங்க?

ஸ்ரீதேவி: நான் தனியா போனா பிரெட் ஜாம் எடுத்துட்டுப் போவேன். இல்லைனா வனத்துறை ஆளுங்க, அங்கு விளையும் Butter Beans, காரட் மாதிரி காய்கறிகளைத் தருவாங்க. நான், நான்கைந்து நாள்கள் அங்கேயே தங்குவேன்.

சுவேதா: இந்தத் துறையில் ரொம்ப கஷ்டம்னு எதைச் சொல்வீங்க?

ஸ்ரீதேவி: விலங்குகள் தாக்க வந்தால், அதற்கு எப்படி ரியாக்ட் பண்ணணும் என்று தெரியணும். முக்கியமா வனத்துறை அதிகாரிகளின் சப்போர்ட் வேணும்.

சுவேதா: உங்களுக்குப் பிடித்த விலங்கு எது?

ஸ்ரீதேவி: யானைதான்.

சுவேதா: உங்கள் அனுபவத்தில் யானையைப் பற்றி சுவாரஸ்யமா ஏதாச்சும் சொல்லுங்க...

ஸ்ரீதேவி: சுவாரஸ்யமா சொல்றதைவிட இன்ஃபர்மேஷனா சொல்றேன். ஆசியாவில் ஆண் யானைக்குத்தான் தந்தம் இருக்கும். ஆனால், ஆப்பிரிக்காவில் ஆண் மற்றும் பெண் யானைகள் இரண்டுக்கும் தந்தம் இருக்கும். ஆனால், இந்தியாவில் ‘மக்னா’ யானைகளுக்குத் தந்தம் கிடையாது. அதனால் அதை மற்ற யானைகள் சேர்க்காது. அதனால், அது சின்ன வயதிலிருந்தே முரண்டு பிடிக்கும். ஆனால், குட்டி யானைக்கு ஆபத்துன்னா, அதுதான் முதல்ல வரும்.

சுவேதா: நீங்க எப்படி இந்தத் துறைக்கு வந்தீங்க? யார் மூலமாக வந்தீங்க?

ஸ்ரீதேவி: முதல் காரணம் அப்பாதான். எங்க அப்பாவுக்குக் காடு ரொம்பப் பிடிக்கும். எங்க வீடு சின்னாறு காட்டுகிட்ட இருந்ததால, லீவு நாள்லகூட காட்டுக்குத்தான் போவோம்.

ரத்தன் குமார்: விலங்குகளைத் துன்புறுத்தாம இருக்க டிப்ஸ் சொல்லுங்க.

முகநூல் போன்ற வலைதளங்களில் படத்தைப் போடுவதற்காக செல்ஃபி எடுப்பது, வாகனங்களில் வேகமா போறது, அதிக ஒலி எழுப்புவது, கூச்சல் போடுவது, கல் குச்சிகளைத் தூக்கிப் போடுவது... இதையெல்லாம் செய்யவே கூடாது.

சுவேதா: வன விலங்குகளைப் பாதுகாக்க என்ன செய்யணும்?

ஸ்ரீதேவி: விலங்குகளுக்கு தேசிய அளவில் தினங்களை அறிவித்து, விழிப்பு உணர்வு ஏற்படுத்தியிருக்காங்க. புலிகள் தினம், யானைகள் தினம், ‘எர்த் டே’னு கொண்டாடுவது அதுக்குத்தான்... குழந்தைகளுக்கு வனவிலங்குகளை நேசிக்கக் கற்றுத்தரணும்.

வனத்தையும் வனவிலங்குகளைப் பற்றியும் எடுத்துச் சொன்னதற்கு ஸ்ரீதேவி ஆன்ட்டிக்கு நன்றி சொல்லி விடைபெற்றோம்.