Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

தினந்தோறும் தேசியகீதம்!

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

தெலங்கானா மாநிலத்தின் கரீம்நகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஜம்மிகுன்டா (Jammikunta). இங்கே தினமும் காலையில் 7.54 மணிக்குத் தேசியகீதம் ஒலிபரப்பப்படுகிறது. அப்போது கிராமத்தில் உள்ள அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவார்கள். அந்தநேரத்தில் எல்லா வேலைகளையும் நிறுத்திவிடுவார்கள். பாடல் முடிந்த பிறகே அவரவர் வேலையைத் தொடர்வார்கள். இதற்காக, கிராமத்தின் 16 இடங்களில் பெரிய ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதைக் கிராமத்தின் இளைஞர்கள் செய்துவருகிறார்கள். இந்தச் சம்பவம் அருகிலுள்ள கிராமங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

டிராகன் பழம்!

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

டிராகன் பழம் பார்ப்பதற்குக் கரடுமுரடான தோற்றம்போல இருந்தாலும் சுவையும் சத்தும் நிறைந்த பழங்களில் ஒன்று. கள்ளி இனத் தாவரத்தைச் சேர்ந்த இந்தப் பழத்தின் தாயகம், மெக்சிகோ எனப்படுகிறது. வடகிழக்கு ஆசிய நாடுகளிலும் விளைவிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில், காணப்படும் மெல்லிய கரிய விதைகள், உண்ணும்போது ‘மொறுமொறு’ என ருசியுடன் இருக்கும். இந்தப் பழத்தில் நல்ல கொழுப்புகள் அதிகம் என்பதால், ரத்தக் கொதிப்பு, இதயக்கோளாறு உள்ளவர்களுக்கு ஏற்றது. வைட்டமின் பி, புரோட்டின், கால்சியம் எனப் பல்வேறு சத்துகள் நிறைந்தது. கண்பார்வைக் கோளாறு, சிறுநீரக அடைப்பு, எலும்புக் குறைபாடு போன்றவற்றைத் தடுக்கும் ஆற்றல் இந்த முரட்டு டிராகனுக்கு உண்டு.

அசரவைக்கும் பொம்மைகள்!

நோயல் க்ரூஸ் (Noel Cruz) அமெரிக்காவின் புகழ்பெற்ற பொம்மைக் கலைஞர். ஏற்கெனவே இருக்கும் பொம்மைகளில், தன் கை வண்ணத்தால் புகழ்பெற்றவர்களின் உருவத்தைக் கொண்டுவந்து அசத்துபவர். “நான் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவன். ஓவியங்கள் வரையப் பிடிக்கும். என் வாழ்க்கையில் மனிதர்களின் முகங்களைத்தான் அதிகம் வரைந்திருக்கிறேன். 16 வயதில் விற்பனைசெய்யும் அளவுக்கு ஓவியங்களை வரைய ஆரம்பித்துவிட்டேன். குடும்பத்துடன் அமெரிக்கா வந்தபிறகு, பொம்மைகளை மறு உருவாக்கம் செய்துவருகிறேன். ஒரு பொம்மையை வாங்கியதும், அதை எந்தப் பிரபலத்தின் முகமாக மாற்றலாம் எனப் பார்ப்பேன். அந்தப் பிரபலத்தின் புகைப்படத்தைப் பார்த்து, பொம்மையில் மாற்றங்களைச் செய்வேன்’’ என்கிறார்.

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

ஏஞ்சலினா ஜோலி, எம்மா வாட்சன், ஒண்டர் வுமன், மைக்கேல் ஜாக்சன், டயானா என இவர் உருவாக்கியிருக்கும் ஒவ்வொரு பொம்மையும் அசரவைக்கிறது. இவரது பொம்மைகள் 2 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகின்றன.

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

மரணப் பூக்கள் தெரியுமா?

பூக்கள் மென்மையானவைதான். ஆனால், எல்லாப் பூக்களும் அப்படியில்லை. கால்மியா லடிஃபோலியா (v) என்பது பிங்க் மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்தப் பூவைக் கொஞ்சம் ஆழமாக முகர்ந்தாலோ வாயில் போட்டுக்கொண்டாலோ அவ்வளவுதான். வாந்தி, ஹார்ட் அட்டாக், கோமா வரைகூட அழைத்துச் சென்றுவிடும். இந்தப் பூவிலிருந்து தேனீ சேமித்த தேனைச் சாப்பிட்டாலும் ஆபத்துதான். கிழக்கு அமெரிக்காவின் பல பகுதிகளில் இந்தப் பூக்கள் காணப்படுகின்றன.

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

வீணாகும் 16 கோடி லிட்டர் குடிநீர்!

சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் இந்தியாவில் தினமும் 16 கோடி லிட்டர் குடிநீர் ஹோட்டல்களில் வீணாகிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. நமது நாட்டின் 15 முக்கிய நகரங்களில் உள்ள ஹோட்டல்களில் குடிநீர்ப் பயன்பாடு பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. இதில், ஹோட்டலுக்கு வரும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் வைக்கப்படும் குடிநீரில், மூன்றில் ஒரு பங்கை மீதம் வைத்துவிடுகிறார்கள். அதை அடுத்துவரும் வாடிக்கையாளர்களுக்குப் பயன்படுத்த முடியாமல், கீழே கொட்டப்படுகிறது. அல்லது, வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்படுகிறது. நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் உணவகங்கள் இருக்கின்றன. இதன்படி கணக்கிட்டால், இந்தியாவின் மொத்த உணவகங்களிலும் சேர்த்துத் தினமும் 16 கோடி லிட்டர் குடிநீர் வீணாகிறது என்கிறது அந்த ஆய்வு.

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

பாறைப்புற்று தெரியுமா?

கரையான் உருவாக்கும் மண் புற்றுகளைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், பாறைப்புற்றுகள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? குகைகளில் உள்ள பாறைகளில் உருவாகும். குகையின் மேற்பகுதியில் உருவாவதை Stalactite என்றும் கீழ்ப் பகுதியில் உருவாவதை Stalagmite என்றும் சொல்வார்கள். குகைகளின் மேற்பகுதியிலிருக்கும் இடுக்குகளின் வழியாகக் கசியும் நீருடன் கலக்கும் தனிமங்களால் இது உருவாகிறது.