Published:Updated:

பேட்மின்டன் புயல்!

பேட்மின்டன் புயல்!
பிரீமியம் ஸ்டோரி
பேட்மின்டன் புயல்!

மு.பிரதீப்கிருஷ்ணா

பேட்மின்டன் புயல்!

மு.பிரதீப்கிருஷ்ணா

Published:Updated:
பேட்மின்டன் புயல்!
பிரீமியம் ஸ்டோரி
பேட்மின்டன் புயல்!
பேட்மின்டன் புயல்!

லிம்பிக் வரலாற்றில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையைப் படைத்தவர் பி.வி.சிந்து. அதுமட்டுமல்ல, ஒலிம்பிக்கில் இளம் வயதில் பதக்கம் வென்ற இந்தியப் பெண்ணும் இவர்தான். 22 வயதுதான் ஆகிறது. ஆனால், எண்ணற்ற சாதனைகள். இன்று பலகோடிப் பெண்களுக்கு இன்ஸ்பிரேஷன். இந்த வெற்றிகளுக்குக் காரணம் சிறுவயதில் இருந்தே சிந்துவுக்குள் இருந்த விடாமுயற்சியும்பெர்ஃபெக்‌ஷனும்தான்.

1995-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தார் சிந்து. அவரது அப்பா பி.வி.ரமணா, அம்மா விஜயா இருவரும் வாலிபால் பிளேயர்கள். ரமணா, அர்ஜுனா விருது வாங்கியவர். அக்கா திவ்யா ஹேண்ட்பால் பிளேயர். இப்படி விளையாட்டுக் குடும்பத்தில் பிறந்த சிந்து இன்று ஸ்போர்ட்ஸ் ஸ்டார் ஆனதில் ஆச்சர்யமில்லை. ஆனால் இவர் தேர்ந்தெடுத்தது வாலிபால் அல்ல. பேட்மின்டன். ஆறு வயதிலேயே பேட்மின்டன் ராக்கெட்டைக் கையில் பிடிக்கத் தொடங்கினார். விளைவு, தன் தந்தை பல ஆண்டுகள் கழித்து வாங்கிய அர்ஜுனா விருதை, 19 வயதிலேயே பெற்றார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்காட்லாந்தில் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. பெண்கள் பிரிவு ஃபைனலில் சிந்துவும் ஜப்பானின் நசோமியும் மோதினார்கள். ஒவ்வொரு செட்டும் கடைசி வரை இழுபறியாகவே நீடித்தது.

110 நிமிடங்கள். பேட்மின்டன் வரலாற்றின் இரண்டாவது நீண்ட நேரம் நடைபெற்ற போட்டி இது. ஆனால் முடிவில் சிந்து தோல்வியைத் தழுவுகிறார். இப்போட்டியை நேரில் பார்த்த சாய்னா நேவால், கோபிசந்திடம், “இந்தப் போட்டியைப் பார்த்ததிலேயே என் எனர்ஜியை முழுவதுமாய் இழந்துவிட்டேன். அவ்வளவு சிறப்பாகச் சிந்து விடாமல் போராடினார்” என்று சிந்துவைப் பாராட்டினார்.

பேட்மின்டன் புயல்!

அந்தப் போட்டி தந்த நம்பிக்கைதான், அடுத்த ஒரே மாதத்தில் நசோமியை வீழ்த்திக் கொரிய ஓப்பன் பட்டத்தைச் சிந்து வெல்லக் காரணம். ‘‘சிந்து எப்பொழுதும் பின்வாங்க மாட்டார். போராடிக்கொண்டே இருப்பார். அதுதான் அவரது மிகப்பெரிய பலம்’’ என்று அவரது பயிற்சியாளர் கோபிசந்த் கூறுகிறார். அவ்வளவு மனதிடம் படைத்தவர் அவர். சிறு வயதில் இந்தியன் ரயில்வே இன்ஸ்டிட்யூட்டிலிருந்த பேட்மின்டன் அகாடெமியில் சிந்துவின் பயிற்சி தொடங்கியது. அடுத்து... ‘ஆல் இங்கிலாந்து பேட்மின்டன்’ தொடரில் கோபிசந்த் அசத்தியதைப் பார்த்த சிந்துவுக்கு, அவரிடம் பயிற்சிபெற வேண்டும் என்ற ஆசை. கோபிசந்தின் அகாடெமி வீட்டிலிருந்து 56 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அதனால் சிந்து தயங்கவில்லை. தினமும் அவ்வளவு தூரம் பயணித்தார். ஒருநாள் கூடத் தாமதம் ஆகாமல் பயிற்சிக்குச் செல்வார். அந்த அர்ப்பணிப்பு தான் சிந்துவை இன்று சாம்பியனாக்கியுள்ளது!

2016 ஒலிம்பிக் போட்டியில் பல முன்னணி வீராங்கனைகளை வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் சிந்து. வழக்கம்போல் பின்வாங்காத போராட்டம். ஆனால், முடிவு தோல்வி. தேசத்துக்காக வெள்ளிப் பதக்கம் கொண்டு வந்தார் 21 வயதே ஆன சிந்து. அந்த வெள்ளிப் பதக்கத்துக்கான அவரது உழைப்பு பாராட்டுதலுக்குரியது.

பொதுவாக விளையாட்டில் பிஸியானதும் படிப்பைப் பாதிலேயே நிறுத்திவிடுவார்கள். காரணம், பிஸி  ஷெட்யூலுக்கு நடுவே படிப்பது கஷ்டம். சிந்துவும் ஒன்பதாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்த வேண்டியதாயிற்று. இருந்தாலும் தொலைதூரக் கல்விமூலம் பள்ளிப் படிப்பை முடித்தார். கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்றும் ஆசை. St.Ann's கல்லூரியில் சேர்ந்து பி.காம் படித்தார். அடுத்ததாக MBA அதே கல்லூரியில் சேர்ந்தார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று அசத்திய பிறகும்கூட படிப்பை முடிப்பதில் ஆர்வம் காட்டி, சமீபத்தில் இறுதித் தேர்வும் எழுதியுள்ளார். தான் ஆர்வம் கொண்டிருக்கும் அனைத்துத் துறைகளிலும் சிந்து முழு அர்ப்பணிப்பைச் செலுத்தியுள்ளார். அதுவே அவரது இந்த அசாத்திய வளர்ச்சிக்குக் காரணம்.

சிந்துவின் அடுத்த இலக்கு ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் தங்கத்தை வெல்வதுதான்...

வாழ்த்துகள் சிந்து!