Published:Updated:

அழிய விடல் ஆகாது பாப்பா! - இந்திய காண்டாமிருகம்

அழிய விடல் ஆகாது பாப்பா! - இந்திய காண்டாமிருகம்
பிரீமியம் ஸ்டோரி
அழிய விடல் ஆகாது பாப்பா! - இந்திய காண்டாமிருகம்

ஆயிஷா இரா.நடராசன்

அழிய விடல் ஆகாது பாப்பா! - இந்திய காண்டாமிருகம்

ஆயிஷா இரா.நடராசன்

Published:Updated:
அழிய விடல் ஆகாது பாப்பா! - இந்திய காண்டாமிருகம்
பிரீமியம் ஸ்டோரி
அழிய விடல் ஆகாது பாப்பா! - இந்திய காண்டாமிருகம்
அழிய விடல் ஆகாது பாப்பா! - இந்திய காண்டாமிருகம்

ன்பு நண்பர்களே,

‘‘நான்தான், இந்திய காண்டாமிருகம் மிகுந்த கவலையோடு எழுதுகிறேன்.

என்னை, உங்களது தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். இன்னும் கொஞ்ச நாள்களில் எங்களது புகைப்படங்கள், எங்களைப் பற்றிய வீடியோ பதிவுகள் மட்டுமே மிஞ்சும். நாங்கள் மிஞ்சப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்களே... அது உங்களுக்குத் தெரியுமா நண்பர்களே.’’

ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களான நாங்கள், ஜாவா காண்டாமிருக வகையில் ஒரு சிற்றினமாவோம். பிரம்மபுத்ரா நதியின் கரைகளில், தக்காணப் பீடபூமியின் வடக்கே ஒருபுறம், அசாம் வரையிலும் மறுபுறம் பாகிஸ்தான் எல்லை வரையும் ஒரு காலத்தில் லட்சக்கணக்கில் நாங்கள் வாழ்ந்தோம். தடித்த தோலும் ஒற்றைக் கொம்பு மூக்குமாய், அகலமாகவும் ஆஜானுபாகுவாகவும் நிமிர்ந்து நிற்போம். ஆண், பெண் இருபால் காண்டாக்களிடையே வேறுபாடு அறிவது கடினம். இருவருக்குமே ஒற்றைக்கொம்பு உண்டு. பிறக்கும்போது கொம்பு இல்லாமல் பிறக்கும் நாங்கள், நான்கு வயதிலிருந்து படிப்படியாகக் கொம்பு முளைத்திட, பன்னிரண்டு வயதில் பெரியவர்கள் ஆகிறோம்.

அழிய விடல் ஆகாது பாப்பா! - இந்திய காண்டாமிருகம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முரட்டுத்தோலும் வலுவான குளம்புக் கால்களும், நதிபீடத்தின் சேற்றில், களிமண் புதர் படர்ந்த நீர்நிலை சார்ந்த புற்களின் பிரதேசத்தில் வாழ்ந்திட எங்களுக்காகத் தகவமைக்கப்பட்டவை. நாட்டை ஆக்கிரமித்த வெள்ளையர்கள், மிகவும் ஆபத்தான பல பொழுதுபோக்குகளைக் கொண்டிருந்தார்கள். அவற்றில், நீர்நிலைப் புதர்கள் நடுவே எங்களை வேட்டையாடுவதும் ஒன்று. பீகார் முதல் இமயமலை அடிவாரம் வரை தங்களது வீரத்தைக் காட்டி, அப்பாவிகளான எங்களை ஆயிரக்கணக்கில் சுட்டுக் கொன்றார்கள்.

இன்னொரு ஆபத்து, 1930-களில் முளைத்தது. எங்களது ஒற்றைக்கொம்பை வெட்டி எடுத்து, தூளாக அரைத்து உட்கொண்டால், 64 வகை நோய்களும் அண்டாது என்று உலகமே நம்பத் தொடங்கியது. இன்று, காண்டாக்களான எங்களது கொம்பு ஒரு கிலோ, கறுப்புச் சந்தையில் 36 லட்சம் ரூபாய். அதற்காக, நாங்கள் முற்றிலுமாய் அழித்து  ஒழிக்கப்பட்டோம்.

இரவு நேரத்திலும் - அதிகாலையிலும் மட்டுமே நாங்கள் அதிக சுறுசுறுப்பாக மேய்ச்சலில் ஈடுபடுகிறோம். மற்ற வேளைகளில், அதிகம் நீருக்குள் அமிழ்ந்திருக்கவே விரும்புவோம். நீர்நிலைகள் அழிந்துபோனதும், எங்களது பேரழிவுக்கு மற்றொரு காரணம். லட்சக்கணக்கில் இருந்தோம் என்று சொல்கிறார்கள். ராமாயணத்தில், காட்டுக்குச் செல்லும் ராமரிடம் எங்களைக் காட்டி, வேடர் தலைவர் குகன், நதிகளின் மதில்கள் என வர்ணிப்பதாக வருகிறது. அவ்வளவுக்கு இந்திய மண்ணின் கலாசாரத்தோடு கலந்திருந்த நாங்கள், இன்று சில நூறு பேராகக்  குறைந்துவிட்டோம்.

எங்களை வேட்டையாடுவது சட்டப்படிக் குற்றம். எங்களது ஒற்றைக்கொம்பு, உங்கள் நகம் எதனால் ஆனதோ, அதே கரோட்டின் எனும் வேதிப்பொருளால் ஆனதுதானே தவிர வேறொன்றுமில்லை. எனினும், எங்களது மிக ஆபத்தான நிலையை உங்களது நண்பர்களோடு பகிர்ந்து, நீங்கள்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்.

உலக வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் சிவப்பு (ஆபத்து) பட்டியலில் உள்ள எங்கள் இனத்தைக் காப்பாற்றுங்கள் என உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.
இப்படிக்கு,
இந்திய காண்டாமிருகம்,
பிரம்மபுத்ரா நதிக்கரை.