Published:Updated:

சிவாஜியும் நான்தான் ரெமோவும் நான்தான்!

சிவாஜியும் நான்தான் ரெமோவும் நான்தான்!
பிரீமியம் ஸ்டோரி
சிவாஜியும் நான்தான் ரெமோவும் நான்தான்!

வி.எஸ்.சரவணன், ரா.வருண் பிரசாத்

சிவாஜியும் நான்தான் ரெமோவும் நான்தான்!

வி.எஸ்.சரவணன், ரா.வருண் பிரசாத்

Published:Updated:
சிவாஜியும் நான்தான் ரெமோவும் நான்தான்!
பிரீமியம் ஸ்டோரி
சிவாஜியும் நான்தான் ரெமோவும் நான்தான்!

‘அவதார்’ படம் பார்த்தபோது, நாமும் இதுபோல வேடம் போட்டுக்கலாமா என யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அப்படி ஓர் ஆசை சுட்டி சுசிலுக்கு வந்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கிங்ஸ் ஆஃப் காமெடி’ நிகழ்ச்சியில் ‘அவதார்’ வேடத்தில் வந்து, அசத்திப் பரிசுகளை வாங்கினார். சுசில் யார் என்று இப்போது தெரிந்திருக்குமே. ஆம்! ‘கிங்ஸ் ஆஃப் காமெடி’ நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் வென்ற சூப்பர் சுட்டி. வெற்றியைக் கொண்டாடி வரும் சுசிலை, சென்னை பெசன்ட் நகர், ‘சூப்பர் ஸ்டார் பீட்சா ஷாப்’பில் சந்தித்தோம்.

சிவாஜியும் நான்தான் ரெமோவும் நான்தான்!

திருச்சி, ராஜாஜி வித்யாலயா சி.பி.எஸ்.சி பள்ளியில் முதலாம் வகுப்பு படிக்கும் சுசில், டப்ஸ்மேஷ் வீடியோக்களை ஆர்வத்தோடு பார்ப்பார். ‘அதேபோல நானும் நடிக்கட்டுமா?’ என அம்மாவிடம் கேட்டிருக்கிறார். ‘ஓ... செய்துதான் பார்க்கலாமே!’ என அம்மா பச்சைக்கொடி காட்ட, சுறுசுறுப்புடன் நடிக்க ஆரம்பித்தார். சொன்னால் நம்புவீர்களா? சுசில் இதுவரை நடித்திருக்கும் டப்ஸ்மேஷ் வீடியோக்களின் எண்ணிக்கை முந்நூற்றுக்கும்மேலே. நம் சீனியர் சுட்டி ஸ்டார் ராஜகணேஷ் இயக்கிய ‘மனித நேயம் எனும் குறும்படத்திலும் சுசில் நடித்திருக்கிறார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தமிழ்நாடு எங்கும் போராட்டம் நடந்தது நினைவிருக்கா? அப்போது, திருச்சியில் நடந்த போராட்டத்தில் சுசிலும் கலந்துகொண்டிருக்கிறார். இந்த அறிமுகம் போதுமல்லவா? இனி, ‘கிங்ஸ் ஆஃப் காமெடி’க்குப் போகலாம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிவாஜியும் நான்தான் ரெமோவும் நான்தான்!

“விஜய் டிவியில் புதுசா ஒரு காமெடி நிகழ்ச்சிக்காக ஆடிஷன் நடக்குதுனு கேள்விப்பட்டோம். அதற்காகச் சுசிலை அழைச்சுட்டுப் போனோம். அங்கே நிறைய குழந்தைங்க வந்திருந்தாங்க. ஒவ்வொருத்தராக பெர்ஃபாமன்ஸ் செய்துகாட்டினாங்க. சுசிலையும் ஐந்தாறுமுறை பெர்ஃபாமன்ஸ் பண்ணச் சொன்னாங்க. சுசில் டயலாக்கை மனப்பாடமாகப் பேசிடுவான். ஆனால், மாடுலேஷனில்தான் கொஞ்சம் பிரச்னை இருந்துச்சு. உதவி இயக்குநர்கள் சொல்லிக்கொடுத்ததை டக்னு பிடிச்சுக்கிட்டான்” எனப் பெருமையுடன் சொல்கிறார் சுசிலின் அப்பா பாஸ்கரன்.

அந்த நிகழ்ச்சியில் சுசில் எப்பவுமே ஹீரோ கெட்டப்தான் போட்டிருக்கிறார். ஒருமுறை பெண் வேடமும்போட்டு அசத்தியிருக்கிறார். அதுக்கு ஒரு காரணம் இருக்கிறதாம். அதை, சுசில் அம்மா ஆர்த்தி சொல்கிறார்.

‘`சுசிலுக்குப் பெண் வேடம் போட்டுப் பார்க்கிறதுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். நிறைய டப்ஸ்மாஷ் வீடியோக்களில் பெண் வேடம்போட்டு நடிச்சிருக்கான். அதனால், சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ நர்ஸ் மாதிரி நடிக்கவெச்சோம். பெண் கெட்டப் போடறதுகூட ஈஸி. ஆனால், பெண் குரலில் பேசறது சவாலான விஷயம். சுசில் அதையும் அழகா பேசி அசத்தினான். எம்.ஜி.ஆர், ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன் என ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு கெட்டப்ல வருவான். நடிகர் விஜய் மாதிரி நடிச்சதைப் பார்த்த ரோபோ சங்கர், ‘இந்த நிகழ்ச்சியின் இளைய தளபதி நீதான் சுசில்’னு சொன்னார். அவரிடம் பத்து முறைக்கும் அதிகமா கிஃப்ட் வாங்கியிருக்கான். சுசில் ஃபைனலில் நடிச்சது எங்களால் மறக்கவே முடியாத நிமிடங்கள்’’ என்கிறார் அம்மா ஆர்த்தி.

சிவாஜியும் நான்தான் ரெமோவும் நான்தான்!

‘‘ரொம்பக் கஷ்டப்பட்டு ஃபைனலுக்கு வந்தாச்சு. எல்லோருமே சூப்பராக நடிப்பாங்க. சுசிலை வித்தியாசமாக என்ன செய்யவைக்கலாம் என யோசித்தோம். சுசில்கிட்ட இருக்கிற மிமிக்ரி திறமையைவெச்சு 16 விதமான குரல்களில் பேசவைக்க பிளான் பண்ணினோம். ‘ஆளவந்தான்’ கமல், ‘தெனாலி’ கமல், ‘சிவாஜி’ ரஜினி, விஜயகாந்த், அஜித், விஜய், சிங்கம்புலி, பவர் ஸ்டார் சீனிவாசன் என வரிசையாகப் பேசி முடிச்சதும், பார்வையாளர்களோடு ஜட்ஜஸ் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினாங்க.

சிவாஜியும் நான்தான் ரெமோவும் நான்தான்!

மிமிக்கிரி பண்றது ரொம்பவே சவாலானது. ரொம்ப நேரம் பேசிட்டே இருந்தால், தொண்டையைக் கட்டிக்கும். வெந்நீரைக் குடிச்சுட்டு, பிராக்டீஸ் பண்ணுவான். அந்த உழைப்புக்குப் பயன் கிடைச்சு, டைட்டிலை வின் பண்ணியிருக்கான். இந்த வெற்றிக்கு முக்கியமா ரெண்டு பேருக்கு நன்றி சொல்லணும் ஆல்டம் மற்றும் கியான் என்கிற அவங்கதான் சுசிலுக்கு சூப்பரா பயிற்சி கொடுத்தாங்க’’ என்றபடிச் சுசிலை அணைத்து முத்தம் கொடுத்தார்.

சுசிலும் அம்மாக்கு ஒரு முத்தம் கொடுக்க, ‘‘அப்போ எனக்கு இல்லியா?’’ என அப்பா கேட்டதும், ஓடிச்சென்று அவருக்கும் ஒரு முத்தம் கொடுத்தார் சுசில்.

சிவாஜியும் நான்தான் ரெமோவும் நான்தான்!

“சுசில் இவ்வளவு பெரிய வெற்றி கிடைச்சிருக்கு, உங்க ஃப்ரெண்ட்ஸ் என்ன சொல்றாங்க?’ என்று கேட்க, ‘‘ஸ்கூலில் டீச்சர்ஸ், ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் பாராட்டினாங்க. அதை விடுங்க... இப்போ, ரஜினி அங்கிள் மாதிரி ஸ்டைல் பண்ணவா?” என்று கேட்டுவிட்டு, “பாஸ்... மொட்டை பாஸ்” என்றவாறு தலையில் விரலால் தாளம் போட்டார்.

சுசிலின் பயணம், சினிமாவிலும் தொடரப்போகிறது. வாழ்த்துகள் சுசில்!