ராஜா காலத்து சினிமாக்கள் என்றால், எல்லோருக்கும் பிடிக்கும். காரணம், பாய்ந்துசெல்லும் குதிரைகள், ‘ஜிலீர் ஜிலீர்’ என மோதிக்கொள்ளும் வாள்கள் எனப் பார்க்கவே விறுவிறுப்பாக இருக்கும். அன்று வீரத்தின் அடையாளமாக இருந்த வாட்சண்டை, இப்போது விளையாட்டுகளில் ஒன்றாகியிருக்கிறது. இந்த வாட்சண்டை விளையாட்டில், தேசிய அளவில் ஜொலித்துக்கொண்டிருக்கிறார், சேலத்தைச் சேர்ந்த நவீன் பாபு.

‘‘நான் குகை மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். என் அப்பா ஒரு நெசவுத் தொழிலாளி. அம்மா, அண்ணன், தங்கை என அழகான குடும்பம். என்கூட படிக்கிற நண்பர்கள் சிலர் வாள் சண்டையில் விளையாட்டுல கலந்துக்கிட்டு இந்தியா முழுக்க சுத்துவாங்க. நிறைய பரிசுகளோடு வந்து பெருமையோடு பேசுவாங்க. அதைப் பார்த்துதான் எனக்கும் அந்த விளையாட்டு மேலே ஆசை வந்துச்சு. சேலத்தில் இருக்கிற ‘வஸ்தாத் கிருஷ்ணன்’ மாஸ்டர்கிட்டே பயிற்சி எடுத்துக்கிட்டேன். அவரும், உதவிப் பயிற்சியாளர் சபரிநாத் அண்ணனும் கொடுத்த பயிற்சியும் ஊக்கமும்தான் என்னை தேசிய வீரனாக்கியிருக்கு’’ என்கிறார் நவீன் பாபு.

மாநில, தேசிய அளவிலான பல போட்டிகளில் கலந்துகொண்டுள்ள நவீன் பாபு, மண்டல அளவில் தங்கம், மாநில அளவில் வெள்ளி, தேசிய அளவில் வெண்கலம் வென்றுள்ளார்.

‘‘இந்த ஆண்டு நாசிக்கில் நடந்த தேசிய அளவிலான வாள் சண்டைப் போட்டியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து 300 பேர் கலந்துக்கிட்டாங்க. அதில், டெல்லியைச் சேர்ந்த வீரருடன் மோதி, வெண்கலப் பதக்கம் ஜெயிச்சேன். இது எனக்கு ரொம்ப உற்சாகத்தைக் கொடுத்திருக்கு. அடுத்த முறை தங்கம் ஜெயிச்சு, தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்ப்பேன். என் ஆசையையும் ஆர்வத்தையும் புரிஞ்சுக்கிட்டு, எத்தனையோ கஷ்டங்களுக்கு நடுவிலும் என்னை வாட்பயிற்சிக்கு அனுப்பும் அப்பாவுக்கும் என் குடும்பத்துக்கும் நான் செய்யப்போகும் நன்றியாக அந்தத் தங்கப்பதக்கம் இருக்கும்’’ என்கிறார் நவீன் பாபு.

வாளைச் சுழற்றுங்க பிரதர்!