Published:Updated:

‘ரைம்ஸ்’ வந்த கதை!

‘ரைம்ஸ்’ வந்த கதை!
பிரீமியம் ஸ்டோரி
‘ரைம்ஸ்’ வந்த கதை!

தி.ஆதிரை

‘ரைம்ஸ்’ வந்த கதை!

தி.ஆதிரை

Published:Updated:
‘ரைம்ஸ்’ வந்த கதை!
பிரீமியம் ஸ்டோரி
‘ரைம்ஸ்’ வந்த கதை!
‘ரைம்ஸ்’ வந்த கதை!

வீட்டுக்கு வரும் உறவினர்கள் “ஒரு ரைம்ஸ் சொல்லு?” என்று  கேட்பதும், சுட்டிகள் அதைப் பாடிக்காண்பிப்பதும்... சுட்டிகள் பாடுவதைப் பார்த்து உறவினர்கள் மகிழ வைக்கக் காரணமாக இருக்கும் ரைம்ஸ் உருவான விதத்தையும் அதன் பொருளையும்  தெரிந்துகொள்வோமா?

‘ரைம்ஸ்’ வந்த கதை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘Rain rain go away,
Come again another day”


இந்தப் பாடல், ராணி முதலாம் எலிசபெத்தின் ஆட்சியில் உருவானது. அந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்துக்கும் ஸ்பெயின் நாட்டுக்கும் பகை ஏற்பட்டது. 1588-ம் ஆண்டு, இங்கிலாந்துமீது தாக்குதல் நடத்த 130 போர் கப்பல்களை ஸ்பெயின் அனுப்பியது. 34 சிறிய கப்பல்களையும் 163 வணிகக் கப்பல்களையும்கொண்ட ஆங்கிலேயக் கப்பல் படை, ஸ்பெயின் கப்பல் படையைத் தோற்கடித்தது. தவிர, கடும் மழைச் சீற்றத்தால் இரண்டு கப்பல் படைகளும் சிதறடிக்கபட்டன. அதனால், மழையிடம் ‘வரவேண்டாம்’ என்று கோரிக்கை வைப்பதுபோல இந்தப் பாடல் அமைந்திருந்தது. முதன்முதலில் ‘Rain rain go to Spain’ என்றுதான் இந்தப் பாடல் எழுதப்பட்டது. பிறகுதான் ‘Rain rain go away’ ஆனது.

‘ரைம்ஸ்’ வந்த கதை!

“Baa, Baa, Black sheep, Have you any wool?”

16-ம் நூற்றாண்டு வரை இந்தப் பாடலின் கடைசி வரி ‘None for the little boy, who lives down the lane’ என்று இருந்தது. 1200-ம் ஆண்டுகளில் கம்பளிக்குப் பெரும் வணிகம் இருந்தது.

1272 -ம் ஆண்டு, இங்கிலாந்தை ஆண்ட எட்வர்ட் அரசர், கம்பளி வணிகத்துக்குக் கடும் வரியை விதித்தார். எனவே, வரிவிதிப்பின் அடுக்குகளை இந்தப் பாடல் விவரித்தது. கம்பளி விற்றுக் கிடைக்கும் பொருளின் ஒருபகுதி அரசனுக்கும் மற்றொரு பகுதி தேவாலயத்துக்கும் சென்றது. செம்மறி ஆடுகளை வளர்த்த மேய்ப்பனுக்கு ஒன்றுமே மிஞ்சவில்லை என்கிறது பாடல். 

‘ரைம்ஸ்’ வந்த கதை!

“Ringa Ringa Roses,
A Pocket full of poses”


இந்த ரைம்ஸ் இரண்டு நூற்றாண்டுகளுக்குமுன் உருவானது. 1665-ம் ஆண்டு லண்டனை பிளேக் நோய் ஆட்கொண்டிருந்தது. இந்தப் பாடலின் முதல் வரியான ‘Ringa Ringa Roses’ என்பது பிளேக் நோயால் உடலில் ஏற்பட்ட சிவப்பு வட்டங்களைக் குறிக்கிறது. பாய்ஸஸ் (Poses) என்னும் ஒரு வகையான தாவர இலைகள், நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்கும் என மக்கள் நம்பினார்கள். தங்கள் சட்டை பாக்கெட்டுகளில் அவற்றை நிரப்பிக்கொண்டார்கள். பிளேக் நோயின் அறிகுறிகளாகத் தும்மலும் இருமலும் ஏற்பட்டது (Ashes). இறுதியில் எல்லோரும் இறந்துவிட்டார்கள் (All fall down) என்கிறது பாடல்.

‘ரைம்ஸ்’ வந்த கதை!

“London Bridge is falling down, Falling down, falling down”

தேம்ஸ் நதிக்குமேல் கட்டப்பட்ட லண்டன் பிரிட்ஜ், லண்டனின் பெருமைமிகு அடையாளம். அந்த பிரிட்ஜ் முதலில் கல்லாலும் மண்ணாலும் கட்டப்பட்டது. பல இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டது. ‘வைக்கிங்’ படையெடுப்பின்போது பாலம் எரிக்கப்பட்டது. அதனால், இந்தப் பாலத்தை எப்படிப் பாதுகாப்பது என்று ராணிக்கு ஆலோசனை வழங்குவதாக இந்தப் பாடல் அமைந்திருக்கிறது.

‘பாலத்தைக் கல்லால் கட்டாதீர்கள்; இடிந்துவிடும். இரும்பால் கட்டாதீர்கள்; வளைந்துவிடும், தங்கத்தால் கட்டாதீர்கள்; திருடிவிடுவார்கள், காவலுக்கு ஆள் போடுங்கள், அவனைத் தூங்கவிடாமல் இருக்க புகைக்கும் பைப்புகளைக் கொடுங்கள்’ என்கிறது பாடல். இந்தப் பாலத்தின் உறுதியை நிலைநாட்ட, நரபலிகள் கொடுக்கப்பட்டதாம்.

‘ரைம்ஸ்’ வந்த கதை!

‘’Jack and Jill went up to the hill’

இந்தப் பாடலில் Jack எனக் குறிப்பிடப்படுபவர், 17-ம் நூற்றாண்டில் பிரான்ஸை ஆண்ட பதினான்காம் லூயிஸ். கையாடல் செய்த குற்றத்துக்காக லூயிஸ் கொல்லப்பட்டார். அவரைத் தொடர்ந்து மனைவி மேரி ஆண்டினாய்ட் என்பவரும் இறந்துபோனார். அவரை Jill எனப் பாடல் குறிப்பிடுகிறது. ஆனால், இந்த நிகழ்வுக்கு முன்னதாகவே இந்தப் பாடல் இயற்றப்பட்டது எனவும் கூறப்படுகிறது.

பாடல்கள் வழியாகத் தங்கள் வரலாற்றை அடுத்த தலைமுறைக்குச் சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள். எனவே, நம் வரலாற்றைப் பாடும் நமது மொழிப் பாடல்களைப் பாடுவோம்.