Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுறா!

* பசிபிக் தீவுகளின் சில இடங்களில் சுறா மீனை வழிபடுகின்றனர். அதனால், அவற்றைப் பிடிப்பதோ, சாப்பிடுவதோ அங்கே குற்றமாகக் கருதப்படுகிறது.

சுட்டி ஸ்டார் நியூஸ்

* சுத்தியல் தலைச் சுறா (Hammerhead shark) என்கிற கொம்பன் சுறாவிலிருந்து எடுக்கும் எண்ணெயை, ஆப்பிரிக்காவில் கப்பல் கட்டப் பயன்படுத்தும் மரத்தில் தேய்ப்பார்கள். இதனால், அந்தக் கப்பல் பலமாக இருக்கும், பயணம் சிறப்பாக அமையும் என்று நம்புகின்றனர்.

* டைகர் சுறா (Tiger shark) பல் மிகவும் வலிமையானது. அது, ஓர் ஆமையின் ஓட்டினை உடைத்துவிடும்.

* ஒரு வருடத்தில் தோராயமாக 100 மில்லியன் சுறாக்கள் மனிதர்களால் கொல்லப்படுகின்றன.

* சுறாவுக்கு மனிதனுக்கு அடுத்த பெரிய எதிரி யார் தெரியுமா? இன்னொரு சுறா. ஆம்! ஒரு சுறா இன்னொரு சுறாவைச் சாப்பிடும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சுட்டி ஸ்டார் நியூஸ்

* சுறாவின் பார்வைத்திறன் மனிதர்களைக் காட்டிலும் 7 மடங்கு சக்தி வாய்ந்தது.

சுண்டைக்காய் சாப்பிடுவோம்!

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

உங்களில் எத்தனை பேர் சுண்டைக்காய் சாப்பிட்டிருக்கிறீர்கள். ‘ஐயோ... என்னிக்காவது அம்மா செஞ்சதைப் பார்த்தேன்னா, டைனிங் டேபிள் பக்கமே போக மாட்டேன்’ என்கிறீர்களா? தயவுசெய்து மாற்றிக்கொள்ளுங்கள். சுண்டைக்காயின் தாவர இயல் பெயர் solanumtorvum. இலை, வேர், காய் என முழுவதும் மருத்துவக் குணம்கொண்ட தாவரம் இது. வயிற்றுப்பூச்சி, ஆஸ்துமா, மலச்சிக்கல் எனப் பலவற்றுக்கும் சிறந்த உணவு மருந்து இது. புரதம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை அதிகம்கொண்டது சுண்டைக்காய்.

ஆஹா அருங்காட்சியகங்கள்!

சுட்டி ஸ்டார் நியூஸ்

* உலகின் முதல் உடல்கூறு அருங்காட்சியகம் எனப் பெயர் பெற்றுள்ளது நெதர்லாந்தில் இருக்கும் கோர்பஸ் அருங்காட்சியகம்   (Corpus Museum). மனித உடலின் பாகங்கள், அதன் செயல்கள், உடலமைப்பு பேணிக் காக்கும் முறைகள் ஆகியவை இங்கே தெளிவாகக் காட்சிப்படுத்தப்படுகின்றன.

* பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் அமைக்கப்பட்டிருக்கும் ஓர் அருங்காட்சியகம் வியப்பில் ஆழ்த்துகிறது. இங்கே ஃபிரிட்ஜ், தொலைக்காட்சி, சமையலறைப் பொருள்கள் என அனைத்தும் தலைகீழாக இருப்பதுபோல அமைக்கப்பட்டுள்ளன.

நாய்களுக்காக ஒரு ரேடியோ ஸ்டேஷன்!

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

நாய்களின் பொழுதுபோக்குக்காக ஜெர்மனி ரேடியோ ஸ்டேஷன் ஒன்று, 24 மணி நேரமும் பிரத்யேக இசை நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகிறது. இசை கேட்கும் நாய்கள் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஸ்டோகி என்கிறவர்தான் இந்த நிகழ்ச்சியை உருவாக்கியவர். ‘ஆரம்பத்தில் விளையாட்டாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்று எல்லோரும் நினைத்தனர். ஆனால், மூன்று மாதங்களாகத் தொடர்ந்து நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. “என் நாய் தனியாக இருந்தால் வீட்டிலுள்ள பொருள்களை உடைத்துவிடும். பயங்கரமாகக் குரைக்கும். இசையைப் போட்டுவிட்டால் அமைதியாகிவிடும். அதைப் பார்த்துதான் இந்த யோசனையை வழங்கினேன். நாய்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த ரேடியோ ஸ்டேஷன் வேகமாகப் பிரபலமாகி வருகிறது” என்கிறார் ஸ்டோகி.