Published:Updated:

எங்கள் ஹுரோ டின்டின் - விமர்சிக்கும் சுட்டிகள்

இர.ப்ரீத்தி தான்யராஜு

எங்கள் ஹுரோ டின்டின் - விமர்சிக்கும் சுட்டிகள்

இர.ப்ரீத்தி தான்யராஜு

Published:Updated:
##~##
எங்கள் ஹுரோ டின்டின் - விமர்சிக்கும் சுட்டிகள்

''உங்க அப்பாவும், தாத்தா வும் பிறக்கிறதுக்கு முன்னாடியே 1929-ல் பிறந்தவன் டின்டின். தாத்தா வுக்கும் நண்பனாக இருந்தான். அப்பா, அம்மாவுக்கும் நண்பனாக இருந்தான். இப்போ நமக்கும் நண்பனாக இருக்கான். அவனுக்கு மட்டும் வயசே ஆகலை.'' என்றபடி வந்தாள் அபிநயா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''காமிக்ஸாக இருக்கும்போதே கதையுடன் சேர்த்து நம்மை பரபரனு இழுத்துட்டுப் போவான். இப்போ ஸ்பீல்பெர்க் கைவண்ணத்தில் வந்து இருக்கான். சும்மா பின்னி எடுத்துட்டான்'' என்றான் குகன்ராம்.

''நீங்க இரண்டுபேரும் எதைப் பற்றி பேசிட்டு இருக்கீங்க?'' -வந்து சேர்ந்தாள் சஹானா.

''வேற எதைப்பத்தி பேசுவாங்க... 'தி அட்வென்சர் ஆஃப் டின்டின்’ படம் பற்றித்தான்.'' என்றபடி இணைந்துக்கொண்டார்கள் நிகிலேஷ்வர் மற்றும் சஞ்ஜேஷ்வர்.

''அதேதான். டின்டின்னுக்கு எப்பவும் சாகசம் செய்துட்டே இருக்கணும். ஏதாவது ஒரு புத்தகத்தில் அட்வென்சர் பத்தின விஷயம் இருந்தால், அதை ஆதி முதல் அந்தம் வரை தோண்டிப் பார்க்கக் கிளம் பிடுவான். அப்படிப்பட்ட ஆள்கிட்டே கப்பல் நிறைய இருக்கிற பொற்காசுகள் பற்றின ஒரு க்ளூ தேடி வந்தா, சும்மா இருப்பானா?'' என்றாள் அபிநயா.

எங்கள் ஹுரோ டின்டின் - விமர்சிக்கும் சுட்டிகள்

''இரு... இரு... நேற்று நாம் எல்லாம் சேர்ந்துதானே படத்தைப் பார்த்தோம். இப்போ எதுக்கு கதையைச் சொல்லிட்டு இருக்கே?'' என்று கேட்டான் குகன்ராம்.

''டேய் நாம் இப்போ பேசுறதை சுட்டி விகடன் நண்பர்களும் படிப்பாங்கடா. அவங்களுக்குச் சொல்லணும்ல. அபிநயா... நீ அபிநயத்தோடு கன்டினியூ செய்மா'' என்ற சஹானா சொல்ல, முறைத்தாள் அபிநயா.

''மிச்சத்தை நான் சொல்றேன். பழைய பொருட்கள் விற்கிற ஒரு கடையில் ஒரு குட்டிக் கப்பலை வாங்கறான் நம்ம டின்டின். அது 400 வருஷத்துக்கு முன்னாடி உருவான, இப்பவும் நிஜத்தில் இருக்கிற பெரிய கப்பலின் மினியேச்சர். அந்தப் பெரிய கப்பலில் கடற்கொள்ளையர் கொள்ளை அடிச்சுப் பதுக்கின தங்கம், வைரம், பொற்காசுகள் இருக்கிறதா சொல்லப்படுது. அந்த மினியேச்சர் கப்பலில் தான் புதையலுக்கான ஆரம்ப க்ளூ ஒளிச்சு வைக்கப்பட்டு இருக்கு. அது தெரியாமலே டின்டின் வாங்கிட்டுப் போறான். அதைத் தேடிட்டு வில்லன் சாகரின் வர்றான்...'' என்றான் நிகிலேஷ்.

எங்கள் ஹுரோ டின்டின் - விமர்சிக்கும் சுட்டிகள்

''வீட்டில் கொண்டுபோய் வெச்ச கப்பலை டின்டின் கூடவே இருக்கிற நாய் தட்டிவிட, அதில் இருக்கிற க்ளூ டேபிளுக்கு கீழே உருண்டுபோய் விழும்போது படத்தில் சூடுபிடிக்க ஆரம்பிச்சுடுது. இது தெரியாமல் டின்டின்னை க்ளூவைக் கேட்டு சாகரின் மிரட்டுறதும், டின்டின் ஒண்ணும் புரியாமல் குழம்புறதும் மேலும் பரபரப்பை ஏற்படுத்துது. அப்புறம் அந்தக் க்ளூவை வெச்சு டின்டின் செய்யும் சாகசங்கள்தான் கதை. டின்டின் புதையலைக் கண்டுபிடிச் சானா இல்லையா என்பதை வெண்திரையில் காணுங்கள். எப்படி சஸ்பென்ஸ் வெச்சு கரெக்ட்டா முடிச்சேனா?'' என்றாள் அபிநயா.          

''டி.வியில் வரும் திரை விமர்சனங்களை விடாமல் பார்க்கிறேனு தெரியுது. மூணு பெரிய கப்பல்களில் மூணு க்ளூக்கள். ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விதமான முறையில் பாதுகாக்கப்பட்டு இருக்கு. அதை எடுக்கிறதுக்கு செய்கிற ஐடியாக்கள் காமெடியும் த்ரில்லுமா கலக்குது'' என்றான் குகன்ராம்.

''கேப்டன் ஹடாக் என்ட்ரி ஆன பிறகு, கலகலப்பு உச்சத்துக்குப் போகுது. ஸ்நோவி நாய்தான் படத்தின் செகண்ட் ஹீரோ. க்ளூவை எடுக்க அந்த ஆன்ட்டி பாடும்போது காதைப் பொத்திக்கிட்டு ஸ்நோவி உருளும் காட்சிக்கு விழுந்து விழுந்து சிரிச்சேன். ஹெலிகாப்டர், கப்பல், பைக்னு ஜேம்ஸ்பாண்ட் ரேஞ்சுக்கு விதவிதமான வாகனங்களில் பறந்து டின்டின் செய்கிற சாகஸத்தை 3ஞி எஃபெக்டில் பார்க்கறது கண்கொள்ளாக் காட்சி. கத்திச் சண்டை எல்லாம் போட்டு கலக்குறான்'' என்றான் சஞ்சய்.

எங்கள் ஹுரோ டின்டின் - விமர்சிக்கும் சுட்டிகள்

''இது அனிமேஷன் மூவினு சொன்னா நம்புறது கஷ்டம். அவ்வளவு தத்ரூபமா இருக்கு. அப்பா, அம்மாகிட்டே கேட்டு ஒன்ஸ்மோர் போய் வரலாமா'' என்றாள் அபிநயா.

இதற்கு மட்டும் எல்லோருமே அபிநயாவைக் கிண்டல் செய்யாமல் 'ஓ’ போட்டு ஆதரவு அளித்தார்கள்.