பறவைகளில் பெரும்பாலானவை, மனிதர்களைப் போலவே வசிக்க இல்லம் அமைக்கின்றன. அவை உருவாக்கும் கூடுகள், நம்மை பிரமிப்பிலும் வியப்பிலும் ஆழ்த்தும். அவற்றில் ஒன்று பௌவர் (Bower) பறவை. இயற்கையின் அற்புதமான கட்டடக்கலை நிபுணர்கள் பௌவர் பறவைகள்தாம்!

பௌவர் பறவை ஆஸ்திரேலியா, பப்பூவா, நியூகினியா போன்ற இடங்களில் வாழும். இவை கூ(வீ)டு கட்டும் அற்புதக் கலையில் கைதேர்ந்தவை. இவை புதர்கள், குறு மரங்களில் கூடுகளைக் கட்டும்.
பௌவர் பறவைகளில் கூட்டைக் கட்டுபவை பெரும்பாலும் ஆண் பறவைகள்தாம்.

ஆண் பௌவர் பறவை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாதபடி, தன் மேல்விதான வீட்டை வண்ண வண்ணப் பழங்கள், பளிச்சென்று நிறமுள்ள பூக்கள், வண்ண வண்ணக் குப்பைப் பொருள்கள், கண்ணாடித்துண்டுகள், தகர மூடிகள், பிளாஸ்டிக் துண்டுகள், பைகள், கிளிப்புகள் போன்றவற்றைக் கூம்பு கூம்பாகவும், தனித் தனியாகவும் குச்சியால் வளைத்துக் கட்டும்.

வீட்டின் முகப்பில், அடுக்கி வைத்து இது போதுமா, இணையைக் கவருமா என்று அழகு பார்க்கும். சில பறவைகள் நீலம், ரோஸ், சிவப்பு, ஆரஞ்சு, பர்ப்பிள் எனச் சில குறிப்பிட்ட வண்ணக் கற்களைப் பொறுக்கி வந்து கூடுதல் அழகுபடுத்தும். சில பௌவர் பறவையின் கூடுகளில், கூஸ்பெரிப் பழங்கள், அலுமினிய மூடிகள் போன்றவைகூட இருக்கும். சில சமயம், தனது வீட்டைப் பூக்களால் மட்டுமே அற்புதமாய் அலங்கரிக்கும். சில சமயம், சில பொருள்களால் அலங்கரிக்க, அவற்றை அடுத்த பறவைக் கூட்டிலிருந்து திருடி வந்துகூட தன் கூட்டை அழகுபடுத்தும்.

அப்படி விதம் விதமான, வண்ண வண்ணமான வீடு கட்டி முடித்து அதைப் பெண் பறவைக்குக் காட்டும். பின்னர் அதன் முன் நின்று பாட்டுப் பாடி, ஆட்டம் ஆடி, மற்ற விலங்குகளின் குரலில், மனிதனின் சிரிப்பு போலவும் ‘மிமிக்ரி’ செய்து, பெண் பறவையின் கவனத்தைத் தன் வசம் ஈர்க்க அனைத்து முயற்சிகளையும் செய்யும்.

பெண் பௌவர் பறவை என்ன செய்யும் தெரியுமா? ஆண் பௌவர் வீடு கட்டி முடித்தவுடன், அது நன்றாக இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டறியும். சில பெண் பௌவர்கள், மேல்விதானம் கட்டும் முன்னே போய் நோட்டம் பார்ப்பதும் உண்டு, இன்னும் சில பெண் பௌவர்கள் அந்தப் பகுதியில் இருக்கும் அனைத்து பௌவர்களின், மேல் விதான வீடுகளையும் ஒரு முறை ரவுண்டு அடித்து லுக் விட்டபின், எந்த வீடு பிடிக்கிறதோ அந்த வீட்டுக்குள் போகும். அங்கு இணை கூடி முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து, அவற்றுக்கு உணவூட்டி, பாதுகாத்து வளர்க்கும். பொதுவாக பௌவர் பறவை ஒன்று அல்லது இரண்டு மூன்று முட்டைகள் மட்டுமே இடும்.

பௌவர் பறவைகளை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து கவனித்து இந்்தத் தகவல்களைப் பதிவு செய்துள்ளார்கள்.