Published:Updated:

பறவைகளே... பறவைகளே!

பறவைகளே... பறவைகளே!
பிரீமியம் ஸ்டோரி
பறவைகளே... பறவைகளே!

சோ.மோகனா

பறவைகளே... பறவைகளே!

சோ.மோகனா

Published:Updated:
பறவைகளே... பறவைகளே!
பிரீமியம் ஸ்டோரி
பறவைகளே... பறவைகளே!

* உலகில் சுமார் 1,000 வகையான பறவையினங்கள் உள்ளன.

* பறவையினங்களில் மிகப் பெரியது ஆஸ்ட்ரிச் / தீக்கோழி. இதுதான் மிகப் பெரிய முட்டையை இடுவதும் மிக வேகமாக ஓடக்கூடியதும் கூட. மணிக்கு 97 கி.மீ வேகத்தில் ஓடும்.

* ரீங்காரப் பறவை என்ற ஹம்மிங் பறவையால் பின்னோக்கியும் பறக்க முடியும். இதன் முட்டை ஒரு பட்டாணி அளவுதான் இருக்கும். இதன் உருவ அளவு 5 செ.மீ மட்டுமே.

பறவைகளே... பறவைகளே!

* பறவை இனங்களில் 20 சதவிகித வகைகள் ஆண்டுதோறும் வெகு தொலைவுக்கு (Migration) வலசை போகின்றன.

* பறவை இனங்களில் 2/3 பங்கு இனங்கள் வெப்ப மண்டல மழைக்காடுகளில்தான் வாழ்கின்றன.

* பறவைகளின் இறகுகள் அதன் எலும்பைவிடக் கனமானவை.

* பெரும்பாலான பறவைகள், தன் எடையில் 20% உணவை உட்கொள்கின்றன. பறப்பதற்கான ஆற்றல் இதிலிருந்தே கிடைக்கிறது.

* பறப்பதற்காகக் குறைந்த எடையில் இருக்க வேண்டிய அவசியத்தை முன்னிட்டுப் பறவைகளின் உடலில் சிறுநீர்ப்பை இல்லை.

பறவைகளே... பறவைகளே!

* பறவைகளுக்கு எலும்புகள் முழுமையும் காற்று நிரம்பி இருக்கும்.

* ஆஸ்திரேலியன் பெலிக்கன் (Pelican) - கூழைக்கடா  எனப்படும் பறவையின் அலகுதான்  உலகிலேயே நீளமான அலகு. அலகின் நீளம் 2 அடி.

* கூழைக்கடாவின் அலகில் சுமார் 2.5 லி நீரை வைக்கலாம்.

* கத்திவால் ரீங்காரப் பறவையின் (Sword-Billed Hummingbird) நீளம் 10 செ.மீ. ஆனால், இதன் வாலின் நீளம் அதன் உடலின் நீளத்தைவிட அதிகம்.

* ஐரோப்பிய ரென் (European Wren) என்ற சிறு குருவி, பாடும்போது ஒரு நிமிடத்தில் சுமார் 700 சரளிவரிசை வகை கானம் பாடும். அதன் கீதம் சுமார் 0.5 கி.மீ தொலைவு கேட்கும்.

பறவைகளே... பறவைகளே!

* ஆந்தைக்கு இரவில் மட்டுமே பார்க்கும் திறன் உண்டு. கண்ணைக் கொஞ்சம்கூட அசைக்காமல், தலையை அப்படியே, சுமார் 360 டிகிரி சுழற்றி, தலைக்குப் பின்னால் இருப்பதைப் பார்க்கும்.

* உலகிலேயே அதிகச் சிறகுகள் உள்ள பறவை விசிலடிக்கும் அன்னம். இதன் உடலில் 2,500 இறகுகள் உள்ளன.

* தேன்சிட்டுவின் உடலின் 1000 இறகுகள் இருக்கும்.

* உலகிலேயே அதிகமாகப் பேசும் பறவை, ஆப்பிரிக்கச் சாம்பல் நிறக் கிளி. சுமார் 800 வார்த்தைகள் பேசும்.

* பொதுவாகக் கிளிகள் சுமார் 50 வார்த்தைகளே பேசும்.

* பூநாரை என்னும் ஃப்லமிங்கோ (Flamingo) பறவை ஆண்டுக்கு ஒரேமுறைதான் இணையைக் கூடும். அதன்பின் அந்த ஜோடி 50 அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகள் சேர்ந்தே வாழும்.

* உலகிலே அரிதான பறவை என்பது ஜப்பானிஸ் கொண்டை அரிவாள் மூக்கன்தான். இப்போது உலகில் மொத்தம் 50 பறவைகள் மட்டுமே வாழ்கின்றன.

பறவைகளே... பறவைகளே!

* வேப்லர் (Warbler) எனும் கதிர்க் குருவி சுமார் 80 பறவைகளைப்போல ஒப்புமை ஒலி (Mimicry)எழுப்பும்.

* லையர் பறவை (Lyre Bird). மனிதன் வாய்விட்டுக் கெக்கெலி கொட்டிச் சிரிப்பதுபோலவே சிரிக்கும்.

* பச்சை மரம்கொத்திப் பறவை ஒரு நாளைக்குச் சுமார் 2,000 எறும்புகளைக் கபளீகரம் பண்ணும். மரம்கொத்தி, மரத்தின்மேல் தன் அலகால் கொத்தி, டிரம் அடிப்பதுபோன்ற ஒலியை உண்டுபண்ணும். மற்ற மரம்கொத்திகள், எந்த மரம்கொத்தி இப்படி ஓசையை உண்டுபண்ணுகிறது என்பதையும் இனம் கண்டுகொள்ளும்.

* தூக்கணாங்குருவிகள் மரத்தின் உச்சியில் கொத்துக் கொத்தாய்க் கூடுகட்டி வாழும். சில மரத்தில் சுமார் 400 முதல் 500 கூடுகள் வரைகூட இருக்கும். சில குருவிகள் ஒரே கூட்டில் 100 ஆண்டுகள்கூட வாழ்வதுண்டு.

பறவைகளே... பறவைகளே!

தாடிக் கழுகு

உலகிலேயே தாடிக்கழுகு (Bearded Vulture) அல்லது லாம்மேர்சியேர் (Lammergeyer) என்ற பெயருடைய கழுகு, உணவைச் சாப்பிடும் முறை என்பது ஒரு சர்க்கஸ்காரனைப்போல்தான். ஆம், அதன் 85%-90% உணவு எலும்பு மஜ்ஜைதான். இதற்காக, காட்டில் மற்ற விலங்குகள் சாப்பிட்டுவிட்டுச் சென்ற ஆட்டின் தொடை எலும்புகளைப் பொறுக்குகிறது. அதைச் சுமார் 50-150 மீ உயரத்துக்கு எடுத்துச் செல்கிறது.அங்கிருந்து கீழே உள்ள பாறையின்மேல் போட்டு உடைக்கிறது. அதன் துண்டுகள் பாறையிலிருந்து சிதறி விழும்போது, சுமார் 5-8 மீட்டர் அகலத்துக்கு பறந்துத் தாவி, அனைத்துத் துண்டுகளையும், கத்தியை விழுங்கும் சர்க்கஸ்காரன்போல வாயால் கவ்விப்பிடித்து விழுங்குகிறது. அதன் சீரண மண்டலம் எதனையும் செரிக்கும் ஆற்றல் உள்ளது. ஒருக்கால் ஒரே முயற்சியில் எலும்பு உடையாவிட்டால், மீண்டும் எடுத்துச்சென்று கீழேபோட்டு உடைக்கிறது. இந்த எலும்பு உடைக்கும்  கலையைக்  கற்றுக்கொள்ள இந்தக் கழுகு 7 ஆண்டுகாலம் பயிற்சி எடுத்துக் கொள்கிறது. சில சமயம் தனது அலகால் எலும்பை எடுத்து நேரிடையாகப் பாறையில் மோதியும் உடைத்தும் உண்ணும்.

பறவைகளே... பறவைகளே!

மாலிக்கோழி

ஆஸ்திரேலிய மாலிக்கோழி ரொம்ப வித்தியாசமானது. பொதுவாகத் தனித்தே வாழும். ஆண் கோழியே பெண் கோழி முட்டையிடுவதற்கான  இடத்தைப் புதர்/மரங்களுக்கிடையே தேர்ந்தெடுத்து, குழிதோண்ட ஆரம்பிக்கும். 3 மீ அகலம், 1 மீ ஆழமுள்ள குழியைத் தன் கால்களால் குளிர்காலத்தின் கடைசியில்/வசந்தகாலத் தொடக்கத்தில் தோண்டும். அதில் குப்பைகள், இலைதழை, குச்சிகள் போன்றவற்றைப் போட்டு 0.5 மீ உயரம் ஆக்கிக் காற்றோட்டமுள்ளதாக வைக்கும். அதன்பின்னர் அதைத் தரைக்குமேல் 0.6 மீ உயரத்துக்குச் சின்னத் திட்டை அமைக்கும். அதன்பின், ஆகஸ்ட்டில் மழைபெய்து குழி நிரம்பியதும், அங்கு வந்து குழியிலுள்ள குப்பை, இலைதழை, குச்சிகளை ஒன்றாகக் கலந்து மட்க வைக்கும். அங்கு நடுவில் ஒரு முட்டைக்கான அறையை உருவாக்கும். இந்தச் சமயத்தில்மட்டும் பெண் கோழி உதவி செய்யும். குழி சூடாகும். செப்டம்பர்-பிப்ரவரிக்கு இடைப்பட்ட காலத்தில் பெண் கோழி வந்து 15-30 முட்டைகள் இடும். பின்னர்  மழை பெய்ததும், முட்டை மேட்டின்மேல் மழை நீர்பட்டு மேடு கரையும். மீண்டும் ஆண் கோழி மேட்டின் உயரத்தைக் கூட்டும். அதற்குள் வெயில் காலம் வந்துவிடும். முட்டை பொறிப்பதற்கான உஷ்ணம் சரியாக இருக்கும். ஆண் அவ்வப்போது வந்து முட்டையைப் பார்த்துக்கொள்ளும். முட்டையின் அடைக்காலம் 50-100 நாட்கள். முட்டையை உடைத்துக்கொண்டு குஞ்சு வந்ததும், அது மல்லாக்கப் படுத்துக்கொண்டே, அதன் மேலுள்ள மண்மேட்டை, தன் கால்களால் தோண்டும். 10 நிமிடத்தில் 10 செ.மீ தோண்டும். பின்னர் வெளியே வந்ததும், இறக்கையை உதறிவிட்டு நடக்கத் துவங்கிவிடும். இவைகளுக்குத் தாய் தந்தை யார் என்பதே தெரியாது. இவர்களின் பெற்றோருக்கும், குழந்தைகள் யார் என்பது தெரியாது. பறவை இனங்களில் பிறந்தவுடன் நடக்கும் ஒரே பறவை மாலிக்கோழிதான்.