Published:Updated:

பற்களின் வரலாறு!

பற்களின் வரலாறு!
பிரீமியம் ஸ்டோரி
பற்களின் வரலாறு!

சோ.மோகனா

பற்களின் வரலாறு!

சோ.மோகனா

Published:Updated:
பற்களின் வரலாறு!
பிரீமியம் ஸ்டோரி
பற்களின் வரலாறு!

ம் முகத்துக்கு அழகு தருவது எது? நிச்சயமாகப் புன்னகைதான். ஒவ்வொரு புன்னகையும், விலை மதிப்பற்றது. அழகாகச் சிரிக்கும் முகம்தான் எல்லோராலும் நினைவு கூறப்படும். 5 மாதக் குழந்தைகூட, நீங்கள் சிரித்துக்கொண்டிருந்தால் மட்டுமே, உங்களை நினைவில் வைத்துக்கொள்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
    
பல்லுக்கு வயது 530 மில்லியன் ஆண்டுகள்

 பல் உருவானது உணவை அரைத்து விழுங்கவும் உங்களின் சீரணத்தை எளிமைப்படுத்தவும்தான். ஒவ்வொரு விலங்குக்கும் ஒவ்வொரு வகை பல் இருக்கிறது. அவை பரிணாமத்தில் பல்வேறு காலகட்டத்தில் உருவானவை.  பல் உருவானது முதன்முதலில் முதுகெலும்பிகளுக்குத்தான், அதுவும், மீன்களுக்குத்தான். பற்கள் இருக்க வேண்டுமென்றால் தாடை இருக்க வேண்டுமல்லவா? ஆனால் தொடக்கத்தில் தாடையில்லா மீன்களும் இருந்தன. காலப்போக்கில் மீன்களுக்குத் தாடை வந்தது. அதில்தான், பற்கள் என்ற அமைப்பு சுமார் 530 மில்லியன் ஆண்டுகளுக்குமுன், கேம்பிரியன் (Cambrian Period) காலத்தில் உருவாகிப் பரிணமித்தது. ஆனால் இந்த பல்லைப் பளபளவென்று மினுக்க வைத்துக் கொண்டிருக்கும் எனாமல் பகுதி, சுமார் 400 மில்லியன் ஆண்டுகளுக்குமுன், மீனின் செதிலிலிருந்துதான் உருவானது. நம் உடலில் உள்ள  மிகப்பலமான பொருள் எனாமல்தான். 

பற்களின் வரலாறு!

பாயசத்துக்கேற்ற பல்!

 சாப்பாட்டுக்கென்றே தனித்தனியா பல் உண்டாமே?  நாம சாப்பிடுகிற சாப்பாட்டுக்குத் தகுந்த மாதிரிதான் நமக்கு இருக்கிற பல் அமைப்பும். தாவரங்களைச் சாப்பிட என்றால் அதனை அரைத்துச் சாப்பிட வேண்டும். அதற்காக அவர்களுக்குப் பலமான, தட்டையான, அகலமான கடைவாய்ப் பற்கள் வேண்டும். இவர்களுக்குக் கிழிக்கும் கோரைப்பல்/சிங்கப்பல் தேவையே இல்லை. இறைச்சி மட்டுமே சாப்பிடுபவர்களா, உங்களுக்கு அதைக் கிழித்துச் சாப்பிடும்படியான கோரைப்பல்/சிங்கப்பல் நிச்சயம்  வேண்டும். உங்கள் உணவுக்குத் தகுந்த மாதிரிதானே பல்லின் அமைப்பும் வகையும். இரண்டையும் உண்பவர்கள் என்றால், வெட்டும் பல் (Incosors), கோரைப்பல் மற்றும் கடைவாய்ப்பல் என இந்த மூன்று வகைப் பற்களுமே வேண்டும்.

பற்களின் வழியே வரலாறு

 நாம் எப்படிச் சாப்பிட்டோம், என்ன சாப்பிட்டோம், என்ன மாதிரி வாழ்ந்தோம் என்ற நமது முன்னாள் சரித்திரம் எல்லாமே, இப்போது நமக்கு இருக்கிற இந்தப் பற்கள் வழியாகத் தெரியும்!   நமது உணவு விஷயத்தை நம் பற்கள் அறிவியல், பரிணாம ரீதியாகப் புட்டுப் புட்டு வைத்துவிட்டன.

 பல்லின் கண்டுபிடிப்பும், மனித நகர்வும்  தென் சீனாவின் டாசியன் பகுதியில் (Daoxian Region of Southern China) ஒரு பெரிய சுண்ணாம்புப் பாறைக் குகைக்குள் புதைபடிமமாக 47 மனிதப் பற்கள் கிடைத்தன. அவற்றின்மூலம் மனிதன் ஆப்பிரிக்காவிலிருந்து நகர்ந்து ஆசியா நோக்கிச் சென்றதற்கான சான்று கிடைத்துள்ளது. சுமார் 20,000 ஆண்டுகளுக்குமுன்பே மனிதன் ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டுப் பயணப்படத் தொடங்கிவிட்டான் என்பதை இதன்மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பற்களின் வரலாறு!

முதல் பயணம்

 மேலும் அங்கு கிடைத்துள்ள பற்களின் அமைப்பு புதிய நவீன மனிதன் போன்று இருந்தாலும், அவை பழையவையே என்பதும் தெரிந்தது. அத்துடன் அங்கு குகையின் சுண்ணாம்புச் சுவர்களை (stalagmites) யுரேனியம் மூலம் ஆராய்ந்ததில், குகைகளின் வயது 80,000 ஆண்டுகள் என்று அறியப்பட்டது. அங்கு கிடைத்த பற்களின் வயது 1,20,000 ஆண்டுகள் என்றும், மேலும் அங்குள்ள வேறு சில புதைபடிம விலங்குகள், பிலிஸ்டோசீன் காலத்தவை (Pliestocene Period) என்றும் தெரிவிக்கின்றன. அப்படியெனில், மனித இனம் ஆப்பிரிக்காவிலிருந்து இப்போது நாம் நினைத்ததைவிட, 20,000 ஆண்டுகள் முன்பே பயணப்பட்டது என்பது இதன்மூலம் தெரிகிறது.
 
இதிலிருந்து நமக்குக் கிடைக்கும் இன்னொரு முக்கியமான தகவல், என்ன தெரியுமா? மனிதன் ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பி, அருகிலுள்ள ஐரோப்பா செல்லாமல், நேராக ஆசியா வந்துவிட்டான். பின்னரே ஐரோப்பா சென்றிருக்கிறான். காரணம் அங்குள்ள மக்கள் தொகை நெருக்கடியும் உணவுக்கான போட்டியுமாகக்கூட இருக்கலாம்.

பற்கள் சில சொற்கள்

* முதலைகளின் பற்களின் எண்ணிக்கை  3,000.

* குழந்தைகளின் தாடையில் தாற்காலிகப் பல் மற்றும் நிரந்தரப் பல் என இரண்டு வரிசையில் பற்கள் இருக்கும்.

* நார்வேல் என்ற திமிங்கலத்தின் கொம்பு, நிஜமாகவே பல்தான்.

* பொதுவாக, நிறைய பேருக்குப் பல் கீழே விழுவதுபோல் கனவு வருமாம்.

* யானையின் தந்தம் என்பது அதன் முன் வெட்டும் பற்களே.

* 19-ம் நூற்றாண்டில் இறந்துபோன போர்வீரர்களிடமிருந்து பல் எடுக்கப்பட்டு மற்றவர்களுக்குப் பொருத்தப்பட்டது.